Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

Published:Updated:

5 கேள்விகள்  
5 கேள்விகள்
5 கேள்விகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5 கேள்விகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம்...

'' 'செம்மொழி மாநாடு கட்சி மாநாடாகக் காட்சி அளித்துவிடக் கூடாது' என்றிருக்கிறாரே கருணாநிதி?''

''மக்களின் வரிப் பணத்தில் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் தன் புகழ் பாடும் கட்சி மாநாட்டைத்தான் நடத்தப்போகிறார் கருணாநிதி. இதனால் தமிழுக்கு ஒரு பயனும் கிடையாது. ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மடிந்துவிட்டார்கள். இங்கே விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும்போது மாநாடு நடத்துவது கேலிக்கூத்தானது!''

முன்னாள் அமைச்சர் முத்துசாமியிடம்...

''எதையோ எதிர்பார்த்து நீங்கள் பிளாக்மெயில் செய்வதாக அ.தி.மு.க கூறியிருக்கிறதே?''

''நேரில் சென்றால், ஓரிரு நிமிடங்களில் பேசி அனுப்பிவிடுவார்கள். அதனால் என் அதிருப்தியைக் கடிதமாக எழுதினேன். செயற்குழுவுக்குச் சென்றால், பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் செல்லவில்லை. ஈரோடுக்கு வந்த அம்மா, இங்கு கட்சியைக் கட்டமைத்த என்னைத் தவிர்த்து வேறு சிலரைச் சந்தித்துப் பேசிச் சென்றார். இப்படி இருந்தால் நான் எப்படி கட்சி நடத்த முடியும்? எதையோ எதிர்பார்த்து இருந்திருந்தால், 15 ஆண்டுகள் பொறுமையாக அ.தி.மு.க-விலேயே இருந்திருக்க மாட்டேன்!''

சட்டசபைச் செயலாளர் செல்வராஜிடம்...

''புதிய சட்டசபையில் மீண்டும் மராமத்துப் பணிகள் நடக்கின்றன. அவசரகதியில் நடந்த ஆரம்பக் கட்ட வேலைகள் அனைத்தும் வீண்தானே?''

''சட்டசபை திறக்கும்போது மேலே இருந்த டூம் தற்காலிகமாகப் போடப்பட்டது. தற்போது அதைப் பிரித்துவிட்டு நிலையான டூம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதனால் சட்டசபைக்கு உள்ளே தூசி படிய வாய்ப்பு உண்டு. எனவே, நாற்காலிகள், மேஜைகளைப் பிரித்துவிட்டோம். பணிகள் முடிந்ததும் அவை பழைய இடத்திலேயே பொருத்தப்படும்!''

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனிடம்...

''ஈழம், ஆன்லைன் வர்த்தகம் போன்ற பிரச்னைகளை கையில் எடுத்ததால்தான் வணிகர் சங்க கூட்டமைப்பை உடைக்க அரசு சதி செய்வதாக நினைக்கிறீர்களா?''

''இருக்கலாம். விலைவாசி உயர்வு, ஈழப் பிரச்னை, மின்வெட்டு போன்ற விஷயங்களின் அரசின் கவனத்தை ஈர்க்க, கடை அடைப்பு நடத்தினோம். இதில் சிலருக்கு எரிச்சல். 'கடை அடைப்பால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது' என்று தூண்டிவிட்டுக் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். இறுதியில் அவர்கள்தான் குழம்பிப்போவார்கள்!''

5 கேள்விகள்

நமீதாவிடம்...

''இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவில் உங்களை நடனமாட அழைத்தார்களாமே?''

''ஆமாம். நான் வேறு மாநிலப் பெண்ணாக இருந்தாலும் எனக்கு வாழ்வு அளித்தது தமிழ்நாடு. தமிழ் மக்களின் உணர்வறிந்து நடந்துகொள்வது என் கடமை. அதனால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என மறுத்துவிட்டேன்!''

5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism