காரணங்கள், கணினியின் வலுவையும் மீறி ஏகப்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் இயக்குவது, கணினியின் மெமரியைச் சரிவர உபயோகிக்க முடியாத / சோதிக்கப்படாத மென்பொருட்களை இயக்குவது, வைரஸ் தாக்குதல். இப்படிச் சில...
'எனக்கு இந்தப் பிரச்னை வந்ததே இல்லை. ஏன்னா, நான் 'ஆப்பிள்'தான் கடிக்கிறேன்' என்று பின்னூட்டமிடத் துடிக்கும் சிறுபான்மை கணினி பயனீட்டாளர்களுக்கு ஒரு முக்கியப் புள்ளிவிவரம். உலகத்தின் மேசைக் கணினிகளில் 95 சதவிகிதம் இன்னும் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் கணினிதான். இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை என்றாலும், பிரச்னை வருவதற்கு முன், புயல் அறிவிப்புபோல 'இப்படி நடக்கப் போகிறது' என்று தெரிந்துகொண்டால், அதைத் தவிர்க்கலாமே எனத் தவித்த அனுபவம் உண்டு என்றால், உங்களுக்கு நற்செய்தி சில பாராக்களில் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு வரை, கணினிகள் அலுவலகங்களிலும், வீடுகளிலும் வாங்கி வைக்கப்பட்டு, தனித் தீவுகளாக இயக்கப்பட்டு வந்த காலம் உண்டு. கணினி என்றால் இணையத்துடன் இணைக்கப்பட்டுதான் இருக்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்ட இந்நாட்களில், பயனீட்டாளர்களின் பயன்பாட்டு விவரங்களைத் தொடர்ந்து திரட்டி, அதன் மூலம் கிடைக்கும் அறிவைப் பயன்படுத்தி, உங்களது கணினியை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைக் கணித்து, பிரச்னையை முன்னறிந்து சொல்லிவிடலாம் என்ற ஐடியாவின் மீது கட்டப்பட்ட நிறுவனம் ஒன்று, இந்த வாரம் இணைய சந்தைக்கு வந்திருக்கிறது. நிறுவனத்தின் உரலி new.soluto.com
|