Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
.
இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

நோபல் பரிசுக்குப் பின் ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங் களைப் பின்னணியாகக்கொண்டு 'த சவுண்ட் ஆஃப் சைலன்ஸ்' என்ற படம் தயாராகிறது. இதில் தாகூராக நடிக்க இருக்கிறார் அமிதாப். சைலன்ட்டா பட்டையைக் கிளப்புங்க!

ட்விட்டரில் எல்லோரும் ஸ்டேட்டஸ் மட்டும் சொல்லிக்கொண்டு இருக்க, நரேன் கார்த்திகேயன் கொஞ்சம் வித்தியாசமாக க்விஸ் போட்டிகள் நடத்தி வருகிறார். வெற்றி பெறுபவர்களுக்கு அவரது ஆட்டோகிராப் போட்ட பரிசுப் பொருட்களை அனுப்பிவைக்கிறார். ட்வீட்டுங்க ட்வீட்டுங்க!

இன்பாக்ஸ்

த்ரிஷா கிட்டத்தட்ட சாக்லேட் அடிமை. எந்த அளவுக்குத் தெரியுமா? சமீபத்தில் ஒரு தெரு நாயைத் தத்தெடுத்தவர், அதற்கு 'கேட்பரி' என்று சாக்லேட் பெயரைச் சூட்டியிருக்கிறார். ச்சோ ச்வீட்!

ஜம்முவில் வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகளைச் சுட்டுத்தள்ளி 'வீரப் பெண்' என விருது வாங்கிய ருக்ஷனா கௌசர், இப்போது தன் பெற்றோரையே எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறார். தனக்குப் பாதுகாப்பாக நியமிக்கப் பட்ட கபீர் என்ற காவலரையே கடந்த ஆண்டு காதலித்துக் கை பிடித்தார் ருக்ஷனா. 'என்னுடைய பெற்றோருக்கு இந்தத் திருமணம் பிடிக்காததால், என்னை வீட்டில் அடைத்துவைத்துச் சித்ரவதை செய்கிறார்கள்' என்று தற்போது புகார் கொடுத்திருக்கிறார் ருக்ஷனா. காதல் தீவிரவாதம்!

சூர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த மறுநாள் சூர்யாவின் தங்கை பிருந்தாவும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். சூர்யா, ஜோதிகா, தியா என மூன்று

இன்பாக்ஸ்

பெயர்களுமே ஒளியைக் குறிப்பதால், மகனுக்கும் அதே அலைவரிசையில் பெயர் தேடுகிறார்கள் மிஸஸ் அன்ட் மிஸ்டர் சூர்யா. 'பிரைட்'டா யோசிங்க!

'அவதார்' வெற்றி பாலிவுட்டிலும் 3D மோகத்தைப் பற்றவைத்துள்ளது. 'ரக்ஷ்' என்னும் ஆக்ஷன் படத்தை 3D-யில் இயக்கவிருக் கிறார் ராம்கோபால் வர்மா. படத் தின் நாயகன் ஜான்

இன்பாக்ஸ்

ஆபிரகாம். 3 இடியட்ஸ் பூமியில் 3D!

டெப்ராலி லோரென்செனா என்கிற பெண்ணைச் சமீபத்தில் வேலையைவிட்டுத் நீக்கியது சிட்டி பேங்க். 'அவரது அழகைப் பிற ஊழியர்கள் ரசித்துக்கொண்டே இருப்பதால், அலுவலகத்தின் பணித் திறன் பாதிக்கப்படுகிறது' என்பது கல்தாவுக்குக் காரணம். 'மிக செக்ஸியாக இருக்கிறார்' என்பதற்காக அமெரிக்காவில் வேலையைவிட்டு நீக்கப்பட்ட முதல் பெண் டெப்ராலி. ஆனால், அம்மணி மீண்டும் போராடி அந்த

இன்பாக்ஸ்

வேலையைத் தக்கவைத்துக் கொண்டார். அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது!

இளவரசர் சார்லஸோடு நிச்சயதார்த்தம் நடந்தபோது, டயானா

இன்பாக்ஸ்

அணிந்திருந்த உடை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. சிலி நாட்டைச் சேர்ந்த டி லா மோடா என்கிற மியூஸியம் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி ரூபாய் கொடுத்து அந்த உடையை ஏலம் எடுத்திருக்கிறது. இருந்தாலும் இறந்தாலும் ஆயிரத்தில் ஒருத்தி!

நடிகைகளில் திவ்யா ஸ்பந்தனா, கொஞ்சம் ஸ்பெஷல். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய மொழிகள் அனைத்தும் எழுத, படிக்க, பேசத் தெரிந்த ஒரே நடிகை. அவங்க உடல் மொழிகூட அழகுதான்!

மீண்டும் கொடநாடுவாசியாகிவிட்டார் ஜெயலலிதா. கொடநாடு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொடுத்த மனுவை படித்துப் பார்த்தவர், 'உருப்படியான விஷயம் ஒன்றும் இல்லை' என்று மூடு-அவுட் ஆகிவிட்டாராம். நீங்களாவது உருப்படியா ஏதாவது செய்யுங்க!

இன்பாக்ஸ்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி ஆரம்பித்ததுமே, 'கால்பந்து வீரர்களின் மனைவி மற்றும் தோழிகளில் சிறந்த அழகி யார்?' என்ற போட்டியும் களைகட்டும். இம் முறை அப்போட்டியில் முதல் இடத் தைத் தட்டிச் சென்றிருப்பவர்... இங்கிலாந்து அணியின் உதவியாளர் டேவிட் பெக்காமின் மனைவி விக்டோரியா. பெக் பெக்கா போதை ஏத்துவாங்கபோல!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்