"87 வயது என்பதால் என்னைப் பெரியவன் என்று அழைக்கலாம். ஆனால், தமிழைக் காப்பதிலும், தி.மு.க-வைக் காப்பதிலும், என்னைப்போல ஓர் இளைஞன் இருக்க முடியாது!"
- மு.கருணாநிதி
"நான்கு லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும் ஒரு நாடகத்துக்கு 40 நாட்கள் ஒத்திகை பார்க்கிறார்கள். ஆனால், 40 கோடி செலவிடும் ஒரு படத்துக்கு நான்கு நாட்கள்கூட ஒத்திகை பார்ப்பதில்லை!"
- கமல்ஹாசன்
"மத்திய அமைச்சராக அன்பு மணி இருந்தபோது, அவர் நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், மீண்டும் நல்லது செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!"
- சௌமியா அன்புமணி
"அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், மத்திய அரசு பதற்றம் இல்லாமல் ஆலோசனை செய்துகொண்டு, பொய்யான வாக்குறுதிகளை தந்து வருகிறது!"
- நரேந்திர மோடி
"கள்ளை ஆரோக்கிய பான மாக தயார் செய்து, அதனை டின் னில் அடைத்து டாஸ்மாக் கடை களில் விற்பனை செய்யலாம்!"
- சரத்குமார்
|