Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'டாக் ஷோ'வில் இருந்து ஓய்வுபெற இருக்கும் ஓப்ரா வின்ஃப்ரே, புதிதாகப் பொழுதுபோக்கு சேனல் ஒன்றைத் துவங்க இருக்கிறார். இதுவரை தான் பேட்டி கண்ட அத்தனை பிரபலங்களையும் துவக்க விழா வுக்கு அழைக்க இருக்கிறார். ஒபாமா, பில்கேட்ஸ் என நீளும் இந்த வி.வி.ஐ.பி. பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரே இந்தியர்... ஐஸ்வர்யா ராய். அழகுப் பெண்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புதான்!

இன்பாக்ஸ்

தனுஷுடன் நடித்து வரும் 'மாப்பிள்ளை' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் அதன் நாயகி ஹன்ஸிகா மோட்வானி 'மோஸ்ட் வான்டட்' லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார். 'ஜெயம்' ரவியுடன் 'இச்', விஜய்யுடன் 'வேலாயுதம்' என ஹன்ஸிகாவின் டைரி நிரம்ப ஆரம்பித்திருக்கிறது. ஒரு பொது அறிவுத் தகவல்... பழைய ரஸ்னா விளம்பரத்தில் 'ஐ லவ் யூ ரஸ்னா' என்று குதூகலிக்கும் குட்டிப் பெண்தான் இந்த ஹன்ஸிகா. இனிமே, தமிழ்நாடே 'ஐ லவ் யூ' சொல்லும்!

இன்பாக்ஸ்

' 'ஏழாம் அறிவு' படத்தில் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும்' என்று ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதற்காக, இஷ்டப்பட்டு எட்டு போட்டுக்கொண்டு இருக்கிறார் ஸ்ருதிஹாசன். விமானம் ஓட்ட வேண்டும் என்பது தான் ஸ்ருதியின் ஆசை. அப்பா மாதிரி

பாடிட்டே பறப்பாங்களோ?

பாலாவின் 'அவன் இவன்' படத்தில் கெஸ்ட் ரோல் சூர்யாவுக்கு. படத்தில் நடிகர் சூர்யாவாகவே வருகிறார். எக்ஸ்ட்ரா போனஸாக ஸ்டேஜ் டான்ஸ் ஒன்றும் ஆடுகிறாராம். அப்போ, ட்ரிபிள் ஹீரோஸா?

கோடிகளைக் குவிக்கும் குளோபல் மார்க்கெட் டைப் பிடிக்க ஷாரூக் கான் ரெடி. தன் 'ரெட் சில்லிஸ்' தயாரிப்பில் ஹ்ரித்திக் ரோஷனோடு சேர்ந்து நடிக்க இருக்கிறார். படத்தை இயக்கவிருப்பது ஷாரூக்கின் நெருங்கிய நண்பர் கரண் ஜோஹர். உலகம் வளைக்கும் வாலிபன்!

கௌதம் மேனன் இயக்கத்தில் போலீஸ் - வில்லன் என்று டபுள் ரோல் செய்கிறார் அஜீத். 'விண்ணைத்தாண்டி வருவாயா'-வில் வந்த சமந்தா தான் ஹீரோயின். காக்கிச் சட்டை போட்ட 'தல'!

'சிவாஜி' ரஜினியை மிஞ்சிவிட்டார் நரேந்திர மோடி. ஒரு ரூபாயில், 2 ஆயிரம் கோடி மதிப்பில் தொழிற்சாலையைக் கொண்டுவந்துவிட்டார். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி எதிர்ப்பின் காரணமாக, நானோ தொழிற்சாலை அமைக்க முடியவில்லை. "அந்தப் பிரச்னையை டி.வி-யில் பார்த்த நான் 'குஜராத் உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்று டாடாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அந்த ஒரு ரூபாய் செலவுக்கு இன்று 2 ஆயிரம் கோடி முதலீடு குஜராத்துக்குக் கிடைத்துள்ளது" என்று நானோ தொழிற்சாலையின் துவக்க விழாவில் பேசி இருக்கிறார் மோடி. சின்ன மெசேஜ்... பெரிய லாபம்!

இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகைகளிடம் படுவேகமாகப் பரவி வருகிறது ஸ்கூபா டைவிங் மோகம். இப்போதைக்கு இதில் கில்லாடி, தீபிகா படுகோன். கேப் கிடைத்தால், மொரீஷியஸ் பறந்து, தண்ணீருக்குள் தாவிவிடுகிறார் தீபிகா. 'தண்ணீருக்குள் ஊறுவது ஜாலியாக இருக் கிறது' என்று அடிக்கடி ட்விட்டியும் வருகிறார். சரியான தண்ணி பார்ட்டி!

முதல்வரின் பிறந்த நாளன்று கோட்டூரில் மெகா நூலகத்தைத் திறந்துவைக்கத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், அண்ணா பிறந்த நாளில் நூலகத் திறப்பு விழா நடத்தச் சொல்லிவிட்டார் முதல்வர். 'பாதி வேலை நடக்கும்போதே சட்டசபையைத் திறந்துவைத்து, கிண்டல் வாங்கியதால், நூலக விஷயத்தில் பொறுமை காக்கச் சொல்லிவிட்டாராம் முதல்வர். கட்டடத்தைக் கட்டிக்கோ!

'கார்டன் சிட்டி' எனப் பெயரெடுத்த பெங்களூரில் தொடர்ந்து மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அரசியல் வாதிகள் பலரும் அமைதியாக இருக்க, மரங்களைப் பாதுகாக்கக் களம் இறங்கி இருக்கிறார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இதற்காக 'பெங்களூரு கிரீன் வாரியர்ஸ்' என்ற அமைப்பையும் துவங்கி இருக்கிறார் திவ்யா. இதுவும் அழகு!

இன்பாக்ஸ்

துணை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் இரட்டைக் குழந்தைகளுக்கு தாத்தா தலைமையில் பெயர் சூட்டும் விழா நடக்க இருக்கிறது. சூரியக் குடும்ப வாரிசுகள் என்பதால், பெண் குழந்தைக்கு 'நிலா' என்றும் ஆண் குழந்தைக்கு 'நளன்' என்றும் பெயர்வைக்கத் திட்டமாம். பேர் சொல்லும் பிள்ளைகள்!

வீட்டில் ஃபெராரி முதல் நானோ வரை எக்கச்சக்க கார்கள் இருந்தாலும், ரத்தன் டாடா வீட்டில் டிரைவர்கள் யாரும் கிடையாது. இன்று வரை செல்ஃப் டிரைவிங்தான். நானோ எப்படிப் போகுது தலைவா?

இன்பாக்ஸ்

தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற இருக்கும் அத்வானி, தன் அரசியல் வாரிசாக மகள் பிரதிபாவைக் களமிறக்குகிறார். சோனியா-பிரியங்கா கூட்டணியை பிரதிபா சமாளிப்பார் என்று பி.ஜே.பி. எதிர்பார்க்கிறது. அதனால் விரைவில் பிரதிபாவுக்கு முக்கியப் பதவி தரப் படலாம். பெண்கள், கட்சியின் கண்கள்!

உரசிக்கொண்டு இருந்த அம்பானி பிரதர்ஸ், கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு ஒட்டி உறவாட ஆரம்பித்திருக்கிறார்கள். எப்போது திருப்பதி வந்தாலும் தனியார் கெஸ்ட் ஹவுஸில் தங்குவது அனில் அம்பானியின் பழக்கம். இந்த முறை அண்ணன் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான 'கிருஷ்ணா ஹவுஸில்' தங்க, அம்மா கோகிலா பென் கொள்ளை சந்தோஷத்தில் இருக்கிறார். மனம் இணைந்தால் பணம் இணையும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism