Published:Updated:

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!


"6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!"
6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!
6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப.திருமாவேலன், டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி,கந்தகுமார்,குணசீலன்
6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!
6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

கோடிகளைக் கொட்டி கோவையில் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் நிலையில், இதற்கு முன்னால் தமிழுக்காகச் செய்யப்பட்ட காரியங்கள் எந்த அளவில் இருக்கின்றன என்று யோசிக்கலாமே!

நாளிதழ்களின் ஒருநாள் தலைப்புச்செய்தி யாக மட்டுமே முடிந்துபோய் கேட்பாரற்றுக் கிடக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இதற்கு முதல் உதாரணம்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு கோலாகல மாக நடத்தி முடிக்கப்பட்டதும் அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மதுரை யில் இப்படி ஒரு சங்கம் உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். இடமும் ஒதுக்கினார். அதன் பிறகு அவர் கண்டுகொள்ளவில்லை. அவரால் தொடங்கப்பட்டது என்பதால், அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் கவலைப்படவில்லை. எம்.ஜி.ஆரின் அறிவிப் பைச் செய்யது முடிக்க வேண்டிய கடமை அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல், ஜெயலலிதாவும் அதை மறந்துபோனார். இன்று அந்த இடத்தில் கழிவு நீர் ஓடுகிறது.

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

இது தொடர்பாக 'தமிழ்த் தாங்கி' அமைப்பைவைத்துப் போராடி வரும் திரவிய பாண்டியனைக் கேட்டபோது, "1981-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்க 14.15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். தமிழரின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் உட்பட உலகெங்கும் வாழும் தமிழரின் அனைத்துத்திறமை களையும் வெளிப்படுத்தும் ஒரு களமாக, கருவூலப் பெட்ட கமாக இந்த இடம் அமைய வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், 2002-ம் ஆண்டு வரை யாருமே எதையும் கிள்ளிக்கூடப் போடவில்லை. அன்றைய அ.தி.மு.க. ஆட்சி இந்த இடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் பதிவாளர் பெயரில் பதிவு செய்தது. நாங்களும் 'சரி,வேலை துவங்கி விட்டது' என்று மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அதன் பின்பும் ஒன்றும் நடக்கவில்லை.

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

2007-ம் ஆண்டில் தொடர்ச்சியாக மதுரையில் போராட் டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். அதன் பிறகு, தமிழக அரசு இதற்கென ஓர் அதிகாரிகள் குழுவைஅமைத்து ஆய்வு நடத்தியது. தொடர்ந்து அடிக்கல் விழாவை நற்றமிழ் விழா என்ற பெயரில் நடத்த 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்தது. பிறகும் எதுவும் நடக்கவில்லை. திடீரென 2008-09 ஆண்டுவாக்கில் மாநகராட்சி சார்பில் அந்த இடத்தின் குறுக்கே கழிவு நீர் வாய்க்காலைக் கட்டி கழிவு நீரை உள்ளே விட்டுவிட்டார்கள். கடந்த ஆண்டு இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. நிதி அமைச்சரான பேராசிரியர் அன்பழகன், 'நடப்பு ஆண்டு பட்ஜெட்டிலேயே உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பதற்காக 14 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துவிட்டோம்' என்று பதில் அளித்தார். தமிழக அரசைப் பாராட்டி மதுரைமுழுவதும் சுவரொட்டி ஒட்டினோம். பிறகு, மதுரையில் அதிகாரிகள் இதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். அதோடு சரி. இன்று அந்த இடம் சீரழிந்துகிடக்கிறது" என்கிறார்.

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் அன்பழகன், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பெயரை 'தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் சங்கம்' என்று மாற்றி, தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் காட்சியகம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அமைக்கப்பட்ட பிறகுதான் அதை நம்ப முடியும்.

இப்படி, 30 ஆண்டுகளாக சுமார் 14 ஏக்கர் நிலத்தைத் தமிழின் பெயரைச் சொல்லி தரிசாகப் போட்டிருந்ததுதான் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களால் தமிழ் அடைந்த பயன்!

அடுத்து நம் நினைவுக்கு வருகிறது...சென்னை யில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இது இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்திய பணத்தில் மீதி இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை முன்தொகையாகவைத்து, முதல்வர் கருணாநிதி 1971-ல் தொடங்கினார். இன்று சென்னை தரமணியில் இதற்கான கட்டடம் இருக் கிறது. ஆனால், எப்போது இடிந்து விழுமோ என்ற பரிதாபமான நிலையில் இருக்கிறது. தமிழ்த் துறை தொடர்பான எத்தனையோ அரிய புத்தகங்கள் கொண்ட நூலகம் அங்கு இருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளன. அவற்றை மழைக் காலத்தில் காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கிறது. சரியான இடவசதி இல்லாததால் புத்த கங்களை மேலே மேலே அடுக்கி எதையும் எடுக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறார்கள். புத்தகங் களை டிஜிட்டல் ஆக்கும் வேலையும் பாதியோடு நின்றுவிட்டது. நூலகம் அமைப்பதற்காக சிவந்தி ஆதித்தன் கட்டிக் கொடுத்த இடத்தையும் சேமிப்புக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்து... இதனால் ஆராய்ச்சிசெய்ய வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து, அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நோக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. 'நிறுவ னத்தின் உள்கட்டமைப்பு வேலைகளுக்காக மூன்று கோடி ரூபாய்க்கு திட்டச் செலவுக் கணக்கை அரசிடம் கொடுத்துள்ளார்கள். ஆனால், இன்னும் அனுமதி வரவில்லை' என்று சொல்லப்படுகிறது.

தலைநகரத்தில் இயங்கும் நிறுவனம் இப்படி இருக்கிறதென்றால்... தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நிலை?

தஞ்சை - திருச்சி சாலையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது இந்தப் பல்கலைக் கழகம். பல துறைகளிலும் கள ஆய்வு வழியாக ஆராய்ச்சி நடத்துபவர்கள் மட்டுமே இங்கு நுழைய முடியும். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளைப் பாதுகாப்பது, மொழிபெயர்ப்பது, கல்வெட்டுக்களை ஆய்வு செய்து தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது, உலகத் தரம் வாய்ந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதுபோன்ற நோக்கங்களை இதன் அடிப்படையாக அறிவிக்கப்பட்டது. முனைவர், முது முனைவர் ஆய்வு மட்டுமே இருந்தது.ஆனால், இன்று அதையே பி.ஏ., எம்.ஏ., படிக்கும் கல்லூரி மாதிரி ஆக்கிவிட்டார்கள். பல்கலைக்கழகத்துக்குத் தேவை யான அளவுக்கு நிதி ஒதுக்கப்படாததால், கள ஆய்வு கள் குறைந்துவிட்டன. ஆய்வாளர்களின் ஆய்வேடுகளும் அச்சுக்கு வந்து வெளியிடும் வேலையிலும் சுணக்கம்.

"டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள்கூட இங்கு நடக் கக் கூடாது. அந்தப் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் கூடி தமிழ் ஆய்வுகளைத் தொடர வேண்டிய மைய மாக அது அமைய வேண்டும் என்றுதான் அறிஞர் வி.ஐ.சுப்பிரமணியம் திட்டமிட்டார். ஆனால், அது காலப்போக்கில் குறைந்து, பட்டம் வாங்கும் இடமாக மாறிப்போனது. ஒரு புத்தகம்கூட எழுதாத ஒருவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி மூன்று ஆண்டு கள் முடிந்து போகும் நிலை, அந்தப் பல்கலைக்கழகத்தின் தகுதி எப்படித் தரம் தாழ்ந்துவிட்டது என்பதற்கான உதாரணம்" என்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் நிலவும் கவலையாக இருக்கிறது.

ஆய்வு நிறுவனங்களில் இருந்து பள்ளிக்கூடங்கள் குறித்து யோசித் தால்...

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுமார் 7,000 தமிழாசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலி யாக இருக்கின்றன. ஆனால், தமிழ் படித்துவிட்டு 25 ஆயிரம் பேருக்கு மேல் முறையான வேலை கிடைக்காமல், தெருவில் அலைகிறார்கள். தமிழகத் தமிழாசிரியர் கழகத் தலைவராக இருக்கும் ஆறுமுகம் சொல்லும் புள்ளிவிவரங்கள் கவலையை அதிகப் படுத்துகின்றன. "தமிழ்நாட்டில் 772 மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைத் தமிழ் ஆசிரியர்கள் ஒன்பது ஆண்டு களாக இல்லை. இப்போது 96 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி இருக்கி றார்கள். அந்தப் பள்ளிகளுக்கும் தமிழ் ஆசிரியர்கள் இல்லை. உயர் நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை, சுமார் 200 பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை. நடுநிலைப் பள்ளிகளின் நிலைமை இன்னமும் மோசம். மொத்தம் உள்ள 7,800 நடுநிலைப் பள்ளிகளில் 600 பள்ளிகளுக்குத்தான் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். செகண்டரி கிரேடு டீச்சர்களைவைத்து தமிழ் சொல்லித் தருகிறார்கள்.அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் படி ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆகியவற்றுக்கு அந்தப் பாடத்தைப் படித்தவர்களை மட்டும்தான் ஆசிரியர் களாக நியமிக்க வேண்டும் என்று இருக்கும்போது, தமிழுக்கு மட்டும் செகண்டரி கிரேடு ஆசிரியர்கள் நடத்தலாம் என்பது என்ன நியாயம்?" என்று கேட்கும் ஆறுமுகம்,

"முறையான தமிழ் படித்த தமிழ் ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படும் போதுதான் மாணவர்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். சும்மா ஒப்புக்கு வாசிக்கும் ஆசிரியர்கள் தமிழின் சுவையை உணர்த்த முடியாது. தமிழ் ஆர்வம், கற்பனைத் திறன், தமிழில் எழுதும் ஆற்றல் மாணவர்களுக்குக் குறைந்துபோகக் காரணமே பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததால்தான்" என்கிறார்.

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

வேலை இல்லாத பட்டதாரித் தமிழ் ஆசிரியர்கள் தங்களுக்கென ஒரு சங்கமே வைத்திருக்கும் சோகமும் இந்த நாட்டில்தான் நடக்கிறது. சென்னையில் இதுவரை ஏழு தடவை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். தஞ்சைப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். முதல்வரை ஒரு தடவை சந்தித்தார்கள். துணை முதல்வரை மூன்று முறை சந்தித்திருக்கிறார்கள். அதிகாரிகளுடனான சந்திப்புக்கு அளவே இல்லை. "புலவர் பட்டயம் படித்தோம். அதை ஒரு பட்டமாகக்கூட அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தாய் மொழி வாழவைக்கும் என்று நம்பிப் படித்த நாங்கள் தெருவில் நிற்கிறோம்" என்று சொல்கிறார் இந்த அமைப்பின் தலைவர் ராமு.

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!

அவருக்கு என்ன வயது இருக்கும் என்று கேட்கவில்லை. "உங்க காலை பிடிச்சு கெஞ்சிக் கேட்கிறேன்யா" என்று அவர் கதறியது தமிழ்த் தாயின் கதறலாகவே இருந்தது. தமிழ் படித்துவிட்டு ஒரு கூட்டம் வேலை இல் லாமல் அநாதையாக அலைய... முறையான தமிழைப் படிக்க முடியாமல் இளம் மாணவர்கள் திணற.... அதுபற்றிய கவலையே இல்லாமல் 'தமிழ் வாழ்க' முழக்கம் மட்டும் கேட்கிறது!

6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!
6 ஆயிரம் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை!