Published:Updated:

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

Published:Updated:

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!  
ப.திருமாவேலன்  
படங்கள்: பொன்.காசிராஜன், கே.கார்த்திகேயன்
எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!
எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!
எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

ஸ்ரீகாளஹஸ்தி!

கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டே மனம் உடைந்து, நொறுங்கிவிட்டது ஸ்ரீகாளஹஸ்தி!

'ராகுவும் கேதுவும் எட்டில் இருந்து ஏழுக்கு வருகிறார்... ஏழில் இருந்து எட்டைப் பார்க்கிறார்' என்று சொல்லிச் சொல்லி, தோஷம் பூசப்பட்ட மனிதர்கள் தங்களது புலம்பலைச் சொல்லி அழக் கண்டுபிடித்திருந்த இடம் இந்த ஸ்ரீகாளஹஸ்தி. கடந்த வாரத்தில் அதன் ராஜகோபுரம் மொத்தமாக நொறுங்கியதைப் பார்த்து பக்தர்கள் பதறிப்போனார்கள். சுனாமியாகச் சீறுகிறது கடல். லைலாவாக அலைகிறது காற்று. பூகம்பமாக வெடிக்கிறது பூமி. இப்படிப்பட்ட இயற்கையின் கோபம் இப்போது கோபுரங்களிலும் தெறிக்கிறது.

சீகாளத்தி என்பதுதான் அந்தத் தலத்தின் பெயர். சீ என்பது சிலந்தியையும், காளம் என்றால் பாம்பையும், அத்தி என்பது யானையையும் குறிக்கும். இம்மூன்றும் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாக ஆனதால், இப்பெயர் பெற்றதாக ஐதீகம். தென் கைலாசம் என்று இதை அழைப்பார்கள். பெண்ணாறு ஆற்றின் கிளை நதியான ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் இந்த ராஜ கோபுரத்தைக் கட்டியவர் கிருஷ்ண தேவராயர். அந்த ராஜகோபுரம் இடிந்து விழும்போது, அருகில் இருந்த வீடுகளும் கடைகளும் நொறுங்கின. ஆனால், அடிவாரத்தில் இருந்த கிருஷ்ண தேவராயர் சிலை மட்டும் அப்படியே இருந்தது. சிதறிக்கிடக்கும் கோபுரச் சிதறலை எடுத்துச் செல்லபக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது. உள்ளே புதையல்கள் இருக்கலாம் என்ற வதந்திக்கும் பஞ்சம் இல்லை.

அதைப் பார்வையிட வந்த ஆய்வாளர் வெங்கட கிருஷ்ணப் பிரசாத்திடம் கேட்டபோது, ''ஞான பிரசுரனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில் ராஜகோபுரம் 122 அடி உயரம்கொண்டது. 1988-ம் ஆண்டு இந்தக் கோபுரத்தில் இருந்த சிற்பத்தில் சிறு உடைப்பு ஏற்பட்டது. 15 லட்சம் செலவு செய்து மராமத்துப் பார்த்தார்கள். ஆனால், அது கடந்த 25-ம் தேதி இரண்டாகப் பிளவுபட்டது. கோபுரத்தின்அடித் தளத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கோபுரம் பலவீனமாக இருந் திருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் களிமண், சுண்ணாம்பால் கட்டப்பட்ட கோபுரம். இடித் தாக்கு தல், அதிகப்படியான காற்று, புயல் போன்றவற்றால் கோபுரங்கள் சேதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்தக் கோபுரம் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை'' என்று வருத்தப்படுகிறார்.

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

ஜோதிடரும் ஆய்வாளருமான டாக்டர் வித்யாதரனைக் கேட்டபோது, ''பஞ்ச வாயு ஸ்தலங்களில் காளஹஸ்தி முக்கியமானது. ஒரு பக்கம் மலையும், இன்னொரு பக்கம் ஆறும் இருக்கும் பிரசித்திபெற்ற அமைப்பு இந்தக் கோயிலுக்கு உண்டு. இதுபோன்ற ஸ்தலங்களில் திருக்குளம் இருக்க வேண்டும். வரும் பக்தர்கள் பாவங்களைக் கழுவுவார்கள். அந்தத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, புது நீர் பாய்ச்சப்படும். அதாவது தோஷங்கள் தேங்காமல் வெளியேற்றப்படும். அப்படிப்பட்ட திருக்குளம் இங்கு இல்லை. அதனால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோபுரக் கலசம் விழுந்தாலே, ஆள்வோருக்கு ஆகாது என்பார்கள். இப்போது கோபுரமே விழுந்து இருக்கிறது. ஆந்திர அரசியல்வாதிகள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது. இதனுடைய பிரதிபலிப்பு 80 கி.மீ. தூரம் வரை இருக்கும் என்பது ஐதீகம்'' என்றும் பயமுறுத்துகிறார். காள ஹஸ்தியில் இருந்து சென்னை எத்தனை கி.மீ. என்று பார்க்க வேண்டும்.

குமரிக் கடலோரம் 133 அடி திருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதியிடம் கேட்டபோது, ''பண்டைய கோயில்களும், அதனுள் உறையும் சிற்பங்களும், புராதனக் கட்டடங்களும், நமது கலைச் சிறப்பையும் கலாசாரத்தையும் பறைசாற்றுபவை. அதைத் தக்க முறையில் பாதுகாக்காவிட்டால், காளஹஸ்தி

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!

கோபுரத்துக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். கோபுரத்தின் மேல் பாகத்தில் விரிசல் காணப்பட்டால் மேற்புர பாரம் அதிகமாக உள்ளது என்றும் அடிப்பாகத்தில் விரிசல் என்றால், அஸ்திவாரத்தில் தவறு என்றும் சொல்லலாம். கட்டடம் ஒரு கணக்குக்கு உட்பட்டுச் சரியாக இருந்தால், தவறுநேர வாய்ப்பு இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தஞ்சைக் கோபுரம் இன்னும் அப்படியே இருப்பதற்கு அதுதான் காரணம்.

எவ்வளவு நல்ல பொருளாக இருந்தாலும் பராமரிப்பு இல்லையெனில் பாழாகிவிடும். கோயில்களையும் கோபுரங்களையும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது மராமத்து மற்றும் பராமரிப்புப் பணிகளைப் பார்க்க வேண்டும். இந்தப் பணிகளை ஒப்பந்த முறைப்படி கட்டுமானப் பணியாளர்களிடம் விடாமல், இதற்கெனப் படித்துத் தேர்ந்த ஸ்தபதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். நான் சிற்பக் கல்லூரி முதல்வராக இருந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. அதற்கான தீர்வை நான் சொன்னேன். ஆனால், சில நிர்வாகக் குளறுபடிகளால் அதன்படி கட்டப் படவில்லை. கோபுரத்தின் பாரம்பரிய அழகே போய்விட்டது. பொதுமக்களும், புராதனச் சின்னங்களை முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும். ஆணிய£ல் பெயர்களைச் செதுக்குவதில் ஆரம்பித்து, சிலைகளின் உறுப்புகளை உடைப்பது வரை அவர்கள் செய்யும் தவறுகளும் அதிகம்'' என்கிறார்.

கோபுர தரிசனத்தைப் பாப விமோசனமாகச் சொல்வார்கள். அதையே பாவம் செய்ய விட்டுவிடக் கூடாது!

எச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism