Published:Updated:

டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?

டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?

டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?

டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?

Published:Updated:

டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?
டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகா... ஆரோக்கியமா?
டாக்டர் டி.நாராயண ரெட்டி
டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?
டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?

வன் அப்படி ஒன்றும் அழகில்லை... அவனுக்கு யாரும் இணையில்லை' என்று பெருந்தன்மையுடன்தான் மகேஷை ஏற்றுக்கொண்டு இருந்தாள் அவனது மனைவி. ஆனால், அவனது வழுக்கைத் தலை?

"இன்னிக்குப் பல இளைஞர்களுக்கு வழுக்கை இருக்கு. குடும்ப மரபுரீதியா வர்றது இது. இதுக்கு எங்க மருத்துவத்தில் மருந்து இல்லை. ரொம்ப ஃபீல் பண்ணா, ஹேர் டிரான்ஸ்பிளான்ட் பண்ணிக்க வேண்டியதுதான்" என்றார் டாக்டர்.

'சீச்.சீ இந்த க்ளினிக் புளிக்கும்' என்று, ஒரு மருந்துக் கடைக்குச் சென்று, 'முடி கொட்டாம இருக்க மருந்து கொடுங்க' என்று கேட்டு வாங்கி, அந்த மருந்தை நாள்தோறும் விழுங்கினான் மகேஷ். தலை மேல் எந்தப் பலனும் இல்லை. கடைசியாக வந்து சேர்ந்தது விறைப்புத்தன்மைக் கோளாறு. காரணம், முடி கொட்டாமல் இருக்கவென்று சாப்பிட்ட மருந்தில் இருந்த Finasteride என்கிற கெமிக்கல்தான்.

மரபு வழியில் இயற்கையாக அமைந்த உடல் அமைப்பை மாற்ற முயற்சி பண்ணும்போதெல்லாம், பக்க விளைவுகளையும் சந்திக்கத்தான் வேண்டும். அழகு என்பது பார்ப்பவரின் கண்ணைப் பொறுத்த விஷயம். இதைப் புரிந்துகொள்ளாமல், 'நான் இப்படி இருக்க வேண்டும்; இப்படி இருந்தால்தான் என்னை மற்றவர்கள் ரசிப்பார்கள்' என்று விதவிதமான அழகுச் சாதனங்களின் மடியில் போய் விழுவது தவறானது. அழகுக்காகப் பயன்படுத்துகிற க்ரீம், ஷாம்பு, ஹேர் டை, ஜெல் போன்ற அனைத்துமே பக்க விளைவுகளைத் தரக் கூடியதுதான். தன்னம்பிக்கை இல்லாத நிலையில்தான் இதுபோன்ற அலங்காரங்களில் கவனம் செல்லும். பொதுவாக, ஒருவரின் வெறும் தோற்றம் மட்டுமல்ல; அந்த நபரின் ஆளுமைப் பண்புகளும் சேர்ந்துதான் மற்றவர்கள் மனதில் மதிப்பினைக் கூட்டும். உடைகளின் மூலம், தொப்பிகளின் மூலம் தங்கள் புற அழகைச் செழுமைப்படுத்திக்கொண்ட உலகத் தலைவர்களை நீங்கள் அறியவில்லையா மகேஷ்?

மகேஷைப்போல கவலைக் கடலில் நீந்துபவர்களின் கவனத்துக்கு...

அழகைவிட, ஆரோக்கியம்தான் உங்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்க வேண்டும். உடற்பயிற்சி, கீரை, காய்கள், பழங்கள் போன்ற சத்தான உணவுகள் மூலம் ஆரோக்கியம் தேடுங்கள்!

உனக்கும் எனக்குமான
பிரத்யேகப் பொழுதுகளில்
இருதயச் சத்தம் காதுக்குள்ளும்
நாசியின் வெப்பம் நெற்றியின் மேலும்
படிகிறது திட்டுத் திட்டாய்!

- பார்வதி

டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?
டூயட் கிளினிக்: அழகா... ஆரோக்கியமா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism