Published:Updated:

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

Published:Updated:

நோட்டீஸ் போர்டு  
ரைட்டர்  
படங்கள்: சு.குமரேசன், கே.கார்த்திகேயன், வி.ராஜேஷ், எல்.ராஜேந்திரன்
நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோட்டீஸ் போர்டு

வலிக்குதா ஐயா!

நோட்டீஸ் போர்டு

முதுகு வலியால் துடித்து, அறுவைச் சிகிச்சை முடித்து... சக்கர நாற்காலியில்தான் அதிகமாக வலம் வருகிறார் முதல்வர் கருணாநிதி. கடந்த ஞாயிறு அன்று நடந்த உயர்மட்டக் கூட்டத்துக்கு வந்தபோது... முரசொலி மாறன் அரங்கத்தில் இருந்து நிருபர்களைச் சந்திக்கும் இடம் வரை வீல் சேர் இல்லாமல் நடந்தே வந்தார். பாதுகாவலர் பாண்டியன், உதவியாளர் நித்யா ஆகிய இருவரும் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அனைவரையும் பார்த்து மகிழ்ச்சியுடன் முதல்வர் சிரிக்க... 'வலிக்குதா ஐயா' என்று டாக்டர் கேட்க... இல்லை என்று மறுத்தார் முதல்வர்!

மலையாளத்தில் பறஞ்ச வைகோ!

நோட்டீஸ் போர்டு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைக் கையில் எடுத்து கேரளா செல்லும் பாதையில் மறியல் செய்தார் வைகோ. இதற்கு ஏராளமான கேரள நிருபர்கள் வந்திருந்தார்கள். தமிழில் உணர்ச்சி பொங்கப் பேசியவர், திடீரென்று மலையாளத்தில் பேச ஆரம்பித்தார். ''எங்களுக்குத் தண்ணீர் தேவை. உங்களுக்குத் தேவையான காய்கறி, பருப்பை நாங்கள் தருகிறோம்'' என்று அவர் சொல்ல... உற்சாகமான மலையாள சேனல்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்தன.
மறியல் செய்ததாக அவர் கைதானபோது ஓர் இடத்தில் திடீர் சலசலப்பு. உடனே, அவர் அந்த இடத்துக்குப் போய் அமைதிப்படுத்தியதைப் பார்த்த தொண்டர் ஒருவர், 'அமைதிப் புயல் வைகோ' என்று கோஷம் போட்டார். 'ஆமா, புரட்சிப் புயல், இப்ப அமைதிப் புயலா ஆகிடுச்சு' என்று வைகோவே அதை ஏற்றுக்கொண்டார். இதில் இன்னோர் ஆச்சர்யம், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மறியல் போராட்டம் நடத்தியதாக மறுநாள் 'முரசொலி' பாராட்டியிருப்பதுதான்!

தென்னாட்டுடைய படிப்பே போற்றி!

நோட்டீஸ் போர்டு

ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர் பாண்டியன், தூத்துக்குடி. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவி ஜாஸ்மின், திருநெல்வேலி. ''படிப்பில் பின்தங்கியிருந்த தென் மாவட்டம் முன்மாதிரியாக முன்னேறி வருவதற்கான நல்ல தொடக்கமாக இதனைச் சொல்கிறார்கள். சென்னையில் மிகப் பெரிய தனியார் பள்ளியில் ஆங்கில வழி படிக்கும் மாணவர்கள்தான் நன்றாகப் படித்து, மாநில முதன்மையை அடைய முடியும் என்று சொல்லப்படுவதைத் தகர்க்கும் வகையில் பாண்டியனும் ஜாஸ்மினும் பாதை வகுத்திருக்கிறார்கள்!

முத்துக்குமார்!

முத்துக்குமார் சிலையைத் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் உள்ள சாணுரப்பட்டியில் திறக்க, 'தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி' ஏற்பாடு செய்தது. முறையான அனுமதி வாங்கவில்லை என்று சொல்லி, மாவட்ட நிர்வாகம் அதற்கான அனுமதியை மறுத்திருக்கிறது. தனியார் நிலத்தில் அமைப்பதாக

நோட்டீஸ் போர்டு

இருந்தால், அனுமதி தேவை இல்லை என்ற தீர்ப்பைவைத்து வாதாடுகிறார் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன். 'தனியார் இடத்தில் சிலைவைக்க அரசிடம் அனுமதி கோரத் தேவை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு அளித்துள்ளது' என்பதை ஆதாரங்களுடன் கொடுத்து, சிலை வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணியரசன். அனுமதி தராவிட்டால், முத்துக்குமாரின் சிறு சிறு சிலைகளைச் செய்து அனைவருக்கும் வழங்கவும் முடிவெடுத்துள்ளார்கள்!

'நான் கண்ணை மூடும்போதுதான் எடுப்பார்!'

நோட்டீஸ் போர்டு

.தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் போயஸ் கார்டனில் நடந்தது. புகைப்படக்காரர்கள் படம் எடுப்பதற்காக அமைதியாக உட்கார்ந்திருந்தார் ஜெயலலிதா. டெக்கான்கிரானிக்கல் சம்பத்தைப் பார்த்ததும், 'நீங்கள் இப்போது எந்தப் பத்திரிகையில் இருக்கீங்க?' என்று கேட்டவர் வைகோ பக்கமாகத் திரும்பி, 'இவரை நான் பல வருஷமாப் பார்க்கிறேன். எல்லோரும் போட்டோ எடுக்கும்போது இவரு அமைதியா இருப்பார். யாருமே எடுக்காதப்ப தான் கேமராவை எடுப்பார். நான் கண்ணை மூடிட்டு இருக்கிறதை, முகத்தைத் துடைக்கிறதை, தண்ணீர் குடிக்கிறதை மட்டும்தான் எடுப்பார். நானும் பல வருஷமா இவரைக் கவனிக்கிறேன்' என்று சொல்லிச் சிரிக்க... என்னமோ என்று பயந்துபோன சம்பத், படம் எடுத்துவிட்டு விறுவிறுவென வெளியே வந்துவிட்டார்!

எவரெஸ்ட்டில் தமிழ் வாழ்க!

நோட்டீஸ் போர்டு

வரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்திருக்கிறார் ஒரு தமிழர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், ''2006-ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து முதன் முதலில் 'கிளிமஞ்சாரோ' சிகரத்தின் மீது ஏறினேன். அதில் மிகவும் சிரமப்பட்டேன். பிறகு, மலையேறுவதற்கான 'டெக்னிக்கல் க்ளைம்பிங்' தேவையாக இருந்தது. அதற்காக ஐரோப்பாவில் மவுன்ட் ப்ளாங்க் சிகரத்தின் மீது ஏறினேன். அதற்கு அடுத்து, நியூஸிலாந்து நாட்டில் உள்ள மவுன்ட் குக் சிகரம் மீது ஏறினேன். அதன் பிறகே எவரெஸ்ட் சிகரம் தொட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அதற்காக எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். இறுதியாக, மார்ச் 29 அன்று சிகரம் ஏறத் தொடங்கி மே 23 அன்று உச்சியை அடைந்தேன். நான் தமிழன் என்பதால் 'தமிழ் வாழ்க' என்று எழுதப்பட்ட பேனரை எடுத்துச் சென்றேன்'' என்பவரின் லட்சியம் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைப்பது!

இதைப் படிக்காதீங்க!

அந்த அம்மா, இருக்கிறவங்களுக்கே கொடுக்கலை. நீங்க என்னடான்னா இல்லாதவருக்குக் கொடுக்கிறீங்க' என்று அதிரடி மகன் சொன்னதைக் கேட்டுத்தான் பாட்டாளிக் கட்சிக்கு ஒரு ஸீட் தர மறுத்தாராம் தந்தை!

மகளுக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்ற பயத்தில் கவிதைப் பெண்ணுக்கு எம்.பி. தரக் கூடாது என்று இரும்புப் பிடி பிடித்தாராம் இரண்டாமவர்!

இவ்வளவு இறங்கிப் போய் நாமே நம்மோட தரத்தைக் குறைச்சிக்கிடணுமா?' என்று தோட்டத்துத் தலைவரிடம் கேட்டாராம் பாட்டாளி அதிரடி ஒருவர். 'பையனுக்காகத்தான் இறங்க வேண்டியிருக்கு' என்றாராம் தலைவர்!

கனவோடு வாங்கிய தியேட்டர் வளாகத்தை நல்ல விலைக்கு விற்க அம்மா முடிவெடுத்துவிட்டார். தேர்தல் செலவுக்காக இன்னும் சில வளாகங்களை விற்க முடிவெடுத்துஇருக்கிறாராம்!

புலி ஆதரவாளர் ஒருவரையே தங்களது ஆளாக உருமாற்றி இங்கே இருந்து சில ரகசியங்களை அறிந்து வருகிறதாம் சிங்கள உளவுத் துறை. அவர் மாஜி கறுப்புக் கட்சிக்காரராம்!

நோட்டீஸ் போர்டு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism