Published:Updated:

நான் ஒரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி!

டி.ராஜேந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.ராஜேந்தர்

நான் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை 'நான்தான் நாளைய முதல்வர்'னு ஒரு நாள்கூடச் சொன்னது இல்லை

"குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற 'ஒரு தலைக் காதல்' முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் 'ஒருதலை ராகம்'. 2010-ல் 'ஒருதலைக் காதல்'. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு நிக்கிறது யாரு... இந்த விஜய டி.ஆரு! அவனவன் காலையில் எழுந்து நீராடவே தயங்குறான். நான் 30 வருஷமாப் போராடுறேன். இது தலைக்கனம் இல்லை... தன்னம்பிக்கை இலக்கணம்!" - விஜய டி.ராஜேந்தர் பேசப் பேச, எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வருவதைப்போல் அதிர்கிறது அறை!

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

"அப்புறம், 'ஒருதலைக் காதல்' எப்படி வந்துட்டு இருக்கு?"

"தமிழ்நாடே மிரளும்... காதல்ல உருளும். காதல்தான் கதை. தாராவிதான் கதைக் களம். படத்தில் இசைக் கலைஞனா வர்றேன். படத்தில் ஏ டு இசட் இசை மழை. ஏழு பாடல்களை செலெக்ட் பண்ணி இருக்கேன். அந்த ஏழு பாடல்கள்தான் இனிமே இளைஞர்களோட சொத்து. கேரளா, பெங்களூரு, மும்பைனு ரெண்டு வருஷமா ஹீரோயின் தேடி அலைஞ்சேன். இன்னும் யாரும் சிக்கலை!"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"சிம்புவை வைத்து ஏன் படம் இயக்குவது இல்லை?"

"சிம்புவைச் சின்னக் குழந்தையில் இருந்து உருவாக்கி 'காதல் அழிவதில்லை' வரை கொண்டுவந்தேன் சார். உச்சாணிக் கொம்பில் இருக்கும் எந்த நட்சத்திரத்தையும் வெச்சு நான் படம் எடுத்தது இல்லை. புது முகங்களைத்தான் அறிமுகப்படுத்துவேன். 'ஒருதலை ராகம்', 'உயிருள்ளவரை உஷா', 'மைதிலி என்னைக் காதலி' எல்லாம் 10 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட படங்கள். ஆனா, பல கோடி வசூல் பண்ணுச்சு. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பாங்க. நான் இறாலைப் போட்டு சுறாவைப் பிடிக்கிறவன். சிம்புவை வெச்சுப் படம் பண்ணாததுக்குக் காரணம் இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே! (நம்மையே குறுகுறுவெனப் பார்க்கிறார்!)

குறளரசன்
குறளரசன்

"செம்மொழி மாநாடு..?"

"தமிழ் மொழியை வாழவைக்க மாநாடு நடத்துறதாச் சொல்றார் கலைஞர். அந்த மொழியைப்பேசின தாலேயே ஓர் இனம் இலங்கையில் அழிக்கப்பட்டதே? அப்போ எங்கே போனார் தமிழினத் தலைவரு? கேட்டா மத்திய அரசைக் கை காட்டுவாரு. பின்னாடி போய் அவங்களுக்குக் கை கொடுப்பாரு. இனப் பகையாளன், கொடுங்கோலன் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வந்ததைவிட ஒரு கேவலம் தமிழனுக்கு வர முடியாது சார். ராஜபக்ஷேவைச் சந்தித்த எம்.பி-க்கள் போர்க் குரல் கொடுத்தாங்களா? போராட்டம் நடத்தினாங்களா? நம்ம எல்லாரையும் சக்கையா ஏமாத்துறாங்க சார். உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியா வரணும்னு 2006-ல்சட்ட சபையில் தீர்மானம் போட்டார். ஆனா, ஒப்புதல் வாங்கலை? மேலவைக்கு மட்டும் தீர்மானம் போட்டதும் ஒப்புதல் வாங்கிட்டாரே? மேலவை வந்தால் பதவி வரும். நீதிமன்றத்தில் தமிழ் வந்தால், கலைஞருக்கு என்ன வரும்? மற்றபடி வாழ்க தமிழ்!"

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"உங்களுக்குப் பிறகு கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த் சரசரன்னு வளர்ந்துட்டாரே?"

"நான் யாரோடும் என்னை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டேன். நான் நடந்து வந்த என் பாதையை மட்டுமே பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதான்னு மூணு முதல்வர்களோடவும் மோதிப் பார்த்தவன் நான். நான் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை 'நான்தான் நாளைய முதல்வர்'னு ஒரு நாள்கூடச் சொன்னது இல்லை. ஒரே சமயத்தில் அ.தி.மு.க-கிட்டேயும், காங்கிரஸ்கிட்டேயும் பேச்சுவார்த்தை நடத்துற தந்திரம் எனக்குத் தெரியாது. நான் பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி சார்!"

" 'என்றும் கலைஞர்தான் என் தலைவர்'னு சொன்னீங்களே?"

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

"அது அப்போ!

கலைஞர்தான் தலைவர்னு முடிவெடுத்தேன். அதனால, என்னோட தாயக மறுமலர்ச்சிக் கழகத்தில் தலைவர் பதவியை ஏற்படுத்தாமல், பொதுச் செயலாளரா மட்டும் இருந்தேன். அப்போ, 'எனக்கு நீயும் ஸ்டாலினும் ஒண்ணு'னு கலைஞர் சொன்னார். நானும் அவர் பேச்சை நம்பி என் கட்சியைக் கலைச் சுட்டு தி.மு.க-வில் சேர்ந்தேன். ஆனா, கலைஞர் தன்னோட வாக்குறுதியைக் காப்பாத்தலை. அதனால, மீண்டும் தி.மு.க-வில் இருந்து விலகி, லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினேன். இந்த முறை உஷாராநானே தலைவர் ஆகிட்டேன்!"

"சமீபத்தில் தி.மு.க-வில் சேர்ந்த குஷ்புவுக்கு மேலவையில் பதவி கிடைக்கும்னு பேசிக்கிறாங்களே?"

நான் ஒரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி!

"இதைப்பத்தி நான் கருத்துச் சொல்ல விரும்பலை. வேணும்னா, 'இதைவிட வேற கஷ்ட காலம் தி.மு.க-வுக்கு வராது'ன்னு எழுதிக்குங்க சார்!"

"சிம்புவுக்கு எப்போ கல்யாணம்?"

"பார்க்கிறோம் சார். சிம்புவை மகனாகப் பெற்றதை நான் பெருமையா நினைக்கிறேன். என் பொண்ணு இலக்கியா எம்.பி.ஏ., முடிச்சிருக்காங்க. அவங்களுக்குத்தான் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம். 'அப்பா, இந்தப் பொண்ணை நான் விரும்புறேன்'ன்னு சிம்பு சொன்னா, நான் தடுக்க மாட்டேன். ஆனா, 'நீங்க யாரைச் சொல்றீங்களோ... அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொல்லிட்டார் சிம்பு. சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன் சார்!"