Published:Updated:

நாங்க ஜெயிப்போம்!

நாங்க ஜெயிப்போம்!

நாங்க ஜெயிப்போம்!

நாங்க ஜெயிப்போம்!

Published:Updated:

"நாங்க ஜெயிப்போம்!"
நாங்க ஜெயிப்போம்!
நாங்க ஜெயிப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இர.ப்ரீத்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு.
நாங்க ஜெயிப்போம்!
நாங்க ஜெயிப்போம்!

ங்க ஊர் பொண்ணு அவ. என்னைப் பார்த்து ஆசைப்பட்டு தயக்கம் உடைச்சு துணிஞ்சு பி.எல். படிப்பு சேர்ந்தா. அவளைக் காதலிக்கிற மாதிரி நடிச்ச எங்க ஊர்க்கார மேல் சாதிக்காரப் பையன், அவளை நாலு பேரோடு சேர்ந்து கடத்திட்டுப் போயிட்டான். மாதவிடாய் காலம்னுகூடப் பார்க்காம அடுத்தடுத்து நாலு பேரும் அவளைச் சீரழிச்சிருக்காங்க. மயங்கிக்கிடந்தவளை அப்படியே விட்டுட்டுப்

போயிட்டானுங்க.

மயக்கம் தெளிஞ்சு குத்துயிரும் குலையுயிருமா நகர்ந்து ரோட்டுக்கு வந்தவளை ஒரு பஸ் டிரைவர் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காரு. விஷயம் கேள்விப்பட்டு நான் அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செஞ்சேன். சீனியர் வக்கீல் மூலமா அவளுக்குச் சட்டரீதியான பாதுகாப்பை அளிக்கவும் ஏற்பாடுகள் பண்ணிட்டு இருந்தோம். அப்ப அந்தப் பையன் தரப்புல இருந்து தடித்தடியா நாலஞ்சு பேரு எங்க வீட்டுக்கு வந்து, 'உங்க பொண்ணைச் சும்மா இருக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, அவளுக்கு ஏற்பட்ட கதிதான் இவளுக்கும்'னு மிரட்டிட்டுப் போனாங்க.

நான் அதுக்கெல்லாம் பயப்படலை. ஆனா, என்ன நடந்துச்சுன்னு தெரியலை. கடைசி நேரத்துல பாதிக்கப்பட்ட அந்தப் பொண்ணு வாக்கு மூலம் கொடுக்கலை. அன்னிக்குத்தான் நான் ரொம்ப மனசு உடைஞ்சுட் டேன். பாதிக்கப்பட்டவங்க தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவங்களா இருந்தா, தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லிட்டு, துக்கத்தைத் துடைச் சுக்குற நிலையில இருந்து மீள வழியே இல்லையான்னு நினைச்சு நினைச்சு எனக்கு அழுகையா வந்துச்சு. இனிமே யாரும் அந்த மாதிரி அழக்கூடாதுன்னு தாங்க நாங்க ஓடிக்கிட்டே இருக்கோம்!"- குரலில் சின்ன சோர்வு எட்டிப் பார்த்தாலும் கண்களில் மினுங்கும் நம்பிக்கையுடன் உற்சாகமாகப் பேசுகிறார் தெய்வம்மாள்.

நாங்க ஜெயிப்போம்!

24 வயதான இந்தச் சட்டக் கல்லூரி மாணவி மீது இதுவரை ஆறு எஃப்.ஐ.ஆர்கள் பதிவாகி இருக்கின்றன. அதில் இரண்டு ஆள் கடத்தலுக் கானவை. மதுரை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் இவர் மூன்று முறை சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். தலித் சமுதாயத்தில் பிறந்ததற்காகவும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்டதற்காகவும் தெய்வம்மாளுக்குக் கிடைத்த பரிசுகள் இவை.

"உசிலம்பட்டி பக்கம் வடக்கம்பட்டி கிராமம் எனக்கு. அந்தக் கிராமத்துல எங்க தலித் இனத் தைச் சேர்ந்த பெண்களை உயர் சாதிக்காரப் பசங்க காதலிக்கிற மாதிரி நடிச்சு ஆசை காட்டி கர்ப்பம் ஆக்கிருவாங்க. அப்புறம் பஞ்சாயத்துல 'ஐயா, இந்த மாதிரி தெரியாம தப்பு நடந்து போச்சு. அபராதம் எம்புட்டுனாலும் கட்டிர் றோம். இனிமே அந்தப் பொண்ணு முகத் துலகூட முழிக்க மாட்டேன்'னு பவ்யமா சொல்லிட்டுப் போயிருவாங்க. இப்படி பாதிக்கப்படுற பொண்ணுகளோட எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானதே தவிர, ஒரு பையனுக்குக்கூட தண்டனை கிடைக்கலை. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... ஒருத்தனை எவ்வளவு தூரம் நம்புனா கல்யாணத்துக்கு முன்னாடியே அவனுக்குத் தன்னை ஒப்படைப்பா ஒரு பொண்ணு. ஆனா, மறு நாளே அவன் 'சாய்ச்சுப்புட்டோம்ல மக்கா'னு ஊர் மந்தையில உக்காந்து பெருமை பேசிட்டு இருந்தா, அவளுக்கு எப்படி இருக்கும். இந்தக் கொடுமைக்குலாம் ஒரு முடிவு கட்ட நமக்கு நாமே போராடக் கத்துக்கிடணும்னு தோணுச்சு. அதுக்கு வக்கீல் படிப்பு படிக்கிறதுதான் சரின்னு தோணுச்சு. படிப்பு முடிஞ்சதும்தான் நமக்கு வேலை இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அதுவரைக்குமே தாங்க முடியலை. நான் நல்லபடியா படிப்பை முடிச்சுரக் கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டே ஒரு கும்பல் ஊருக்குள்ள உலாத்துது. இப்ப நான் இந்தப் படிப்பை நல்லபடியா முடிக்கிறதே என் வாழ்நாள் சாதனை மாதிரி ஆயிருச்சு!" வேதனை ஒளிந்திருக்கும் புன்னகை நழுவுகிறது தெய்வம்மாளிடம் இருந்து.

"நான் கல்லூரி வகுப்புகளுக்குப் போனதைவிட போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ்னு அலைஞ்சது தான் அதிகம். உசிலம்பட்டி பக்கத்துக் கிராமத்துல தலித் மக்களுக்கு நிலப்பட்டா கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் கலெக்டர் ஆபீஸுக்கும் ஒரு வருஷம் நடையா நடந்ததுல ஒவ்வொருத்தருக்கும் மூணு சென்ட் நிலப்பட்டா கிடைச்சிருக்கு. எங்க போராட்டங்களுக்குக் கிடைச்ச முதல் வெற்றி. சாலை வசதிக்குனு அரசாங்கம் ஒதுக்குன தொகையை இன வாரியா பிரிக்கும்போது, தலித் இனத்துக்கு ரொம்பக் குறைஞ்ச பணத்தை ஒதுக்கியிருக்காங்க. அதை ஒரு வக்கீலா தட்டிக் கேட்ட என் சீனியர் சுரேஷை சைக்கிள் செயினால் அடிச்சுத் துவைச்சு, 'ஏன்டா... ப... பயலே... எங்களை எதிர்த்தே கேள்வி கேக்குறியா? இனிமே எவனாவது கேள்வி கேட்டா இதுதான்டா தண்டனை'ன்னு சொல்லி வாய்ல மலத்தைத் திணிச் சிருக்காங்க. அவரை நாங்க மருத்துவமனையில சேர்த்துட்டு, 40 பேரா சேர்ந்து சாயங்காலம் 4 மணில இருந்து மறு நாள் காலை வரை சாலை மறியல் பண்ணோம். எஃப்.ஐ.ஆர்ல என் பேர் பதிவு செய்யப்பட்டதோடு, ஒருநாள் ஜெயில் வாசம் கிடைச்சது. ஆனா, எங்க போராட்டம் காரணமா கேஸ் வலுவ டைஞ்சிருக்கு. நிச்சயம் தப்பு செஞ்சவங்களுக்குத் தண்டனை கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை.

நான் படிச்சு முடிச்சு எதுனா நல்ல வேலைக்குப் போயி கல்யாணம், குழந்தை குட்டின்னு செட்டில் ஆயிரலாம். ஆனா, அது என் கனவு கிடையாது. என் லட்சியத்தை அடைய நான் இன்னும் ரொம்ப தூரம் போகணும். பாதையும் கரடுமுரடா இருக்கு. ஆனா, நிச்சயம் நான் நினைச்சதை அடைவேன்னு நம்பிக்கை எனக்குள்ள இருக்கு. அதுதான் என்னைச் செலுத்திட்டு இருக்கு. நான் ஜெயிப்பேன்... இல்லையில்லை நாங்க ஜெயிப்போம்!"- அழுத்தமாகச் சொல்கிறார் தெய்வம்மாள்.

நாங்க ஜெயிப்போம்!
நாங்க ஜெயிப்போம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism