Published:Updated:

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

Published:Updated:

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!  
வேல்ஸ், கலீல், செந்தில்  
வின்னர் யார்? டோனியின் கணிப்பு!
வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இந்த முறை எந்த அணி கோப்பையைத் தட்டிச் செல்லும்? சில கால்பந்து காதலர்களிடம் கேட்டோம்...

டோனி, கிரிக்கெட் வீரர்.

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

''பிரேசில்தான் என் இஷ்டம். கிரிக்கெட்டில் எப்படி இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று நினைக் கிறேனோ, அதைப்போலவே ஃபுட்பாலில் பிரேசில் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பேன். பிரேசிலின் காகா ஒரு ஸ்டைலிஷ் பிளேயர். அவர் அடிக்கும் கோல்கள் பிரேசிலை சாம்பியன் ஆக்கும்!''

தன்ராஜ் பிள்ளை, ஹாக்கி வீரர்.

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

''என் ஆதர்ஷ அணி... பிரேசில். ஆனால், இந்த முறை பிரேசில் அணியின் ஸ்டார் பிளேயர்களான ரொனால்டினோ, ரொனால்டோ இருவருமே அணியில் இல்லை. அதனால், புதிய அணிகள் அதிர்ச்சி கொடுக்கும் என்பது என் கணிப்பு. ஏனெனில், பல பெரிய அணிகளில் முக்கியமான வீரர்கள் இல்லை. இருந்தாலும்கூட, பலர் நல்ல ஃபார்மில் இல்லை. கிறிஸ்டியானோ ரொனால்டினோ மொத்த ஆட்டங்களிலும் எனர்ஜியோடு விளையாடினால் போர்ச்சுக்கல்கூட கோப்பை வாங்க வாய்ப்பு உண்டு. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை திருப்புமுனை தரும். மற்றபடி எந்த அணி கோப்பையை வெல்லும் என்று சொல்வது கடினமான விஷயம்!''

ஆர்யா, நடிகர்.

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

''இந்த முறை உலகக் கோப்பை வாய்ப்பு அர்ஜென்டினாவுக்குத்தான் உண்டு. சோர்ந்துகிடந்த அர்ஜென்டினா அணிக்கு கோச் மரடோனா புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறார். பிரேசில், இத்தாலி, பிரான்ஸ் போன்ற அணிகள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின் போன்றவை அரை இறுதி வரை வந்தாலும், அர்ஜென்டினா முன்னால் நிற்க முடியாது. அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி 10 ஆட்களுக்குச் சமம். அவர் சரியாக விளையாடினால் அர்ஜென்டினா சாம்பியன்தான்!''

விஜயன், முன்னாள் இந்தியக் கால்பந்து வீரர்

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

''இங்கிலாந்து, பிரேசில், ஸ்பெயின் இவற்றில் ஒன்றுதான் இந்த முறை கோப்பையை வெல்லும். அர்ஜென்டினாவின் புதிய கோச்சாக மரடோனா வந்திருப்பது அந்த அணிக்கு மிகப் பெரிய பாசிட்டிவ் பாயின்ட். உலகக் கோப்பைக்கு என்று சில ட்ரிக்குகளை மரடோனா உருவாக்கி, தங்கள் அணிக்கு சொல்லிக் கொடுத்திருப்பார். அர்ஜென்டினாவின் அடுத்த மரடோனா வான லயோனல் மெஸ்ஸி இந்த முறை கோப்பையைப் பெற்றுத் தருவார்!''

ரவி, போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர்

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

''விளையாடும் 32 அணிகளில் பிரேசில், ஸ்பெயின்,

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

அர்ஜென்டினா மூன்றும் எனக்குப் பிடித்தவை. இதில் பிரேசிலும் ஸ்பெயினும் ஃபைனலில் மோத அதிக வாய்ப்பு உள்ளது. பிரேசிலின் காகாவும் அர்ஜென்டினா வின் மெஸ்ஸியும்தான் பிடித்த பிளேயர்கள். இவர்கள் இருவரின் ஆட்டத்தைப் பொறுத்தே, வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்படும்!''

கிருத்திகா உதயநிதி, பத்திரிகை ஆசிரியர்

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!

''இந்த முறை பெரிய அணிகளான பிரேசில், இங்கிலாந்து, அர்ஜென்டினா ஆகியவை கோப்பையை வெல்லாது. ஸ்பெயின்தான் கோப்பையை வெல்லும் என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். எந்த நாடு உலக சாம்பியன் ஆகப்போகிறது என்று உங்களைப் போலவே நானும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்!''

வின்னர் யார்? டோனியின் கணிப்பு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism