'இன்றைய தலைமுறையினரிடம் மறைந்து வரும் தாலாட்டுகளை மலரும் நினைவுகளாக இங்கே மறுபதிவு செய்கிறேன். என் தாயார், மாமியார் மற்றும் உறவினர்களின் வழி எனக்கும் கிடைத்த வரம் இந்த அற்புதத் தாலாட்டுகள்' என்று வலைப்பூவின் முகப்பு சொல்கிறது. ஒரு குழந்தை முதலில் கேட்கும் இசை வடிவமான தாலாட்டினைக் கிட்டத்தட்ட தொலைத்துவிட்ட இந்நாளில், 'சங்கு முழங்க என் கண்ணே! சமுத்திரத்தில் மீன் முழங்க, எங்கே முழங்குதுன்னு சாமி ஏணிவெச்சுப் பார்த்தாராம்'; 'எங்கிருந்தான் எங்கிருந்தான், இது நெடுநாள் எங்கிருந்தான், மாசி மறைஞ்சிருந்தான், மழைமேகம் சூழ்ந்திருந்தான், திங்கள் மறைஞ்சிருந்தான் தேவர்கள் கூடயிருந்தான்' என்று தமிழ் கொஞ்சி விளையாடும் பதிவுகள் கருப்பட்டி இனிப்பு!
பாணா காத்தாடி
இசை: யுவன்ஷங்கர் ராஜா வெளியீடு: திங்க் மியூஸிக் விலை ரூ.99
|