Published:Updated:

டமிழன்!

டமிழன்!

டமிழன்!

டமிழன்!

Published:Updated:

டமிழன்!
டமிழன்!
டமிழன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப.திருமாவேலன்
படங்கள்: ஆ.முத்துக்குமார்.
டமிழன்!
டமிழன்!

'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு' - நாமக்கல் கவிஞரது பெருமை கலந்த வாக்கியம் இது. தாய் மொழியைத் தள்ளிவைப்பதுதான் அந்தக் குணமா?

ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இருக்கும் கரூர்த் தமிழன் பிரேம் ஆனந்த். பெரும்பாலான மாதங்கள் விமானங்களில் வாழும் தொழிலதிபர். அவர் என்னைத் தொடர்புகொண்டு இப்படிச் சொன்னார்...

"சென்னை விமான நிலையத்தில் தமிழில் ஏதாவது கேட்டால், அந்த இடத்துக்குள் இருக்கக் கூடாத ஜந்து ஒன்று உள்ளே நுழைந்துவிட்ட அதிர்ச்சியில் பார்க்கிறார்கள். நட்சத்திர விடுதிக்குள் போனால், வரவேற்பாளர் ஆங்கிலத்தில்தான் விசாரிக்கிறார். செலுத்த வேண்டிய தொகைக்கான அட்டைகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. சாப்பிட உணவு விடுதிக்குப் போனால், எல்லாமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. தவறான ஆங்கிலத்தில் பேசினால் கிடைக்கும் மரியாதைகூட, சரியான தமிழில் பேசுபவருக்குக் கிடையாது. தமிழில் ஏதாவது கேட்டால், அதற்கு ஆங்கிலத்தில்தான் பதில் தருகிறார்கள். என்னுடைய தொழில் தொடர்பாகப் பெரும்பாலும் வெளிநாடுகளில் அலையும் எனக்கு, இது இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது.

வெளிநாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அவரவர் தாய் மொழி தெரிந்தவர்கள், பேசுபவர்கள் நிச்சயம் இருப்பார்கள். நம் நாட்டில் இருந்து அதிகமான ஆட்கள் வேலைக்கு வருகிறார்கள் என்பதால், சில ஜெர்மன் விமான நிலையங்களில் தமிழ் ஆள் ஒருவர் இருக்கிறார். நாம் தமிழில் என்ன ஆலோசனைகள் கேட்டாலும், தயங்காமல் சொல் கிறார். ஆனால், இங்கோ எல்லாமே ஆங்கிலமயமாகி வருகிறது. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக்கொள்வதில், தமிழர்கள் யாரும் தயங்கக் கூடாது. ஆனால், ஆங்கிலத்துக்குத் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒப்படைப்பது சரியானதா?" என்று அவர் சொல்லச் சொல்ல, உள்ளக் கொதிப்பு அதிகமானது.

"எத்தனையோ மாதங்கள் வெளிநாட்டில் அலைந்து திரிந்து ஆங்கிலத்தில் மிதந்து வந்த நான், தாய்த் திருநாட்டில் அழகு தமிழில் பேசப்போகும் மகிழ்ச்சியில் வந்து இறங்கினால், இந்த ஊர் நாளுக்கு நாள் ஆங்கில மோகத்தில் அடிமையாகிக்கொண்டே போகிறதே!" என்று வருத்தப்பட்டார்.

இதைத்தான் கவிஞர் காசி ஆனந்தன் பல ஆண்டுகளுக்கு முன்னால், 'தமிழா, நீ பேசுவது தமிழா' என்று கவிதையாகக் கேள்வி கேட்டார்.

நம்முடைய தாய் மொழியை அநாதையாகத் தள்ளிவிட்டோம். தமிழ் படிச்சா என்னங்க கிடைக்கும்... ஒப்புக்கு ஒரு வேலையும் கிடைக்காது. மரியாதையாச் சொல்லிக்கிற மாதிரி சம்பளமும் கிடைக்காது... 'இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட் சார் நான், எனக்கு எதுக்கு தமிழ்? அதெல்லாம் பொலிட்டீஷியன்ஸ் பேசுவாங்க. எங்க அப்பா பேசுற தமிழ் எனக்குப் புரியுற அளவுக்கு நாலெட்ஜ் இருந்தாப் போதாதா?' என்பதே இன்றைய இளைஞர்களின் பதிலாக இருக்கிறது. தமிழ், இன்றைய தலைமுறைக்கு அவசியமான ஒன்று என்பதை உணர்த்தத் தவறியது குற்றமா... அல்லது, தாய்மொழியைப் படிப்பது கேவலம் என்று கருதும் இவர்களின் நினைப்பு குற்றமா?

டமிழன்!

சார், யெஸ், நோ, மேடம், மிஸ், ப்ளீஸ், ஸாரி, டிராஃபிக், ஹாட், கூல், ஃபோர், டாடி, மம்மி, குட்மானிங், குட் நைட், வெரிகுட், தேங்க்ஸ், பாய்ஸ், கேர்ள்ஸ், ஸ்மார்ட், ஹாபி, ஓல்டு மேன், வாட்டர், ரெஸ்ட், லேட், ஹேப்பி, அங்கிள், ஆன்ட்டி போன்ற பல வார்த்தைகள் கலக்காமல், யாரா லும் பேச இயலவில்லை. "நாங் கள் கன்னித் தமிழ் பேசினோம். ஆனால், இன்றைய இளைஞர்கள் கட் பண்ணி, மீட் பண்ணி... என்று பண்ணித் தமிழ் பேசுகிறார்கள்" என்று கிண்டல் அடித் தார் அப்துல் ரகுமான். தமிழ் தெரிந்த, பேசும் இளைஞர்களுக் குக்கூட சரியான உச்சரிப்பு வர வில்லை. நுனி நாக்கில் தமிழ் பேசி... நளினத்தைத் தேவையில்லாமல் குழைத்து... 'டமிழ்' தடுமாறுகிறது.

"இன்றைய இளைஞர்களுக்குத் தமிழ் ஆர்வம் இல்லாமல் போனதற்குக் காரணம், தமிழை முன்நிறுத்தி மக்களை ஈர்க்க வேண்டிய இயக்கங்கள் இல்லாததும், அப்படி ஈர்க்கக்கூடிய இயக்கங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதும்தான்" என்கிறார் பேராசிரியர் கல்யாணி. "நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் அப்படிப்பட்ட இயக்கங்கள் இந்த நாட்டில் இருந்தன. அவர்களை நாங்கள் நம்பினோம். அரசியல் ஆர்வமானது எங்களுக்குத் தமிழ் ஆர்வத்தையும் விதைத்தது. அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் மாணவர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், இன்று அப்படி இல்லை. தமிழைச் சொல்லி வளர்ந்த தலைவர்கள், ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, எங்களுக்கு இரு மொழிக் கல்வியைத்தான் தீர்வா கக் காட்டினார்கள். தமிழ்நாட்டுக்கு தமிழ், அகில இந்தியத் தொடர்புக்கு ஆங்கிலம் என்று சொல்லிக்கொடுத்தார்கள். அதாவது, இந்திக்கு மாற்றாக ஆங்கிலம் இங்கு நிலைநிறுத்தப்பட்டது. இங்குள்ள மாநில ஆட்சியை முழுமையாகத் தமிழ்மயப்படுத்தத் தவறினார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வியையே வலியுறுத்தினார்கள். இது ஆங்கிலத்தை முழுமையாக, தவிர்க்க முடியாத சக்தியாக இன்று கொண்டுவந்து இருத்திவிட்டது" என்கிறார் கல்யாணி.

குழந்தைகள் உரிமைக்கான முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த தேவநேயன், "நம்முடைய அடிமனத்தில் இருக்கும் கற்பிதங்கள்தான் இதற்குக் காரணம். வெள்ளை நிறம் மேன்மையானது, வெள்ளைதான் அழகு, வெள்ளைக்காரன்தான் சிறந்தவன், அவன் பேசும் மொழி உயர்வானது என்று நினைக்கிறார்கள். 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்த பிள்ளைக்குச் சொந்தமாக ஆங்கிலக் கட்டுரை எழுதத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியாத பிள்ளைகள் வகுப்பறைகளில் ஆசிரியர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலம் 26 எழுத்துதான், தமிழில் 247 எழுத்து என்று சிலர் சலித்துக்கொள்கிறார்கள். ஆனால், 5 ஆயிரம் எழுத்துகொண்ட ஜப்பானிய மொழியைத்தான் அந்நாட்டவர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். எங்கும் கன்னட மொழிதான் என்று கர்நாடக மாநிலம் மாறிவிட்டது. மிகப் பெரிய செல்போன் நிறுவனம் தனது விளம்பரங் களை அங்கே, கன்னடத்திலும் இங்கு ஆங்கிலத்திலும் எழுது கிறது. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியபோது, ஒருவேளை அங்கு மனிதன் இருந்தால் என்ன மொழியைப் பேசுவான் என்பதை ஆராய்ந்து 14 மொழிகளைக் கணக்கிட்டார்கள். அதில் ஒன்று, தமிழ். நிலவில் ஒருவேளை மனிதன் இருந்தால், தமிழ் பேசுகிறவனாகக்கூட இருப்பான் என்று நினைத்தார்கள். ஆனால், நிலத்தில் தமிழே பேச வராத தலைமுறை உருவாகி வருகிறதே" என்கிறார் தேவநேயன்.

காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். தமிழ்ப் பற்றாளர்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்... 'தங்களது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொள்வோம், குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை வைப்போம், தமிழில் கையெழுத்துப் போடுவோம், பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழில் இருக்கட்டும், கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யுங்கள், திருமணம் முதலிய நிகழ்வுகளைத் தமிழில் நடத்துங்கள், ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழில் பேசுங்கள், தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் தமிழில் மட்டுமே பேசுங்கள்.'

வெல்க தமிழ்!

டமிழன்!
டமிழன்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism