Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

Published:Updated:

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5 கேள்விகள்

பழ.நெடுமாறனிடம்...

5 கேள்விகள்

"ராஜபக்ஷே இந்தியாவுக்கு வரக் கூடாது என்று இங்கு போராட்டம் நடக்கையில், அவரைச் சந்திக்க எம்.பி-க்கள் குழுவை அனுப்பியுள்ளாரே கருணாநிதி?"

"கருணாநிதியின் கண்துடைப்பு நாடகங்களில் இதுவும் ஒன்று. ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தமிழகம் எங்கும் போராட்டங்கள் வெடிக்கும் என்று அறிவித்த பிறகு, பாவம் இவர் ஏதோ செயல்படுவதாகக் காட்டிக்கொள்வதற்காக எம்.பி-க்கள் குழுவை டெல்லிக்கு அனுப்புகிறார். இதற்குப் பதில் கருணாநிதியே நேரடியாக டெல்லிக்குச் சென்றிருக்க வேண்டும். பிரதமரை நேரில் சந்தித்து, 'முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள்பற்றி ராஜபக்ஷே அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று' என்று கேட்கச் சொல்லி வலியுறுத்தியிருக்க வேண்டும். மத்திய மந்திரி சபையில் தேவையான இலாகாக்களை வாங்குவதற்காக எத்தனை முறை வேண்டு மானாலும் போவார். ஆனால், தமிழினத்துக்காகப் போகவே மாட்டார்!"

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றனிடம்...

5 கேள்விகள்

"தி.மு.க. மட்டுமே அசல் திராவிட இயக்கம். மற்றவை எல்லாம் போலிகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே?"

"முதல்வர் கருணாநிதி, திராவிட இயக்கத்தின் அரசியல் கட்சிகளைப்பற்றித்தான் அப்படிப் பேசியுள்ளார். திராவிடர் கழகம், அரசியல் கட்சி அல்ல; இது ஓர் சமுதாய இயக்கம். எங்களைப்பற்றி அவர் பேசவில்லை!"

இயக்குநர் 'ஜெயம்' ராஜாவிடம்...

5 கேள்விகள்

"நீங்கள் இயக்கி விஜய் நடிக்கும் படத்தில் இருந்து நடிகை ஜெனிலியாவைத் தூக்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளதே... உண்மையா?"

"ஜெனிலியா இலங்கை சென்றதாகச் செய்தி வெளியானதும் தமிழ் உணர்வாளர்கள் என்ற வகையில் நாங்களும் அதிர்ந்தோம். ஆனால், அந்தத் தகவலை ஜெனிலியா மறுத்தார். மே மாதம் முழுவதும் சுவிட்சர்லாந்து நாட்டில் அவர் இருந்துள்ளார். அதனால், நம்முடைய சங்க உத்தரவுபற்றி அவருக்குத் தெரியாது. அதனால் இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தார். கடைசியில் விஷயம் தெரிந்து, இலங்கை செல்வதை ரத்து செய்துவிட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை!"

எஸ்.எஸ்.சந்திரனிடம்...

5 கேள்விகள்

"மேடைக்கு மேடை ஜெயலலிதாவை வறுத்தெடுக்கிறாரே குஷ்பு?"

"குஷ்புவே, உங்கள் தேவைக்காக மைனாரிட்டி முதல்வரை என்ன வேண்டுமானாலும் பாராட்டிக்கொள்ளுங்கள். அதற்காக எங்கள் புரட்சித் தலைவியை விமர்சித்துப் பேச உங்களுக்கு எந்த அருகதையும் யோக்கியதையும் இல்லை. அது சரி, அன்னை தெரசாவால் பாராட்டப்பட்டவர் எங்கள் அம்மா. குஷ்புவால் பாராட்டப்படுபவர் உங்கள் மைனாரிட்டி முதல்வர்!"

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியிடம்...

5 கேள்விகள்

"2011-க்குப் பிறகுதான் ராஜ்யசபா ஸீட் என்று கூறி பா.ம.க-வுக்குத் தி.மு.க. செக் வைத்துவிட்டதே?"

"2013-ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஓர் இடம் வழங்குவதாக தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக் குழுவில் தீர்மானம் போட்டுள்ளார்கள். பா.ம.க-வைக் கூட்டணியில் இணைத்துக்கொண்டோம் என்றும் அறிவித்துள்ளார்கள். வெளிப்படையாக தி.மு.க. அறிவித்த பிறகும், பா.ம.க-வை மதிக்கவில்லை என்று சிலர் தூண்டிவிடுவதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை!"

5 கேள்விகள்
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism