Published:Updated:

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...

Published:Updated:

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...  
UFX  
கி.கார்த்திகேயன்,படங்கள் : பொன்.காசிராஜன்
பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...
பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...
பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...

''ஷெரீப்... இது நம்மோட முதல் போட்டோஷூட். அதனால், டாப்லெஸ் கட்டாயம். சீக்கிரம் சட்டையைக் கழட்டிட்டு வா!'' என்று புருவம் திருத்தியபடியே ரோச்சல் அவசரப்படுத்த... ஷெரீப் முகத்தில் ஏ.சி. குளிர்ச்சியை மீறி வியர்வை. ''என்ன

பையா... ரொம்ப யோசிக்கிறே? அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் ஜகஜம். இப்போ நீ கழட்டுறியா... இல்லை நாங்களே கை வைக்கட்டுமா?'' என்று ரோச்சல் கிளம்ப, மேக்கப் அறைக்குள் தலைமறைவானார் ஷெரீப். ''ஷெரீப் தப்பிச்சுட்டான். இனி அவனை உஷார் பண்ண முடியாது. நாங்க டாப்லெஸ் ட்ரை பண்ணட்டுமா?'' என்று சூரியா கண் சிமிட்ட... அந்த ஏரியா ஏன் 'அன்லிமிடெட் ஃபன் ஸோன்' என்பதற்கான காரணங்கள் விளங்க ஆரம்பித்தன.

'UFX (unlimited fun xone)' - இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சேர்க்கை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பேசி, செப்பி, மாட்லாடி, சம்சாரிக்கவிருக்கும் தொலைக்காட்சி. ''இதுவரை ஒரு டி.வி. சேனலில் நீங்கள் பார்க்காத ஆச்சர்யங்கள், கொண்டாட்டங்களுக்கு யு.எஃப்.எக்ஸ் உத்தரவாதம் தரும். ஏன்னா, நாங்கதான் இந்தியாவின் முதல் லைஃப்ஸ்டைல், மியூஸிக் சேனல்.

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...

தென்னிந்தியா முழுக்க ஒரு டிஷ்ஷின் கீழ் கொண்டுவரும் முயற்சி!'' என்று அறிமுகம் கொடுத்தது பலோமா. அட, பலோமோ இனி யு.எஃப்.எக்ஸ் ஆளு.! இவரது உடன்பிறந்த தங்கை ரோச்சலும் இங்கு களத்தில்.

''எங்க டார்கெட் 18 முதல் 35 வயது வரையுள்ள அல்லது அந்த வயதுக்கான மனநிலை கொண்டவர்கள். இசை, நடனம், சினிமா, டெக்னாலஜி, காமெடி, உணவு வகைகள், ஆடைகள்னு எல்லாமே ரிமோட்டின் ஒரே பட்டனில் உங்க வீட்டுக்குள் வரும். நாலு மொழிகளில் தமிழுக்குக் கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம் இருக்கும். மத்த எல்லா சேனல்களிலும் இருக்கிற நல்ல விஷயங்கள், அவற்றில் இல்லாத சூப்பர் சங்கதிகள்தான் எங்க சேனலின் ஹைலைட்!'' என்று கடமையே கண்ணாகப் பாடம் ஒப்பிக்கத் துவங்கிய ஷெரீப்பை மூன்று பெண்களும் மீண்டும் அறை கடத்தினார்கள்.

''எங்க மூணு பேருக்குள் ஒரு பந்தயம். சேனல் ஆரம்பிச்ச முதல் மாசத்தில், எங்க மூணு பேரில் யார் பார்வையாளர்களை அதிகமா ஈர்க்கிறாங்கன்னு போட்டி. இதுக்காக ஆளாளுக்குத் தனித்தனியா சில திட்டங்கள் தீட்டிவெச்சிருக் கோம். உடை, நடை போக சில பகீர் திட்டங்களும் இருக்கு. ஆனா, அது எல்லாம் சஸ்பென்ஸ்!'' என்று கண் சிமிட்டுகிறார் ரோச்சல்.
ஆஹா... அன்லிமிடெட் அட்டகாசம்டோய்!

பேசி.. செப்பி...மாட்லாடி...சம்சாரித்து...
                            
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism