Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தமிழன் என்றொரு இனமுண்டு!
நானே கேள்வி... நானே பதில்!

" 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்

காணோம்' என்று சொன்ன பாரதி, தமிழர்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?"

"ஏன் சொல்லவில்லை. இதோ, இன்றைய தமிழர்கள் குறித்து அன்றைய பாரதியின் பாட்டு'

'சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ... கிளியே!

செம்மை மறந்தாரடீ!' "

- கே.சிவசக்தி, சேலம்.

"அ.தி.மு.க-வுக்கு இப்போது என்ன காலம்?"

"இலை உதிர் காலம்!"

- சி.என்.சீனிவாசன், சென்னை-40.

"ஒரு போராட்டத்தின் அடிப்படை எது?"

நானே கேள்வி... நானே பதில்!

"காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்தை நேரில் இருந்து பார்த்த பால்டன் என்கிற மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு பதிவு செய்கிறார், 'பெருந்துயரமும் நையாண்டியும் கலந்த ஒரு நாடகம் போல் உப்புச் சத்தியாகிரகம் அரங்கேறியது. ஆனால், அது உணர்த்த வேண்டியதை மிகச் சரியாக உணர்த்தியது. சொற்பமான 78 நபர்களைக்கொண்டு நாலு முழ வேட்டியில் காந்தி நடந்து சென்று உப்பு எடுக்கும் காட்சி என்பது, 1930-ல்கூட எதற்கும் கட்டுப்படாத ஒரு மனிதன் அதனுள் முழுமையாக மறைந்திருப்பதை நம்மால் உணர முடியும்.

காந்தி நடக்க நடக்க, அவருக்குப் பின்னால் 309 கிராம நிர்வாகிகள் தங்கள் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள, நிர்வாகம் நொறுங்கத் தொடங்கியது. சந் தோஷக் கூக்குரல்கள் ஏதும் கிடையாது. ஒழுங்குபடுத்தப்பட்ட அணிவகுப்புகள் ஏதும் கிடையாது' என்கிறார் பால்டன். போராட்டம் என்றால் ஆக்ரோஷமான கோஷங் கள், ஆவேசமான ஆர்ப்பாட்டங் கள் கொண்டவையாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை!"

- கே.வாசுகி, தேனி.

"பா.ம.க என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?"

"கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது!"

- சிக்ஸ்முகம், விஜயமங்கலம்.

"சமீபத்தில் மூளை குழம்பியது எதனால்?"

"சென்னையில் முத்துக்கிருஷ் ணன் என்ற 83 வயது முதியவர், 'தனது மகன் குமார் தனக்குச் சோறு போடுவது இல்லை' என்று காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இதை விசாரித்த காவல் துறை, 2007-ம் ஆண்டு இயற்றப்பட்ட 'முதியோர் பாது காப்புச் சட்டத்தின்' அடிப்படை யில் குமாரைக் கைது செய்து உள்ளது. என்னுடைய சந்தேகம், இப்போது குமாரின் குடும்பத்துக்கு யார் சோறு போடுவது?"

- எஸ்.மணிமொழி, மதுரை.

"கலைஞரோடு இந்திய அளவில் ஒப்பிடத்தக்க தலைவர் யார்?"

"பி.வி.நரசிம்ம ராவ். முதலில் 'நான் ஆட்சியில் இருக்கும் வரை யாராலும் பாபர் மசூதியை இடிக்க முடியாது' என்றார். அப்புறம், 'என்னது கூட்டம் கூடி விட்டதா, கூடினால் என்ன, என்னை மீறி இடிக்க முடியாது'. பிறகு, 'என்னது இடித்துவிட்டார்களா, மிகவும் வருத்தப்படு கிறேன்' என்று அறிக்கைவிட்டு, பாபர் மசூதி இடிப்பை வேடிக்கை பார்த்தவர் நரசிம்ம ராவ். நம்ம முதல்வரும், பல சென்சிட்டிவ் விஷயங்களில் 'நல்லாச் சொல் றாங்கய்யா டீட்டெய்லு'தானே?"

- பா.அரவிந்தன், மயிலாடுதுறை.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!