Published:Updated:

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு


நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரைட்டர்
படங்கள்: என்.விவேக், 'ப்ரீத்தி' கார்த்திக்
நோட்டீஸ் போர்டு

ரயில்வே கார்டு ராஜசேகரன்!

நோட்டீஸ் போர்டு

கடவுள் மனித வடிவில் வருவார் என்று சொல்வதற்குச் சமீபத்திய உதாரணம், ரயில்வே கார்டு டி.ராஜசேகரன். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் - பேரணி அருகே வைக்கப்பட்ட வெடிகுண்டு காரணமாக 98 செ.மீ. ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது. குண்டு வெடித்த சத்தமும், அதனால் தண்டவாளத்தில் ஏற்பட்ட அதிர்வுகளையும் உணர்ந்தார் சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் கார்டாக இருந்த ராஜசேகரன். "ஏதோ ஒரு சத்தமும் அதனால் தண்டவாளத்தில் அதிர்வையும் உணர்ந்தேன். உடனே அருகில் இருந்த ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்தேன்" என்கிறார் ராஜசேகரன். ஒரு தனி மனிதனின் நுண்ணறிவு 2,800 உயிர்களைக் காத்திருக்கிறது!

முண்டகக்கண்ணி அம்மனுக்கு 13 லட்சம்!

நோட்டீஸ் போர்டு

சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலுக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் அன்னதான மண்டபத்தை முதல்வர் கருணாநிதியின் பேத்தி (செல்வியின் மகள்!) வழங்கி இருக்கிறார். தயாளு அம்மாளும் ஸ்டாலினும் இதைத் திறந்துவைத்தார்கள். தாத்தாவையும் விழாவுக்கு அழைத்திருந்தார்களாம். 'வீண் சர்ச்சை வரும்' என்று மறுத்துவிட்டாராம். ஏதோ நேர்த்திக் கடன் என்று காதைக் கடிக்கிறது உடன்பிறப்பு!

சிம்பு குட்!

நோட்டீஸ் போர்டு

தமிழ் சினிமாவில் முன்னேர் பிடித்த அத்தனை பேரிடமும் மனமார வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' படம் பார்த்த மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலசந்தர், சேரன் நான்கு பேரும் சிம்புதேவனுக்குத் தனித் தனியாகக் கடிதம் எழுதிப் பாராட்டி உள்ளார்களாம். 'இத்தனை பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைவைத்து எப்படி வேலை வாங்கினீர்கள்?' என்றுதான் அத்தனை பேரும் வியந்திருக்கிறார்கள். "இந்தப் பாராட்டு தனிப்பட்ட எனக்குக் கிடைத்ததாகக் கருதவில்லை. இந்த மாதிரியான மாற்றுப் பாதையில் சினிமா வைச் செலுத்த விரும்புபவர்களுக்கான ஊக்க சக்தியாக இதை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று பூரிக்கிறார் சிம்புதேவன்!

'குடியரசுக்காகப் பிச்சை எடுத்தோம்!'

நோட்டீஸ் போர்டு

பெரியார் நடத்திய 'குடியரசு' பத்திரிகையில் வெளியான எழுத்துக்கள் திராவிடர்

கழகத் தலைவர் வீரமணிக்குச் சொந்தமானதா அல்லது மற்றவர்கள் வெளியிடலாமா என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த சட்டப் போராட்டம் இந்த வாரம் முடிவுக்கு வந்தது. உடனேயே பெரியார் திராவிடர் கழகத்தினர், தாங்கள் அச்சடித்து வைத்திருந்த 27 தொகுதிகளை வெளியிட்டுவிட்டார்கள். அந்த விழாவில் பேசிய கோவை ராமகிருஷ்ணன் ஒரு சம்பவத்தைச் சொன்னார்... "நான் மாணவனாக இருந்தபோது விடுதலை பத்திரிகையில் பெரியார் ஒரு தலையங்கம் எழுதினார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதைத் துண்டுப் பிரசுரமாகப் போடலாமா என்று பெரியாரிடம் கேட்டேன். 'தாராளமாப் பண்ணுங்க. என் கொள்கையைப் பரப்புறதுக்காக யாரு எதைச் செய்தாலும் அதுக்குத் தடையே இல்ல தம்பி' என்றார். 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் அளித்த தீர்ப்பு இது. எங்களிடம் பணம் இல்லை. ஆனாலும் பிச்சை எடுத்து வெளியிடுகிறோம்" என்றார் ராமகிருஷ்ணன்!

புலியைப் பார்த்ததும் சீற்றம்!

நோட்டீஸ் போர்டு

ராஜபக்ஷே வருகையைக் கண்டித்து சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. தலைவர்கள் கோஷம் போட ஆரம்பித்தபோது ஒரு பெண், புலிக் குட்டி பொம்மையை எடுத்து வந்து வைகோ கையில் கொடுத்தார். உடனே சீற ஆரம்பித்தார் வைகோ. "விடுதலைப் புலிகள் இயக்கத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஆதரிக்க இந்த வைகோ தயங்க மாட்டான்" என்றபடி போஸ் கொடுத்தார்!

தொழிலும் பிடிக்கும் விலங்கும் பிடிக்கும்!

நோட்டீஸ் போர்டு

இந்தியத் தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் புதிய தலைவராக வந்திருக்கிறார் ஆர்.நந்தினி. இந்தப் பொறுப்புக்கு வரும் இரண்டாவது பெண் இவர். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், சந்திரா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர். இந்த நிறுவனம் டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல், கல்வி எனப் பல துறைகளில் ஈடுபட்டுள்ளது. சமூக சேவையில் ஈடுபாடுகொண்ட நந்தினி, இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், உமன்ஸ் வாலன்டரி சர்வீஸ், கில்டு ஆஃப் சர்வீஸ், கோயம்புத்தூர் மாவட்ட நல சங்கம் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளிலும் பங்கெடுப்பவர். "எனக்குத் தொழிற் புரட்சியும் பிடிக்கும். உயிரினங்களின் மீது பற்றும் உண்டு" என்கிறார்!

நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு
நோட்டீஸ் போர்டு