Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிளைப் பிடுங்கினால் ஆரோக்கியம்!
நானே கேள்வி... நானே பதில்!

''கருணாநிதியின் பார்வையில் ஜெயலலிதா மாறி இருக்கிறாரா?''

''நிச்சயமாக. முன்பு கருணாநிதி, ஜெயலலிதாவை அழைக்கும் பெயர் 'பால்கனிப் பாவை'. இப்போதோ 'சிறுதாவூர் சீமாட்டி!'

- என்.சீதாலெட்சுமி, சென்னை-40.

''தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சில டிப்ஸ்கள் கொடுக்க முடியுமா?''

''தாராளமாக!

1.கலைந்த தலையோடு, ஷேவிங் செய்யாமல், சட் டைப் பட்டனைத் திறந்தபடி, கண்களில் கொலை வெறியோடு, கைகளில் அரிவாள் ஏந்தியபடி, நாக்கைத் துருத்தியபடி போஸ்டரில் நான்கைந்து இளைஞர் களைப் பார்த்தால், 'மவனே தியேட்டர் பக்கம் வந்தே, கத்தியில்லாம சர்ஜரிதாண்டி!'

2. படம் ரிலீஸ§க்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் 'தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி' என்று தெரிவித்திருந்தால், ஆப்பு கன்ஃபார்ம்.

3.படத்தின் இசை வெளியீட்டு விழா சின்னத்திரை யில் ஆடம்பரமாக நடந்தால், செய்வினை வைக்கப் போகிறார்கள், ஜாக்கிரதை!

4. காதலை வேறு ஒரு கோணத்தில் இயக்குநர் சொல்ல முயற்சித்திருந்தால், மனநோய் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டுப் போவது நல்லது!

5. 'திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...' என்ற குரல் கேட்டால், கேபிளைப் பிடுங்கிவிடுவது குடும்ப ஆரோக்கியம்!''

- பாலநாயகர், திருப்பூர்.

''ஏழை சொல் அம்பலம் ஏறாதா?''

''இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பெற்றிருக்கும் மாணவி, ஜாஸ்மின். இவரது தந்தை சேக் தாவூதின். தொழில் தெருத் தெருவாகச் சென்று துணி விற்பது. சென்ற ஆண்டு முதல் இடத்தைப் பிடித்த மாணவன், ஜோஸ் ரிஜான். இவரது தந்தை பயஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் தெருத் தெருவாக மீன் விற்கும் வியாபாரி. இதைப் பார்க்கும்போதுதான் நீங்கள் சொல்கிற பழமொழி பொய்த்துப்போகும் எனஎதிர்காலம் மீது நம்பிக்கை வருகிறது!''

- எஸ்.அமுதா, திருவாரூர்.

''சமீபத்தில் நீங்கள் கண்டு வியந்த அதிசய மனிதர்?''

நானே கேள்வி... நானே பதில்!

''அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்முத்து சாமி. 'கடந்த 15 வருடங்களாக அ.தி.மு.க-வில் அவமானத்தைச் சந்தித்துக்கொண்டு இருக் கிறேன்' என்கிறார் முத்துசாமி. ஒரு மனிதர் ஒருமுறை ஒருவரிடம் அவமானப்படலாம், இரண்டு முறை அவமானப்படலாம், வருடக் கணக்கில் ஒருவர் அவமானப்பட்டுக்கொண்டே இருந்தால் அவர் அதிசய மனிதர்தானே!''

- எஸ்.சுதா, திண்டுக்கல்.

''இந்த உலகத்தின் மிகக் கடினமான வேலை எது?''

''பிரான்சின் புகழ்பெற்ற கவிஞரான பால்வெரி ஒருமுறை சொன்னார், 'கவிஞன்தான் உலகின் மிகக் கடுமையான வேலையைச் செய் கிறான். அவன், கனவு கண்டுகொண்டே அதனைப் பதிவு செய்கிறான்!'''

- இரா.மன்னர்மன்னன், சென்னை.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism