Published:Updated:

பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!

பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!

பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!

பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!

Published:Updated:

"பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!"
பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!
பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புலிகளின் தோழன் பேட்டி
ப.திருமாவேலன்,படங்கள்: கே.ராஜசேகரன்
பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!
பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!

ம்பி பிரபாகரன் முதல் கேணல் கிட்டு வரை ஒரு காலத்தில் போராளிகள் தமிழகம் வந்து போகும் கூடாக இருந்தது ஓவியர் வீர சந்தானத்தின் வீடு! இன்று பழ.நெடுமாறன் முதல் வைகோ வரை இன உணர்வுத் தலைவர்கள் அனைவரையும் இணைக்கும் இதயமாக இருப்பதும் இவரே. தமிழ்... தமிழன்... என்று எங்கு குரல் கேட்டாலும் ஓரமாக வந்து நிற்கும் இந்தத் தாடி உருவம். ஆனால், அப்படி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யத் தூண்டுதலாக இருந்ததே இவராக இருப்பார். இன நலம் ஒன்றையே உயிராகக்கொண்டு இயங்கும் ஓவியர் வீர சந்தானத்துடன் ஒரு சந்திப்பு...

"ஒரு காலத்தில் போராளிக் குழுக்கள் அனைவரும் வந்து போகும் இடமாக இருந்ததே உங்கள் வீடு. போராளிகளுக்கு நீங்கள் எப்படி நெருக்கம் ஆனீர்கள்?"

"அது ஒரு வசந்த காலம். புத்தகத்தில் மட்டுமே படித்திருந்த புறநானூற்று வீரத்தை அந்த இளைஞர்களிடம் பக்கத்தில் இருந்து பார்க்கும் பாக்கியம் தமிழ்நாட்டில் சிலருக்கு மட்டுமே வாய்த்தது. அவர்களில் நானும் ஒருவன்.

80-களின் ஆரம்பத்தில் காசி ஆனந்தனின் கவிதைப் புத்தகத்தை கலைஞர், சென்னை தியாகராயர் நகர் வாணி மகாலில் வெளியிட்டார். அன்றுதான் தம்பி பிரபாகரனைப் பார்த்தேன். அவரை இறுக்கமாகக் கட்டி அணைத்தேன். 'அந்த மண்ணை ஆளப் பிறந்தவன் நீங்கள்தான்' என்று சொன்னேன். சொன்னபடியே அவர்தான் கால் நூற்றாண்டு காலம் ஈழ மண்ணை ஆண்டார். இன்றும் மறைமுகமாக ஆண்டுகொண்டுதான் இருக்கிறார். அந்தச் சம்பவத்துக்கு பிறகு, அவரை அடிக்கடி சந்திப்பது வழக்கமானது.

பிறகு, கிட்டு, மாத்தையா, யோகி, நடேசன், பேபி சுப்பிரமணியம், லாரன்ஸ் எனப் புலித் தலைவர்கள் பலரும் நித்தமும் என் வீடு தேடி வந்தனர். என்னுடைய ஓவியங்களைத் தங்களின் போராட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைத்தார்கள். புலிகள் மட்டுமல்ல; மற்ற போராளி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வருவது உண்டு. குறிப்பாக, பாலகுமார், பத்மநாபா, வரதராஜப் பெருமாள் ஆகியோரும் என்னுடன் நெருக்கமாகப் பழகினார்கள். இடதுசாரிச் சிந்தனை உடையவர்கள் அனைவரையும் நான் அரவணைத்தேன். பிரபாகரன், பாலகுமார், பத்மநாபா, சிறீ சபாரத்தினம் ஆகிய நான்கு பேரும் ஓரணியில் திரண்டபோது, நான்கு கைகள் ஒன்று திரண்டு போராடுவதுபோன்ற ஓவியம் வரைந்து தரச் சொன்னார்கள். அவர்களது விருப்பப்படி வரைந்து கொடுத்தேன். நானும் ஓவியர் சாம் அடைக்கலசாமியும் இணைந்து இனப் படுகொலைக்கு எதிரான கண்காட்சியை சென்னையில் நடத்தினோம். என்னுடைய ஓவியங்களைக்கொண்ட புத்தகத்தை ஈரோஸ் அமைப்பு வெளியிட்டது. கடலுக்கு அந்தப் பக்கம் நம் இனம் அழிந்துகொண்டு இருக்கிறது, அதைத் தடுக்கப் போராளிகளால்தான் முடியும் என்று நினைத்தோம். அவர்களை மனப்பூர்வமாக ஆதரித்தோம். தமிழீழப் போராட்டம் இன்னமும் முடியவில்லை. சிங்கள இனவாதம் இருக்கும் வரை போராட்டமும் இருக்கும். யாரும் கவலைப்படத் தேவை இல்லை!"

"தன்னால் முடிந்தது அனைத்தையும் செய்துவிட்டதாக முதல்வர் சொல்கிறாரே?"

"இன்று மட்டும் அல்ல; என்றும் அவர் இந்த இனத்துக்கு உண்மையாக இருந்தது இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பே தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கித் தமிழகம் கொந்தளித்தபோது, திடீரென்று ஒருநாள் மற்ற தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல், அந்தக் கூட்டமைப்பு செயல் இழந்துவிட்டது என்று கலைஞர் அறிவித்தார். இன்றும் அனைத்துக் கட்சி எம்.பி..க்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்தபோது தன்னிச்சையாக முடிவெடுத்து அதை கண்டுகொள்ளாமல் மறக்கடித்தார். இந்த நாடகங்களைத்தான் தன்னால் செய்ய முடிந்தவை என்கிறாரா முத்தமிழ் அறிஞர். ராவணனுக்குத் துரோகம் இழைத்த கம்பனை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்பார் அண்ணா. வருங்காலம் முத்தமிழ் அறிஞரை அப்படித்தான் கேள்வி மேல் கேள்வி கேட்கும்!"

"நீங்கள் நெருக்கமாகப் பழகிய திருமாவளவனே, கலைஞரின் பக்கம்தானே நியாயம் இருப்பதாகச் சொல்கிறார்?"

"திருமாவை நம்பி ஏமாந்து போய் வெம்பிக்கொண்டு இருக்கும் எத்தனையோ ஏமாளிகளில் நானும் ஒருவன். மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்த திருமா, இறுதியாக என்ன சொன்னார்? 'இனி, என் வாழ்நாளில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டேன். காங்கிரஸைத் தமிழ்நாட்டில் அழிப்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம்' என்றார். செய்தாரா? 'திருமாவளவனை எங்களது அணிக்குள் சேர்த்துக்கொண்டது எங்களது அரசியல் தந்திரம்' என்று ராகுல் சொல்லிய பிறகுதான், திருமாவின் துரோகத்தை நாங்களே உணர்ந்தோம்!"

"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்து டாக்டர் ராமதாஸும் கழன்றுகொண்டாரே?"

பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!

"அப்படிச் செய்ய வேண்டாம் என்று கடைசி வரைக்கும் நான் அவரிடம் வாதாடினேன்... போராடினேன். இந்த ஏழையின் சொல் அம்பலம் ஏறவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன்... முள்ளிவாய்க்கால் முற்றுகையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. ஆனால், முள்வேலிக்குள் இருப்பவர்களையாவது மீட்டாக வேண்டிய கடமை நமக்குத்தான் இருக்கிறது என்று தனிப்பட்ட முறையில் ராமதாஸிடம் சொன்னேன். 'ஒரு லட்சம் பேரைத் திரட்டிச் சிறைக்குள் போனால்தான் அந்த மூன்று லட்சம் பேரை வெளியில் விடுவான். நாம் உள்ளே போனால்தான் அந்த முள்வேலியை முறிக்க முடியும்' என்றேன். இதுவரை நடத்திய அத்தனை போராட்டங்களையும் பட்டியலிட்ட மருத்துவர் ஐயா, 'நாம் எல்லாப் போராட்டங்களும் நடத்தியாகிவிட்டதே, இனி என்ன பிரயோஜனம்?' என்று திருப்பிக் கேட்டார். 'நீங்கள் சொல்வது எல்லாம் கணக்குக் காட்ட மட்டும்தான் பயன்படும். முள்வேலியை முறிக்கப் பயன்படாது' என்றேன். அதன் பிறகு அனைத்துத் தலைவர்களும் கூடி, தங்கள் கட்சி சார்பில் எத்தனை பேரைச் சிறைக்கு அனுப்பிவைப்போம் என்று கணக்குக் கொடுத்தார்கள். 70 ஆயிரம் பேர் சிறை செல்லலாம் என்று திட்டமிடப்பட்டது. அன்று மட்டும் அதை மருத்துவர் செய்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஆனால், இங்கு எல்லாவற்றையும்விட அரசியல்தானே முக்கியமானதாக இருக்கிறது"

"'இந்தியாவும் இலங்கையும் இணைந்து நிர்மாணப் பணிகளைத் தொடங்க வேண்டியதுதான் இன்றைய அவசர அவசியம் என்கிறார்களே?"

"இதெல்லாம் வியாபாரிகளின் ஆலோசனை. கொன்றவனுக்குத் தண்டனையும், நொந்தவனுக்கு விடுதலையும்தான் அவசியம். தமிழனாகப் பார்த்துக் கொல்வான், தமிழச்சியைக் கற்பழிப்பான்... இதில் மிச்சம் இருப்பவர்களுக்குக் கூடாரம் அமைத்துத் தருகிறேன் என்று அழைப்பான் சிங்களவன். பல்லைக் காட்டிக்கொண்டு அவனோடு கைகுலுக்க இங்கே இருக்கும் இனத் துரோகிகள் போகலாம். ஆனால், உண்மைத் தமிழன் ஒருவனும் உடன்பட மாட்டான். இன்று, கோடிக்கணக்காகக் குவியும் பணத்தைக் கூறு போட்டுப் பங்கு பிரிக்க, சில உளவாளிகள் அலைகிறார்கள். இதில் தமிழன்தான் உஷாராக இருக்க வேண்டும்.!"

"ஈழப் போராட்டம் இனி என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?"

" விரைவில் புலி உறுமும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தம்பியும் சில மூத்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்களால் நீண்ட காலம் மௌனமாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை!"

"பிரபாகரன் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்? உங்களது பற்று அப்படிச் சொல்லவைக்கிறதா?"

"பிரபாகரன் இருக்கிறார் என்பதற்கு என் முகம்தான் ஆதாரம். இல்லைஎன்றால், இந்த முகத்தில் நீங்கள் சிரிப்பைப் பார்க்க முடியுமா?"

பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!
பங்கு பிரிக்க அலையும் உளவாளிகள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism