Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்


5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
5 கேள்விகள்

தமிழருவி மணியனிடம்...

5 கேள்விகள்

"இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்கிறாரே ப.சிதம்பரம்?"

"ஒரே நாளில் முள்ளிவாய்க்காலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்ததற்கும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை வதை முகாம்களில் வைத்து வாட்டி எடுத்ததற்கும், பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்ததற்கும், ராஜபக்ஷே அரசுக்கு எல்லா வகையிலும் துணை நின்ற இந்திய அரசின் 'நலத் திட்ட'ங்களைச் சொல்கிறாரோ ப.சிதம்பரம்?"

சிம்ரனிடம்...

5 கேள்விகள்

"நீங்கள் இன்னமும் கதாநாயகி என்ற நினைப்பிலேயே சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்களே?"

"சீரியல் தயாரிப்புப் பணியில் இருப்பதால் நானாகப் போய்

யாரிடமும் நடிக்க வாய்ப்பு கேட்பதில்லை. 'இந்த கேரக்டரில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்' என்று வருபவர்களிடம் என் சம்பளத்தைக் கூறுகிறேன். தருபவர் களின் படங்களில் நடிக்கிறேன். கதாநாயகி என்ற நினைப்பில் சம்பளம் கேட்பதில்லை!"

நயன்தாராவிடம்...

5 கேள்விகள்

"ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்கிறீர்களாமே?"

"நான் பயன்படுத்தாத ஒரு பொருளை மற்றவர்களைப் பயன்படுத்தச் சொல்லிப் பரிந்துரைப்பது தவறு என்பது என் கருத்து. அதனால், எந்த விளம்பரப் படங்களிலும் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். இதற்கு முன்பும் விளம்பரங்களில் நடித்ததில்லை. இனியும் நடிப்பதாக இல்லை!"

டிராஃபிக் ராமசாமியிடம்...

5 கேள்விகள்

"நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி உங்களுக்கு உயர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதே?"

"சாலை ஓரங்களில் பட்டாசு விற்பதை எதிர்த்து, 2005-ல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் 2008-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் சென்னை போலீஸ் கமிஷனருக்குச் சில அறிவுரைகள் வழங்கியது நீதிமன்றம். ஆனால், அந்த அறிவுரைகள் சரி வரப் பின்பற்றப்படவில்லை என்று மீண்டும் வழக்கு தொடர்ந்தேன். இது தொடர்பான தீர்ப்பில், 'நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டும். மீண்டும் புதிய வழக்கு தொடுப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதாகும்' என்று 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். நீதிமன்ற நேரத்தை வீணாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. வேண்டுமென்றால் என் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாம். அபராதம் விதித்தது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட பலருக்குக் கடிதம் எழுதி உள்ளேன்!"

தீப்பொறி ஆறுமுகத்திடம்...

5 கேள்விகள்

"அ.தி.மு.க-வில் இருந்து திடீரென்று தி.மு.க-வுக்குப் போகக் காரணம் என்ன?"

"ஒன்பது வருஷமா ஜெயில்ல இருந்தது மாதிரி இருக்கு. அந்தம்மாவைப் பார்க்கக்கூட முடியலப்பா. அப்பாயின்மென்ட்டுக்குக் காசு கேட்கிறாய்ங்க. ஒரு கட்சியின் தலைவியைப் பணம் குடுத்தாத்தான் பார்க்க முடியும்னா, பரிதாபம்டா சாமி!"

5 கேள்விகள்
5 கேள்விகள்