Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வரவேற்பறை

நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம்
- பேரா.சு.சண்முகசுந்தரம்
வெளியீடு: காவ்யா, 16 - இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24.
பக்கம்: 750 விலை ரூ.500

விகடன் வரவேற்பறை

நாட்டுப்புறத் தெய்வங்களே நம் விருப்பத்துக்கு உரிய தெய்வங்களாக ஆதிகாலம் தொட்டு இருந்து வந்திருக்கின்றன. இவற்றுக்கு நாட்டார் சாமி, கிராமத் தேவதைகள், சிறு தெய்வங்கள் எனப் பல பெயர்கள் இருந்தாலும், நம் பண்பாட்டின் வேர்களாக, மக்களின் அடையாளமாக இருந்து வருவது உண்மை. ஏறத்தாழ 699 நாட்டுப்புறத் தெய்வகளின் உறைவிடம், சிறப்பு, அவற்றின் ஆளுமை, அவற்றைச் சாந்தப்படுத்தும்விதங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் பேராசிரியர் சண்முகசுந்த ரம். ஹைகோர்ட் மகாராஜா, வாழுமுனி, வல்லடிக்காரர், மூதேவி, மேல்மலை கருப்பு, மாங்குடி வேப்பிலைக்காரி என விசித்திரப் பெயர்களில் சில்லிடவைக்கும் பக்தித் தகவல்கள். உங்களின் சிறு தெய்வங் களை இதில் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது!

கேர் ஆஃப்
இயக்கம்: ஜி.ஹரிகிருஷ்ணன்
வெளியீடு: 8.சி, வில்லேஜ் தெரு, சாத்துமா நகர், டோல்கேட், சென்னை-19.

விகடன் வரவேற்பறை

மிகவும் தனிமை நிரம்பிய சிறுவனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் குறும்படம். ஒரு கேக், தானே ஹேப்பி பர்த்டே பாடல் பாடிக்கொண்டாடுகிற விதம்... இவர்களைப் போன்ற அநாதைச் சிறுவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு பதறவைக்கிறது. சுருங்கச் சொல்வது ஒரு கலை. அதில், ஹரி... முன்னிலை!

மலேசியத் தமிழன்
new.olaichuvadi.blogspot.com

விகடன் வரவேற்பறை

புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் குறித்து மட்டுமே அறிந்திருக்கும் நமக்கு, மலேசியத் தமிழர்களின் பிரச்னைகளின் மீது கவனம் குவிக்கச் சொல்கிறது இந்த வலைப்பூ. மலேசியா, பினாங்கில் தமிழ் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் அனுமதியும் அரசு உதவித் தொகையும் மறுக்கப்படும் அவலத்தைப் பதிவுசெய்கிறது. தோட்டத்தொழில் களுக்காக இந்தியாவில் இருந்து வந்து இன்னமும் எவ்வித முன் னேற்றமும் அடையாத இந்தியர்கள் குறித்தும் ஆராய்கிறது. மலேசிய இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட 'இண்ட்ராப்' இயக்கத்தின் 'இண்ட்ராப் குரல்' என்னும் இதழும் பதிவேற்றப்படுகிறது. அயல் தேசத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்னைகளை உணரவைக்கும் வலைப்பூ!

அம்பாசமுத்திரம் அம்பானி
இசை: கருணாஸ்
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை ரூ. 99

விகடன் வரவேற்பறை

கதாநாயகன் கருணாஸே இசையமைத்திருக்கும் படம். 'பூ பூக்கும் தருணம்' பாடல் காக்டெயில் பாப் ஆல்பம் சாயல். ஃபாஸ்ட் பீட், மேளதாளம், மெல்லிசை எல்லாம் கலந்துகட்டி ஒலிக்கும் பாடல். ஏற்கெனவே பட்டிதொட்டிகளில் கலக்கிக்கொண்டு இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களின் கலவையான ரீ-மிக்ஸ் குத்து 'ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு'. நம்மையும் அறியாமல் தாளம் போடவைப்பது பாடலின் ஹைலைட். எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது 'கொல கொலையா முந்திரிக்கா'. மினிமம் பட்ஜெட் படத்தின் கதாநாயகத் துதிப் பாடல் 'தண்ட தண்ட பாணி'... அவ்வளவே!

கோல் களம்!
new.tamilsportsnews.com

விகடன் வரவேற்பறை

உலகக் கோப்பைக் கால்பந்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆங்கி லத்தில் ஆயிரம் இணையதளங்கள் உண்டு. ஆனால், தமிழில்? அந்தக் குறை இனி இல்லை. சுத்தமான தமிழில் உலகக் கோப்பைபற்றிய செய்திகளை உடனுக்குடன் இங்கே படிக்கலாம். உலகக் கோப்பைக் கால்பந்துபற்றிய வரலாறு, கேள்வி-பதில், சுவாரஸ்யத் துணுக்குகள், அணிகள், வீரர்கள்பற்றிய விவரக் குறிப்புகளும் உண்டு. இந்தியக் கால்பந்து அணி, உலகக் கால்பந்து கிளப்புகள்பற்றிய செய்திகளும் தொகுத்துத் தருகிறார்கள். கால்பந்து ஜுரத்தை டிகிரி டிகிரியாக உச்சத்துக்கு ஏற்றும் தளம்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை