Published:Updated:

தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?

தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?


"தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?"
தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?
தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப.திருமாவேலன்
தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?
தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?

ரசியலில் அடியெடுத்துவைப்பதற்கு முன் திரைப்படங்களில் தலைகாட்டியவர்தான் மகிந்தா ராஜபக்ஷே. அந்தப் படங்கள் இலங்கையில் எப்படி ஓடினவோ... ஆனால், டெல்லியில் அவரது நடிப்பு, பிரமாதம்!

இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிக்கப்பட்டு இருந்த விசாலமான 'ரத்தச்' சிவப்புக் கம்பளத்தில் ராஜபக்ஷே அடியெடுத்துவைக்கிறார். நம் ராணுவ வீரர்கள் கம்பீரமான வணக்கத்தை வைக்கிறார்கள். பாவமாக நின்றுகொண்டு இருக்கும் மகாத்மா காந்திக்குப் பக்கத்தில் செல்கிறார். 'மிக நல்ல நோக்கத்துக்காகக்கூட ஒரு சொட்டு ரத்தம் சிந்த நான் அனுமதிக்க மாட்டேன்' என்று சொல்லிய அந்த உத்தமரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் மகிந்தா மீது, உலகப் பொது நீதிமன்றம், 'போர்க் குற்றவாளி' என்ற விசாரணைக்காகக் காத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையானது, மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை நடத்திக்கொண்டு இருக்கிறது.

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்த மகிந்தா ராஜபக்ஷேவின் பரிவாரம், மவுரியா ஷெராட்டனில் தங்கி இருந்தது. அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழீழ ஆதரவாளர்கள் தமிழகத்தில் கொந்தளித்தார்கள். 'தமிழர்களைத் தங்களது இல்லங்களுக்கு அவர் எப்போது அனுப்ப இருக்கிறார் என்பதைக் கேளுங்கள்' என்று பிரதமருக்குக் கடிதம் அனுப் பினார் முதல்வர் கருணாநிதி. ஆனால், ராஜபக்ஷே வந்தார். தமிழருக்குத் தெளிவானவாக் குறுதி எதையும் வழங்காமல், அவருக்கு வேண்டியதை மட்டுமே வாங்கிக்கொண்டு போனார்.

திரிகோணமலையில் 500 மெகா வாட் அனல் மின் நிலையம் அமைக்க 200 மில்லியன் இந்தியா கடன் உதவி தந்துள்ளது. இலங் கையின் போக்குவரத்து திட்டத்துக்கு 800 மில்லியன் கடன் உதவி தரப்பட்டுள்ளது. பலாலி விமான தளம், காங்கேயன் துறைமுகம், துரையப்பா விளையாட்டுத் திடல் ஆகியவற்றை இந்தியப் பணத்தில் புனரமைப்பு செய்யப்போகிறார்கள். யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையம் அமைக்க உதவி. அவர்களது நாட்டுப் பாதுகாப்பு குறித்து ஆண்டுதோறும் ஆலோசனைகள். விண்வெளித் தொழில்நுட்பம் தொடர்பாக நமக்குக் கிடைக்கும் அத்தனை தகவல்களையும் அவர்களுக்கு வழங்கப்போகிறோம். கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையிலும், தலைமன்னார் - ராமேஸ்வரம் மத்தியிலும் போக்குவரத்துத் தொடங்கி, அவர்களது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை வளர்க்கப்போகிறோம். மட்டக்களப்பில் மகளிர் வர்த்தக நல்லிணக்க நிலையம் மற்றும் சமூகப் பயிற்சி நிலையம் அமைக்க உதவுகிறோம். இவைதான் இந்தப் பயணத்தில் இந்தியாவிடம் இருந்து ராஜபக்ஷே எடுத்துச் சென்றவை.

ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வுபற்றியோ, கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக் குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்தோ, பாதுகாப்பு வளையம் என்று சொல்லி, சொந்த ஊருக்குள் மக்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்பட்டு இருக்கும் நிலையைத் தளர்த்துவதுபற்றியோ, அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றியோ எந்த வாக்குறுதியும் இந்தப் பேச்சில் இல்லை.

ராஜபக்ஷே, தமிழர்களைப்பற்றிப் பேசியது தி.மு.க. கூட்டணி எம்.பி-க்கள் சந்திப்பின்போதுதான். "பல ஆண்டு கால ரணமான பிரச்னை இது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை உலகமே கவனிக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து ஒரு மாநில அந்தஸ்துடன் அதை மாற்ற வேண்டும்" என்று டி.ஆர்.பாலு சொன்னபோது, "அதைப்பற்றி யோசித்து வருகிறேன். ஆனால், எங்கள் கட்சியினர் என்ன சொல்கிறார் களோ அதைக் கேட்ட பிறகுதான் முடிவெடுக்க முடியும்" என்று கையை விரித்துவிட்டார் ராஜ பக்ஷே. "டிசம்பர் மாதத்துக்குள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவதாகச் சொன்னீர்கள். ஏழு மாதங்கள் ஆன பிறகும், 80 ஆயிரம் பேர் இன்னமும் இருக்கிறார்களே?" என்று மறித்தபோது, "நீங்கள் சொல்லும் கணக்கு தவறு. 55 ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள். முகாமுக் கும் வீட்டுக்குமாகப் போய் வருபவர்கள் 25 ஆயிரம் பேர். அந்தக் கணக்குப்படி பார்த்தால், முழுமையாக 30 ஆயிரம் பேர் தான் முகாமில் இருக்கிறார்கள்" என்று புன்னகைத்தார் பக்ஷே.

தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?

"500 கோடி ரூபாய் பணத்தை இந்தியா கொடுத்த பிறகும் நீங்கள் ஏன் வீடு கட்டித் தரவில்லை" என்று நம் எம்.பி-க்கள் கேட்க, "எங்களுக்கு வேறு வேலைகளும் இருக்கின்றன. இரண்டு தேர்தல்கள் அடுத்தடுத்து வந்ததால், எங்களால் வீடுகள் கட்டித் தர முடியவில்லை. இந்தியா இப்போதும் பணம் தருவதாகச் சொல்லியுள்ளது. அது கிடைத்ததும் நான் கட்டித் தருவேன்" என்று சொன்னார்.

"கொல்லாமி என்ற இடத்தில் 4,000 ஏக்கர் நிலத்தை அழித்து ராணுவ முகாம் அமைப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், ஈழத் தமிழர்கள் பயப்படுகிறார்களே?" என்று டி.ஆர்.பாலு கேட்டபோது, "ராணுவ முகாம் அமைப்பது எங்கள் நாட்டுப் பாதுகாப்புக்காக. உங்கள் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் ராணுவ முகாம்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து உங்கள் மாநில மக்கள் பயப்படுகிறார்களா என்ன?" என்று திருப்பிக் கேட்டார் ராஜபக்ஷே. 'பொதுமக்களைக் கொன்றால் இந்த ராணுவத்தைப் பார்த்தும் அப்படித்தான் பயப்படுவார்கள்?' என்று பாலுவுக்குச் சொல்ல வரவில்லை.

காங்கிரஸ் எம்.பி-க்கள். 'ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். வடக்கு, கிழக்கு மாகாணம் இணைப்புதான் அந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம். இலங்கை உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்திருக்கும் தகவல் நம் காங்கிரஸ் எம்.பி-க்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. 'இந்த இணைப்பு சாத்தியம் இல்லை என்று நாங்கள் சொன்னதை இந்தியா ஏற்றுக்கொண்டுவிட்டது' என்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு, டக்ளஸ் தேவானந்தா பேட்டியாகச் சொல்லிவிட்டார். இப்படிப் போலி வாக்குறுதிகள், சமாளிப்புகளுடன் இந்திய எம்.பி-க்களுடனான சந்திப்பை நடத்திய ராஜபக்ஷே, இங்கு வருவதற்கு முன்னால் இலங்கைத் தமிழ் எம்.பி-க்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி இருக்கிறார். அதில் அவரது உண்மையான முகம் வெளிப்பட்டு இருக்கிறது.

"1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு எங்களால் வீடு கட்டித் தர முடியாது. விவசாயம் செய்ய அவர்களுக்கு வசதி செய்து கொடுப்போம். அந்த வருமானத்தில் அவர்கள் வீடு கட்டிக்கொள்ள வேண்டியதுதான்" என்ற ராஜபக்ஷே, "கைதாகிச் சிறையில் இருக்கும் யாருக்கும் பொது மன்னிப்பு கிடையாது. லண்டனில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடக்கிறது. எனவே, நான் யாரையும் மன்னிக்க முடியாது" என்று சொன்னார் ராஜபக்ஷே. மறு நாள் அவரது தம்பியும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷே, முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தார். "உங்கள் வீடு களைக் கட்டிக்கொள்ள கடனோ, நிவாரணமோ தர மாட்டோம். விவசாயத்துக்குத் தேவையான விதைகள் மட்டும்தான் நாங்கள் தருவோம். உங்களுக்காக நாங்கள் கடன் வாங்க முடியாது. அப்படி வாங்கினால் எங்கள் சிங்களவர் அதற் கான வட்டி கட்ட வேண்டி வரும்" என்றார் கறாராக. அதாவது, ராஜபக்ஷேக்களின்உண்மை யான குரல் இதுதான்.

சீனாவை உள்ளே விட்டுவிடக் கூடாது என்பதற்காக இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது இந்தியா. ஆனால், டெல்லியில் இருந்து ராஜபக்ஷே கொழும்பு சென்ற மறு நாள், சீனத் துணைப் பிரதமர் சியாங்க் டிஜியாங்க்கைத்தான் சந்தித்தார். அப்போது மூன்று வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. "இந்தியாவுக்குத் தலையையும் சீனாவுக்கு வாலையும் காட்டும் ராஜபக்ஷேவின் இச் செயல் முட்டாள்தனமானது. இலங்கையின் இந்த நட்பு கண்ணீரில்தான் முடியும்" என்று ஆஸ்திரேலிய ஆலோசகர்களில் ஒருவரான புரூஸ் ஷெய் கூறி இருக் கிறார்.

தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?

ராஜபக்ஷே டெல்லியில் இருக்கும்போது இரண்டு சம்பவங்கள் நடந்தன. வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் வீட்டில் இருந்த ராசலிங்கம், அவரது மனைவி விக்னேஸ்வரி இருவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து வாளால் வெட்டினார்கள். விரலை வெட்டி மோதிரத்தை எடுத்தார்கள். கையைத் துண்டித்து தங்கக் காப்பைக் கழற்றினார்கள். வவுனியா மருத்துவமனையில் ராசலிங்கம் இறந்துபோனார். விக்னேஸ்வரி உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகத் தகவல். ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 30 விசைப் படகுகள் மறிக்கப்பட்டு, தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை இலங்கைக் கடற்படை பறித்திருக்கிறது. படகுகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளன. உயிர் தப்பினால் போதும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் வந்துவிட்டார்கள்.

அதாவது, ஈழத் தமிழருக்கு மட்டுல்ல; இங்கு உள்ள தமிழனின் நிம்மதிக்குக்கூட எதையும் செய்யத் தயாராக இல்லாத ஆட்சியே அங்கு தொடரப்போகிறது. அடுத்த ஆண்டும் ராஜபக்ஷே வருவார். 'என்னை நம்புங்கள்' என்பார். கருணாநிதி கடிதம் அனுப்புவார். நம் எம்.பி-க்கள். சந்திப்பு நடத்துவார்கள். காட்சியும் மாறப்போவது இல்லை. கஷ்டமும் தீரப் போவது இல்லை. தமிழன், சபிக்கப்பட்டவன்!

தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?
தமிழனுக்கு வீடு கட்ட சிங்களவன் வட்டி கட்டணுமா?