Published:Updated:

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

Published:Updated:

நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரைட்டர்
படங்கள்: சு.குமரேசன், எம்.உசேன், கே.கார்த்திகேயன்.
நோட்டீஸ் போர்டு

பூ அல்ல... பூகம்பம்!

நோட்டீஸ் போர்டு

திருவான்மியூரில் குஷ்புவின் முதல் பேச்சைக் கேட்டவர்கள் அத்தனை பேரும் மிரண்டு போனார்கள். திருவாரூர் தொடங்கி திருவான்மியூர் வரை என்று வசன கவிதையாக ஆரம்பித்தவர்... குளித்தலையில் தொடங்கிய வெற்றி கலைஞரை இன்று வரை குனியாத தலையாக வைத்திருக்கிறது என்று முடித்தார். பெரியார் தொடங்கி சேகுவேரா வரை அவரது பேச்சில் உலகத் தலைவர்கள்அனை வரும் வந்து போனார்கள். 'அழகிரி வகிக்கும் துறையோ உரம்... இவர் தி.மு.க-வுக்கு கிடைத்த வரம்' என்ற எதுகை மோனையும் சரளம். இவை அனைத்துமே முதல் நாளே கருணாநிதியிடம் காட்டி ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சாம். அடி பின்னுங்க!

நோட்டீஸ் போர்டு

பேர் சொல்லும் பேரன்!

Nothing But Wind - இளையராஜாவின் ஹிட் ஆல்பம். அவரது 67-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரசிகர்களுக்கு எனப் பிரத்யேகமாக அந்த இசைக் கோர்வைகளை வாசிக்க ஏற்பாடு செய்திருந்தார் ராஜாவின் மகள் பவதாரிணி. ஒட்டுமொத்த அரங்கும் ஒற்றை வார்த்தைகூட இல்லாமல், இசைக்கு வசமான ரசவாத மணித் துளிகள். காவியக் கவிஞர் வாலியும் வட இந்திய இசை ஜாம்பவான் உத்தம் சிங்கும் விழாவின் விசேஷ விருந்தினர்கள். இந்த ஆல்பத்துக்கு என இசைத்து அதில் சேர்க்க முடியாமல் ஒரு இசைக் கோர்வை தனித்திருக்கிறது. அதைக் கேட்ட கமல்ஹாசன் உடனே, 'ஆஹா... அதுக்கென்ன நம்ம படத்தில் அதைச் சேர்த்துக்கிட்டாப் போச்சு!' என்று உரிமையாக கேட்டு எடுத்துக்கொண்டதுதான், 'சத்யா' படத்தில் 'வளையோசை கலகலவெனக் கவிதைகள் படித்திடும்' பாடலின் இசை வடிவமாம். நிகழ்ச்சியில் ராஜாவின் வீட்டில் இருந்து இரண்டாம் தலைமுறை வாரிசு யதீஷ்வர், 'அஞ்சலி' படத்தின் 'கண்மணி கண்மணி' பாடலைப் பாடினார். பின்னணி பாடகரின் ஏற்ற, இறக்க லயமும் குழந்தைக் குதூகலமும் கலந்து பாடிய இந்த வாண்டு, கார்த்திக் ராஜாவின் மகன்!

நண்பனும் துன்பனும்!

எத்தனை தடவை சொன்னாலும் போலீஸ்காரர்கள் திருந்தவே மாட்டார்களா? சென்னை வேளச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்த செல்வி என்பவர் பஸ்ஸில் வந்துகொண்டு இருந்தபோது எட்டரை பவுன் நகையும் மூன்று ஆயிரம் ரூபாய் பணமும் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது. உடனே அவர் புகார் கொடுக்கப் போனார். வேளச்சேரியில் வாங்கவில்லை. மயிலாப்பூரில் மறுத்துவிட்டார்கள். நகையைப் பறிகொடுத்த சோகத்துடன் ஆறு மணி நேரம் ஸ்டேஷன் ஸ்டேஷனாக ஏறி இறங்கினார் செல்வி. கடைசியாக இரக்கப்பட்டு மெரினாவில் வாங்கி இருக்கிறார்கள். இந்த சோகத் தகவல் மறுநாள் பத்திரிகையில் வந்தபிறகுதான் கமிஷனர் அந்தப் பெண்ணை வரச் சொல்லி ஆறுதல் சொல்லி அனுப்பினார். கடைசியில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

"பாதிக்கப்பட்டவர் தனது புகாரை எந்தக் காவல் நிலையத்திலும் கொடுக்கலாம்" என்ற விதி இருக்கிறது. அதைப்பற்றி போலீஸ் கவலைப்படுவதே இல்லை!

இறங்கி வருகிறார் அம்மா!

நோட்டீஸ் போர்டு

அ.தி.மு.க-வின் ராஜ்யசபா உறுப்பினர்களான மனோஜ்பாண்டியன், ராமலிங்கம் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் தலைமைச் செயலகத்துக்கு எதிர்பாராத விதமாக வந்து சென்றார் ஜெயலலிதா. "இதுவரைக்கும் யாரோட மனுத் தாக்கலுக்கும் அம்மா வந்ததே இல்லை. முதல் தடவையா வந்தாங்க. அவங்க இப்ப ரொம்ப மாறிட்டு வர்றாங்க" என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் சொன்னார். வந்திருந்தவர்கள் அனைவரையும் பார்த்துச் சிரித்தவர், 'உளமாற உறுதி கூறுகிறேன்...' என்ற வார்த்தை வரும்போது, 'ஆண்டவனின் பேரால்' என உறுதி கூறச்

சொன்னார்!

அழகிரி நகர்!

அழகிரி குடியிருக்கும் சத்யசாயி நகர், டி.வி.எஸ். நகர் தாண்டி புதிதாக முளைத்திருக்கிறது அழகிரி நகர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து அந்த நகருக்கு பஸ் இயக்கி விட்டார்கள். இப்போது ரயில்வே கேட் வேலை நடப்பதால், தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாம். புதிதாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் அந்த நகருக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரச் சொல்லி இப்போதே கோரிக்கைகள் குவிந்துவிட்டன. இனி ஊருக்கு ஊர் அண்ணா நகர், கே.கே.நகர்போல அழகிரி நகரும் அவதரிக்கக்கூடும்!

பள்ளிக் கொள்ளை!

பள்ளிக்கூடங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கறாரான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. ஆனால், அதைவிடக் கூடுதலாகத்தான் பல பள்ளிக்கூடங்கள் வசூலிக்கின்றன. பெற்றோர்கள் சிறிது நேரம் பள்ளியின் வாசலில் நின்று புலம்புகிறார்கள். ஆனால், கடைசியில் கட்டிவிட்டுத்தான் போகிறார்கள். இந்தப் புகார்களை அரசுக்கோ, கட்டணங்களை விதித்த கோவிந்தராஜன் கமிட்டிக்கோ சொன்னால், 'குறிப்பிட்ட பள்ளிப் பிள்ளைகள் தங்களிடம் பெறப்பட்ட கட்டணத்தைச் சொல்லி புகார் கொடுக்க வேண்டும்' என்று பதில் வருகிறது.

யார் அப்படிப் புகார் தருவார்கள்? தந்தால், அந்தக் குழந்தை யின் வாழ்க்கை போய்விடாதா என்ற யதார்த்தம்கூட உத்தரவு போடும் அரசுக்கும் அதிகாரிக்கும் புரியவில்லை. அதிகாரத்தை வைத்திருக்கும் அவர்கள்தானே கண்காணிக்க வேண்டும். கையாலாகாதவன் சொல்வானாம் ஆயிரம் காரணம்!

கவிதை யுத்தம்!

நோட்டீஸ் போர்டு

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கமும் பட்டிமன்றமும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில், கனிமொழியின் பெயர் பெரியதாகவும் கயல்விழி பெயர் சின்னதாகவும் இருந்தது. கோபமான கயல், அழைப்பிதழை மாற்றித் தரச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். அதன் பிறகு, இருவர் பெயரும் இணையான அளவில் போடப்பட்டது. நேரில் பார்த்தால், பாசப் புன்னகை. விலகிப் போனால், இமேஜ் யுத்தம் என கழகத்துக்குள் கலகம் தொடர்கிறது!

இதைப் படிக்காதீங்க!

பதவி கேட்ட இரண்டு பேருக்கும் கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறதாம் சின்னம்மா குடும்பம். "அடுத்த தடவை பார்க்கலாம்" என்று அம்மா சொன்னதில் திருப்தி அடையவில்லையாம்!

புதிதாக வந்திருக்கும் கவர்ச்சிப் புயலைவைத்துக் கூட்டம் நடத்த பல மாவட்டங்களில் இருந்து அன்பான அழைப்புகள். அவசரப்பட வேண்டாம் என்று தடா போட்டு இருக்கிறது ஆலயம்!

தோட்டத்தில் இருந்து தோட்டத்துக்குத் தூது போனதாகவும், நீங்கள் கேட்கும் எம்.எல்.ஏ. தொகுதிகள் தரத் தயாராக இருப் பதாகச் சொன்னதாகவும் ஆளும் மேலிடத்துக்குத் தகவல்!

எதையோ எதிர்பார்த்துக் கதர்க் கட்சியில் இணைந்தவருக்கு கடைசியில் ஏமாற்றம்தான். 'நம்பவெச்சுக் கழுத்தறுத்துட்டாங்க' என்று புலம்பித் தள்ளுகிறாராம் காவியில் இருந்து மாறிய மாஜி!

"வட இந்திய கம்பெனிக்கான முக்கிய கான்ட்ராக்ட்டை வாங்கிக் கொடுத்து பெரிய பிரைஸ் அடித்துவிட்டார்" என்று இப்போதே புது வதந்தி கிளம்பிவிட்டது நடிகை மீது!

நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism