Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

Published:Updated:

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் வரவேற்பறை

வேலை கிடைக்கணுமா? new.first-job.in

விகடன் வரவேற்பறை

வேலை தேடுபவர்களுக்கு ஆன்லைன் வழிகாட்டி இந்தத் தளம். நம்மைப்பற்றிய தகவல்களை அளித்துவிட்டால், தளத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நிறுவனங்களின் காலி இடங்கள்பற்றிய தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். அதோடு, வரவிருக்கும் தேர்வுகள், பொது அறிவு விஷயங்கள், மாதிரி வினாத்தாள்கள், பயோ டேட்டா எழுதுவது, குழு விவாதம், நேர்முகத் தேர்வு டிப்ஸ் என சகல பயிற்சிகளும் அளிக்கிறார்கள். 'வேலைக்கு எப்படித் தயாராவது?', 'என்னென்ன தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?' என அனுபவப்பூர்வ

அறிவுரைகளும் ஏராளம். மாணவர்கள் அதிஅவசியம் க்ளிக்க வேண்டிய வெப்சைட் இது!

பலேபாண்டியா
இசை: தேவன் ஏகாம்பரம் விலை ரூ.99


விகடன் வரவேற்பறை

'சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்' பாடல் கேட்கக் கேட்க ஒரு கோப்பையில் குடியிருக்கும் உணர்வு. 'ராவோடு ராவாக விஸ்கி, பிராந்தி, வோட்கா... நீ போடு ராவாக', 'மீன் வாழ நீர் வேணும். அட, நான் வாழ பீர் வேணும் என 'பாரெ'ங்கும் பறந்து திரியும் 'வாலி'ப வரிகள். வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களை அடுக்கும் 'ஹேப்பி... ஹேப்பி...' பாடல் ஒரு ஃபீல்குட் குறும்புக் குற்றாலம். நாயகனின் போங்கு பில்ட்-அப் பாடலாக ஒலிக்கும் 'அழகிய மனிதன்... அதிசய மனிதன்' பாடல் ஆல்பத்தின் பல்லே பல்லே பாட்டு. மற்ற பாடல்கள் பழகிய பாதையில் பயணித்துக் காற்றில் கலக்கின்றன!

எண்ணெய் அரசியல்!
கேர்ரி லீச்
தமிழில்: நா.தர்மராஜன்
வெளியீடு: அடையாளம்,
1205/1, கருப்பூர்ச் சாலை,
புத்தாநத்தம்- 621 310
பக்கம்: 192 விலை ரூ.170


விகடன் வரவேற்பறை

21-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே இயற்கை வளங்களை, குறிப்பாக எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற உக்கிரமான சண்டைகள் நடக்கின்றன. அமெரிக்கா எண்ணெய் வளம் மிக்க நாடுகளுடன் போரிடுவதைத் தொழிலாகக்கொண்டு இருக்கிறது. எண்ணெய் வளம் நிறைந்த பிரதேசங்களில் அமெரிக்க அரசின் கொள்கைகள் இதில் ஆராயப்படுகின்றன. படித்துக்கொண்டு இருக்கும்போதே அமெரிக்கா உலகின் எரிசக்தி உற்பத்தியில் 25 சதவிகிதம் நுகர்வு செய்யும் தகவல் நம்மைத் தாக்குகிறது. உலகின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள உதவும் நல்ல புத்தகம்!

எங்கெங்கு காணினும்...
இயக்கம்: ஷக்தி பாரதி
வெளியீடு: 24, கங்காராம் தோட்டம்,
கோடம்பாக்கம், சென்னை-24.


விகடன் வரவேற்பறை

லஞ்சம் நம்மை எவ்வாறு எல்லாம் தொடர்கிறது என்பதை 15 நிமிடங்களிலேயே சொல்லிஇருக்கிறார் ஷக்தி. இவருக்குக் குறும்படங்கள் புதிதல்ல. லஞ்சம் எவ்விதம் வேரோடி இருக்கிறது என்பதை இவ்வளவு சுருக்கமான நேரத்தில் சொல்லி விட முடிவது எளிதல்ல!

தமிழ் இன்று
new.tamilindru.blogspot.com


விகடன் வரவேற்பறை

பல்வேறு துறைகளில் பணிபுரியும் நண்பர்களின் பதிவுகள் வாரம் ஒருமுறை பதிவேற்றப்படுகின்றன. 'பௌத்தச் சுவட்டைத் தேடி' என்னும் கட்டுரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பௌத்த மதத்தின் அடையாளங்கள் இன்னும் இருப்பதை விளக்குகிறது. 'மறக்குமோ ஈழத்தின் கறுப்பு நாட்கள்', 'முள்ளிவாய்க்காலுக்குக் கொள்ளிவைத்தவர்கள் யார்?' போன்ற கட்டுரைகள், இன்றைய ஈழத்தின் அவலநிலையைச் சொல்கின்றன. புத்தக விமர்சனங்கள், ஆளுமைகள் குறித்த அனுபவங்கள் எனப் பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism