Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீ வரலையா... வட போச்சா?!
நானே கேள்வி... நானே பதில்!

"கற்பனையை மிஞ்சிய அனுபவம் உண்டா?"

"உண்டே! முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திரப் பிரசாத், பீகார் மாகாணத்தில்தேர் தல் நேரத்தில் ஓட்டு கேட்கச் சென்றபோது, ஒரு குடிசையில் ஏழைப் பெண் ஒருவர் வசிக்கிறார். அவ ரைப் பார்த்து ஓட்டு கேட்கிறார் ராஜேந்திரப் பிரசாத். அவருடைய மகள் உள்ளே இருப்பதுஅறிந்து, அவரைப் பார்த்து ஓட்டு கேட்கவும் விரும்புகிறார். காத்திருக்கச் சொல்கிற அந்தத் தாய் உள்ளே சென்ற ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, வெளியே வருகிறார் மகள். இருவரையும் ஒருசேர சந்தித்துப் பேச வேண் டும் என்று நினைக்கிறார் ராஜேந்திர பிரசாத். ஆனால், அது முடியவில்லை. சிந்தித்துப் பார்த்த அவருக்கு ஓர் உண்மை புரிகிறது. தாய்க்கும் மகளுக்கும் இருப்பது ஒரே புடவை!"

- ஸ்ரீநிகே, சென்னை-75.

"எப்போது எழுத்து மனதைத் தைக்கும்?"

"உண்மைகளை அச்சு அசலாக எழுதும்போது.சமீபத்தில் நோபல் பரிசுபெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அனடோல் பிரான்சின் 'தாசியும் தபசியும்' என்னும் நூலைப் படித்துக்கொண்டு இருந்தேன். மரணம் குறித்த அவரது கீழ்க்கண்ட வார்த்தைகள், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நெடுநேரம் யோசிக்கவைத்தன. அந்த வரிகள், "என்னுடைய மரணம் என்னிடமேஉள் ளது. அதை நான் உணராவிட்டாலும், என்னிடம்தான் இருக்கிறது. அதைக் கண்டு நான் பயப்படவும் வேண் டியது இல்லை. ஏற்கெனவே வந்துவிட்டதைஇனி மேல் வரப்போவதாக எண்ணிப் பயப்படுவது முட்டாள்தனம் அல்லவா? நான் படித்துக்கொண்டு இருக்கிற, ஆனால் இன்னமும் முடிக்காத புத்தகத்தின் கடைசிப் பக்கத்தைப் போன்றது அது!"

- கி.ராமச்சந்திரன், திருநெல்வேலி.

"பா.ம.க?"

"ஒரே ஒரு குழப்பம். 'தம்பி டீ இன்னும் வரலை' என்று சொல்வதா... 'வட போச்சே' என்பதா?

- நவீன் சித்தார்த், சென்னை-18.

"கலைஞர் முதல்வராக எம்.ஜி.ஆர் உதவியதாக அவரே ஒப்புக்கொண்டாரே. பதிலுக்குக் கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு என்ன செய்தார்?"

"என்ன சார் அப்பாவித்தனமாக இப்படி ஒரு கேள்வி? பதிலுக்கு 13 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர் முதல்வராக நீடிக்க கருணாநிதி (மறைமுகமாக) உதவவில்லையா? இப்போது, கருணாநிதிக்கு ஜெயலலிதாவின் டர்ன்!"

- எஸ்.மலர்க்கொடி, சென்னை 112.

"கலைஞர் டி.வி, இசையருவி, சிரிப்பொலி, கலைஞர்செய்தி கள், அடுத்து குழந்தைகளுக்காக சித்திரம் தொலைக்காட்சியும் வந்துவிட்டதே?"

"சத்தம் போட்டுப் பேசாதீர்கள், ஐந்து தொலைக் காட்சிகள் மூலம் மக்களை மகிழ்விப்பதற்காக அடுத்த பாராட்டு விழா ஐடியா ஆகும் அபாயம் இதில் இருக்கிறது!"

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

"'ஒரு தொண்டரைக்கூட நான் இழக்க விரும்பவில்லை' என்கிறாரே ஜெயலலிதா?"

"ஒருவேளை கூட்டம், கூட்டமாக அனுப்புவேன் என்கிறாரோ?"

- ஆர்.சுதா, மதுரை.

நானே கேள்வி... நானே பதில்!

"மனித வாழ்வின் மிகப் பெரிய அவலம் எது?"

"எல்லாமே எண்ணிக்கையாக மாறிப்போவது தான். போபால் விஷ வாயு மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000-க்கும் மேல். பாதிக்கப்பட்ட வர்களோ ஒரு லட்சத்துக்கும் மேல். வழக்கு நடந் ததோ 26 ஆண்டுகள். இப்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களோ எட்டு பேர்கள்தான். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் அதிகபட்சத் தண்டனையோ வெறுமனே இரண்டு ஆண்டுகள்!"

- எஸ்.நௌஷாத் பேகம், திருப்பூர்.

"தங்கள் கட்சியில் தேசியம், முற்போக்கு என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்பவர்கள் அப்படி நடந்துகொள்வது இல்லையே?"

"அட, விடுங்க பாஸ்! இப்போது குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்ட ஒரு பெண்மணி, 'அகில இந்திய மனித உரிமைகள் கழகம்' நடத்தவில்லையா?"

- கே.நிலோபர், ராமேஸ்வரம்.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism