Published:Updated:

மூச்... கோச்!-

மூச்... கோச்!-


மூச்... கோச்!
மூச்... கோச்!-
மூச்... கோச்!-

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எம்.குமார்
மூச்... கோச்!-
மூச்... கோச்!-

கால்பந்து 11 பேர் சேர்ந்து விளையாடும் அணி விளையாட்டாக இருந்தாலும்... வெற்றியோ, தோல்வியோ... அதற்கு ஒரே ஒருவர்தான் பொறுப்பு. அவர், அணியின் பயிற்சியாளர்!

அணியின் ஒட்டுமொத்த லகானும் பயிற்சியாளர் கையில்தான். இந்த உலகக்

கோப்பைப் போட்டிகளின் நட்சத்திரப் பயிற்சியாளர்கள் இங்கே...

வைன் ரூனி, ஃபிராங்க் லேம்பர்டு, ஸ்டீவன் ஜெரார்டு, ஜான் டெர்ரி போன்ற தலைசிறந்த வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருக்கிறார்கள். அதனாலேயே அங்கே ஈகோ அதிகம். 'கண்டிப்பான பயிற்சியாளரால்தான் கட்டி மேய்க்க முடியும்' என்பதை உணர்ந்த இங்கிலாந்து கால்பந்து சங்கம் பலத்த யோசனை, ஆலோசனைகளுக்குப் பிறகு இத்தாலிக்காரரான கபேலோ வைப் பயிற்சியாளர் ஆக்கியது. இத்தனைக்கும் கால்பந்தைப் பொறுத்தவரை இங்கிலாந்துக்கும் இத்தாலிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் மாதிரி. 'நீங்க பெரிய அணிதான். ஆனா, உங்க பாஸ் எங்க ஆளு!' என்று இத்தாலிப் பத்திரிகைகள் இங்கிலாந்தைக் கலாய்த்துச் சதாய்த்தன. ஆனால், கபேலோவோ பார பட்சம் எதுவும் பார்க்கவில்லை. ஏனெனில், அவருக்கு வேலை முக்கியம். வந்த உடன் கவுன்சிலிங் நடத்தி வீரர்களிடையே இருந்த ஈகோவை ஒழித்தார். இங்கிலாந்து வீரர்கள் தடுப்பாட்டத்தில்தள்ளா டுவார்கள். இதனால், அணியின் பின்கள வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுத்தார். கபேலோவின் கைகளில் இன்று இங்கிலாந்து கப்சிப் கட்டுக்கோப்புடன் இருக்கிறது. இங்கிலாந்து கோப்பையைத் தட்டினால் எல்லாப் புகழும் கபேலோவுக்கே!

மூச்... கோச்!-

போதைக்கு அடிமையாகி, உடல் பெருத்து பெயரைக் கெடுத்துக்கொண்ட மரடோனா திருந்தி வந்ததற்குப் பரிசாக, அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஆக்கினார்கள். ஆனாலும், ஆச்சர்யங்கள் எதுவும் அரங்கேறவில்லை. தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிறிய அணியான பெருவை வீழ்த்தி, கடைசியாகத்தான் உலகக் கோப்பைப் பட்டியலில் இடம் பிடித்தது. இல்லை என்றால், அப்போதே மரடோனா பதவி பணால் ஆகி இருக்கும். இப்போதும் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்ஸியை மட்டுமே நம்பி இருக்கிறார் மரடோனா.

பிரேசிலின் துரோணாச்சாரியர், டுங்கா. 1994-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டன். மிலிட்டரி கெடுபிடி காட்டும் ஆள். 'ரொனால்டினோவை அணியில் சேர்த்துக்கப்பா' என்று கால்பந்து மன்னன் பீலே சொன்னதை, டுங்கா கண்டுகொள்ளவில்லை. பெரிய பேரோடு இருந்த, ஆனால் 'பேருக்கு' விளையாடிய ரொனால்டினோ, ரொனால்டோ, ரொபர்ட்டோ கார்லோஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் அத்தனை பேரையும் அணியில் இருந்து கடாசிவிட்டார். ரொனால்டினோவைத் தூக்கியதால், பிரேசில் ரசிகர்களுக்கு டுங்கா மேல் செம கோபம். ஒருவேளை பிரேசில் கோப்பையை வெல்லாவிட்டால், டுங்கா அதன் பிறகு தூங்க முடியாது!

சென்ற முறை உலக சாம்பியன் ஆன இத்தாலி அணியின் பயிற்சியாளர் மார்சிலோ லிப்பிதான் இப்போதும் பயிற்சியாளர். கடந்த முறை இத்தாலி கோப்பையை வென்றதும் பதவி விலகிவிட்டார் லிப்பி. அதற்கடுத்து நடந்த கால்பந்துப் போட்டி யில் உலக சாம்பியனை மற்ற அணிகள் ஓட ஓட விரட்டி அடித்தன. அதனால், லிப்பியைத் தேடிப் பிடித்துக் கூட்டி வந்தார்கள். ஆனாலும் நிலைமை மாறவில்லை. இந்த உலகக் கோப்பைக்கு 'கிழடு தட்டிய அணி'யை லிப்பி தேர்வு செய்திருக்கிறார் என்று அத்தனை பேரும் திட்டித் தீர்க்கிறார்கள். ஏனெனில், அதிகபட்சமாக அணி வீரர்களின் சராசரி வயது 25-க்கு மேல் போகாது. இப்போதைய இத்தாலி அணி வீரர்களின் சராசரி வயது 29. 'இல்லை... நாங்களும் யூத்துதான்!' என்று விளக்கம் கொடுத்து வருகிறார் லிப்பி.

பலம்மிக்க ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோ ஆக்ஸிம் லோ. கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது ஜெர்மனியின் துணைப் பயிற்சியாளராக இருந்தார் லோ. இப்போது அணியின் பயிற்சியாளர். இவர் தலைமையிலான ஜெர்மனி அணி, கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஐரோப்பியக் கோப்பைப் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஸ்பெயினிடம் வீழ்ந்தது. இந்த உலகக் கோப்பைக்கு மூத்த வீரர்கள் அத்தனை பேரையும் ஓரங்கட்டிவிட்டு அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களைக் களம் இறக்கி இருக்கிறார்.

மூச்... கோச்!-

'இந்த முறை கோப்பை ஸ்பெயினுக்குத்தான்!' என்பதுதான் பெரும்பாலான பந்தயம். காரணம், அதன் பயிற்சியாளர் வின்சென்ட் டெல் போஸ்க். கடந்த 2008-ம் ஆண்டு ஐரோப்பியக் கால்பந்து (யூரோ) போட்டியின்போது ஸ்பெயின் அணிக்குப் பயிற்சியாளர் ஆனார் வின்சென்ட். அப்போது சாம்பியன் பட்டம் ஸ்பெயின் வசமானது. உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட்டுக்கு ஆறு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தவர் வின்சென்ட். தொடர்ந்து ஸ்பெயின் அணி பெற்று வரும் வெற்றிகளால், 'கோப்பை நமக்குத்தான்' என்று நம்பிக் காத்திருக்கிறார்கள் ஸ்பெயின் மக்கள். கால்பந்து மன்னன் பீலே, 'இந்த முறை உலகக் கோப்பை ஸ்பெயினுக்குத்தான்!' என்று சொல்லி இருக்கிறார். அதனாலேயே கவலையில் இருக்கிறார் வின்சென்ட். கடந்த 10 உலகக் கோப்பைப் போட்டி களாக, பீலே கணித்துச் சொன்ன எந்த அணியும் இதுவரை சாம்பியன் ஆனதில்லை. முதல் சுற்றிலேயே மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடும். அப்படி ஒரு ராசி. வின்சென்ட்டின் கவலைக்குக் காரணம் புரிகிறதா?

மூச்... கோச்!-
மூச்... கோச்!-