Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
5 கேள்விகள்

தமிழருவி மணியனிடம்...

" 'இறுதிக்கட்டப் போர் குறித்து விசாரிக்க வரும் ஐ.நா. மனித உரிமைக் குழுவை

நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்' என்று இலங்கை வெளியுறவு மந்திரி காமினி லட்சுமண் கூறியிருக்கிறாரே?"

"மனச் சான்றை முற்றாக மறந்துவிட்ட ஆசியாவின் இரு வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் ராஜபக்ஷே அரசின் பக்கம் இருக்கும் வரை, நரியின் நாட்டாண்மை நடக்கத்தான் செய்யும். ஐ.நா. சபை சர்வ அதிகாரம் படைத்த அமைப்பா, வெறும் காட்சிப் பொம்மைகளின் இருப்பா என்பது இந்த விஷயத்தில் அம்பலமாகிவிடும்!"

பழ.கருப்பையாவிடம்...

"எதற்காக உங்கள் வீடு தாக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள்?"

"ஈழத்து கருணாவுக்கும் இங்குள்ள கருணாநிதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருமே தமிழினத் துரோகிகள். இந்தத் துரோகத்தைப் பொது மேடைகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் நான் நித்தமும் சொல்லி வருகிறேன். கேட்ட கேள்விக்கு ஒழுங்காகப் பதில் சொல்லத் தெரியாத பையன், வாத்தியாரைக் கல்கொண்டு எரிவதைப்போல கருணாநிதியும் அடியாட்களை அனுப்பிக் கல்லெறிய வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் பயந்தவன் அல்ல நான். என்றும் பேசுவேன். இப்படித்தான் பேசுவேன்!"

5 கேள்விகள்

கௌதம் மேனனிடம்...

"தயாநிதி அழகிரி தயாரிக்க, அஜீத்தைவைத்து நீங்கள் இயக்குவதாக இருந்த படம் கைவிடப்பட்டுவிட்டதா?"

"அடுத்த வாரத்தில் நான் இயக்கும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும். வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நான்கைந்து ஹீரோக்களுடன் அஜீத் இணைந்து நடிக்க உள்ளார். இதுபோல் நடிகர்கள் இணைந்து நடிப்பது ஒரு இயக்குநராக எனக்கும் மிகவும் பிடித்த விஷயம். ஆனால், அடுத்து என் படத்தில் அஜீத் நடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது!"

5 கேள்விகள்

நகுலிடம்...

"ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதால்தான் உங்களுக்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லை என்பது உண்மையா?"

"ஐயையோ... கோடிக்கணக்கில் சம்பளம் கேட்க நான் என்ன ரஜினி சாரா? தற்போது சன் பிக்சர்ஸ், மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படங்களில் நடிக்க உள்ளேன்!"

ப்ரியாமணியிடம்...

" 'தயாரிப்பாளர்கள் தமிழில் நடிக்க வாய்ப்புத் தர மறுக்கிறார்கள்' என்று வருத்தப்பட்டுப் பேசி இருக்கிறீர்களே?"

"கடந்த ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 30 படங்களில் நடித்திருக்கிறேன். தேசிய விருதும் வாங்கியிருந்தாலும் கதைக்குத் தேவை என்றால், கிளாமராகவும் நடிக்கிறேன். ஆனாலும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எனக்கு நடிக்க வாய்ப்புத் தரத் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. இதை உரிமையோடு கேட்கிறேன்!"

5 கேள்விகள்
5 கேள்விகள்