Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"ஆதங்கத்தை ஆதரிக்கிறேன்!"
நானே கேள்வி... நானே பதில்!

"உண்மையிலேயே வாழ்க்கை ஒரு வட்டம்தானா?"

"ஒரு சுவையான உதாரணத்தைப் பார்ப்போம். இப்போது ராமதாஸ், தி.மு.க. கூட்டணியை எதிர்நோக்கி உள்ளார். அதனால்தான், 'தி.மு.க. கொண்டுவந்த மேலவைத் தீர்மானம் நிறைவேறுவதற்கு பா.ம.க-தான் காரணம். மூன்றில் இரு பங்கு ஓட்டு வாங்க பா.ம.க-தான் உதவியது' என்று புலம்புகிறார். ஒருவேளை, அடுத்த தேர்தலில் அவர் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். (பா.ம.க-வைப் பொறுத்தவரை எப்படி வேண்டுமானாலும் யூகிக்கலாம்). அப்போது, ஜெயலலிதா மேலவையைக் கலைக்கும் தீர்மானம் கொண்டுவந்தால், அந்தத் தீர்மானத்தை ஆதரித்து பா.ம.க. ஓட்டு போடும். அதற்குப் பின் ஜெயலலிதா, பா.ம.க-வைக் கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டால், அப்போதும் ராமதாஸ் சொல்வார், 'மேலவையைக் கலைக்கும் தீர்மானம் பா.ம.க. இல்லாவிட்டால்வெற்றி அடைந்திருக்காது' என்று!"

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

"ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும்?"

நானே கேள்வி... நானே பதில்!

"நேரு பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த புதிது. பஞ்சாப் மாநிலத்தில் நேருவின் சுற்றுப்பயணம். பிரதமரின் வாகனத்துக்கு முன்னும் பின்னும் காவல் துறை வாகனங்களும் கட்சிக்காரர்களின் வாகனங்களும் வந்தன. அப்போது ஒரு சீக்கிய இளைஞன் நடுவழியில் நேருவின் வாகனத்தை மறித்தான். அனைவருக்கும் கோபம். ஆனால், பதற்றப்படாமல் நேரு காரில் இருந்து கீழே இறங்கினார். 'ஏன், எனது வாக னத்தை மறித்தாய்?' என்று கேட்டார். 'எனக்கு 21 வயதாகிறது. பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். ஆனாலும் வேலை இல்லை. எனது குடும்பம் பசியும் பட்டினியுமாக இருக்கிறது. ஆனால், நீங்களோ சொகுசு காரில் பவனி வருகிறீர்கள். சுதந்திரம் அடைந்ததால் என்ன பலன்?' என்று கேட்டான் அந்த இளைஞன். 'இப்படி நடுரோட்டில் பிரதமரின் காரை மறித்து உன்னால் கேள்வி கேட்க முடிகிறதே, அதுதான் பலன்' என்று சொன்ன நேரு, அவனது கோரிக்கையைத் தனது உதவியாளரிடம் குறித்துக்கொள்ளச் சொல்லி, டெல்லி சென்றவுடன் தீர்த்துவைத்தார். இன்றைய ஆட்சியாளர்களை நினைத்துப் பெருமூச்சுவிடாதீர்கள்!"

- டி.கே.கிருஷ்ணன், தூத்துக்குடி.

"தி.மு.க - பா.ம.க. கூட்டணி எனச் சீக்கிரமே முரசொலியில் வந்துவிடும் போலிருக்கே?"

"முரசொலியில் வருவதற்கு முன்பே 'சிரிப்பொலி'யில் வந்தாச்சே!"

- தா.முகமது இக்பால், தஞ்சாவூர்.

"சமீபத்தில் எதற்கு வருத்தப்பட்டீர்கள்?"

ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடிகர் ராதாரவியின் நேர்காணல். தன் தந்தை எம்.ஆர்.ராதா பற்றி நிறையச் சொன்னார். தமிழகத்தில் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பாடுபட்ட அவருக்குச் சரியான மரியாதை அளிக்கப்படாததைக் கூறி வருத்தப்பட்டார். எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடவில்லை, அவருக்குச் சிலை அமைக்கப்படவில்லை, அவர் பெயரால் தமிழக அரசில் ஒரு விருதுகூட இல்லை என்று சுட்டிக்காட்டியவர், 'எஸ்.வி.சேகரையும் எம்.ஆர்.ராதாவையும் ஒப்பிட்டு' கலைஞர் பேசியது குறித்தும் ஆதங்கப்பட்டார். கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தைத் தந்தவரே நடிகவேள் எம்.ஆர்.ராதாதான். ராதாரவியின் ஆதங்கத்தை ஆதரிக்கிறேன்!"

- நிஷா, பெங்களூரு.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!