Published:Updated:

வீட்டைத் தூக்கிப் பார்!

வீட்டைத் தூக்கிப் பார்!


வீட்டைத் தூக்கிப் பார்!
வீட்டைத் தூக்கிப் பார்!
வீட்டைத் தூக்கிப் பார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கா.பாலமுருகன்
படங்கள்: எம்.உசேன்
வீட்டைத் தூக்கிப் பார்!
வீட்டைத் தூக்கிப் பார்!

'வீட்டைக் கட்டிப் பார்' என்பதை இனி, 'வீட்டைத் தூக்கிப் பார்' என மாற்றிவிடலாம். கார் பஞ்சர் ஆன பிறகு, ஜாக்கியை வைத்துத் தூக்குவார்களே... அதுபோல ஒரு வீட்டையே ஜாக்கியை வைத்துச் சில அடிகள் உயர்த்திவைக்கிறார்கள்!

சென்னையில் மழைக் காலம் என்றால், தாழ்வான பகுதிகளில் வீடு வைத்திருப்பவர்கள் உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புக வேண்டும். அல்லது திடீர் தெர்மகோல் படகில் பால் பாக்கெட் வாங்குவதுபோல போஸ் கொடுக்க வேண்டும். மடிப்பாக்கம், வேளச்சேரி, கோட்டூர்புரம் போன்ற இடங்களில் வருடம் தவறாமல் இந்தக் காட்சிகளைப் பார்க்கலாம். இந்தப் பகுதிகளில் லட்சம், கோடிகளைக் கொட்டி வீடு கட்டியவர்களும், வாங்கியவர்களும் மழைக் காலம் வந்தாலே அலறுவார்கள். அப்படி அலறியவர்களில் ஒருவரான வேளச்சேரி ராமன், தேடித் திரிந்து ஹரியானாவைச் சேர்ந்த 'மேம்சந்த் அண்டு சன்ஸ்' நிறுவனத்தின் ஹர்கேஷ் குமாரை அழைத்து வந்தார்.

வீட்டைத் தூக்கிப் பார்!

ஹர்கேஷ் குமார் என்ன செய்வார்? வண்டியைத் தரையில் இருந்து சிறிது உயரம் உயர்த்த உதவும் ஜாக்கிகளை வைத்து வீட்டையே அலேக்காக நான்கு அடிகள் உயர்த்திக் கொடுத்துவிடுவார்!

ராமனின் வேளச்சேரி வீடு கிட்டத்தட்ட 260 ஜாக்கிகளின் மேல் நிலைகொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட அந்தரத்தில் நிற்கும் வீட்டினுள் டியூப் லைட் எரிகிறது, மின் விசிறி சுழல்கிறது, குழாயில் தண்ணீர் வருகிறது. எப்படிச் சாதிக்கிறார்கள் இதை?

வீட்டைத் தூக்கிப் பார்!

முதலில், வீட்டின் தரைத் தளத்துடன் சம்பந்தப்பட்ட குழாய் இணைப்புகள், எலெக்ட்ரிக் லைன் ஆகியவற்றைத் துண்டித்துவிட்டு ஹோஸ் பைப் மூலம் தற்காலிக இணைப்புக் கொடுக்கிறார்கள். பின்பு, வீட்டின் உள்பக்க அறைகளில் சுவர் ஓரமாகத் தோண்டி, சுவரைப் பெயர்த்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ஜாக்கிகளைப் பொருத்துகிறார்கள். ஜாக்கி பொருத்தும் வேலைகள் முழுக்க முடிந்த பிறகு, வெளிப்பக்கம் சுவரைச் சுற்றி பள்ளம் தோண்டி, சுவரைப் பெயர்க்கிறார்கள். உள்ளே பொருத்தப்பட்ட ஜாக்கிகள் வெளியில் இருந்தும் காணக் கிடக்கின்றன. இதன் பிறகுதான் ஓர் ஆச்சர்யம் நிகழ்த்துகிறார்கள். கீழ்ப் பகுதி முழுக்கக் கறுப்புத் துணியால் மறைத்துக்கொண்டு சில வேலைகளைச் செய்கிறார்கள். முடிந்ததும் துணியை நீக்கினால், ஜாக்கிகளுக்கு மேல் நீளமான தண்டவாளம் போன்ற இரும்பு சேனல் ஒன்றைப் பொருத்தி இருக்கிறார்கள். மேலே சுவர், அதன் கீழே இரும்புச் சேனல், அதற்கும் கீழே ஜாக்கி. இதன் பிறகுதான் வீட்டை உயர்த்தும் பணி நடக்கிறது. 15 பேர் வரைகொண்ட தொழிலாளர்கள் தலைமைப் பணியாளரின் வாய் மொழிக் கட்டளைக்கு ஏற்ப, ஒரே சமயத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக ஜாக்கிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுழற்றுகிறார்கள். ஜாக்கிகள் சுழலச் சுழல... வீட்டின் உயரம் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை அடி வரைதான் உயர்த்த முடியும். இந்த வேளச்சேரி வீட்டை நான்கு அடிகள் வரை உயர்த்தியும் ஓர் இடத்தில்கூட சின்ன கீறலோ, விரிசல்களோ இல்லை. உயர அதிகரிப்பு முடிந்த பிறகு, ஜாக்கிகள்வைத்த இடத்தில் சிமென்ட் பிளாக்குகளை வைத்துக்கட்டி, அதில் அப்படியே கட்டடத்தை உட்கார வைத்துவிடுகிறார்கள். வீட்டின் தரைப் பகுதியை மட்டும் மீண்டும் கட்ட வேண்டும்.

வீட்டைத் தூக்கிப் பார்!

நமது ஆச்சர்யத்தை ரசித்துக்கொண்டே, "வீட்டை உயர்த்தும்போது ஒரு சின்ன விரிசல்கூட விழாது. அதற்கு நாங்கள் 100 சதவிகித கியாரன்ட்டி!" என்கிறார் ஹர்கேஷ் குமார். "1992-ம் ஆண்டில் இருந்து இந்த வேலையைச் செய்து வருகிறோம். தென்னிந்தியாவில் இதுதான் எங்களுக்கு முதல் வேலை. எங்கள் தொழில் முறைக்கு முறைப்படி அரசிடம் காப்புரிமை பெற்றுள்ளோம். உலகில் இது போன்ற முறையில் வீட்டை உயர்த்துபவர்கள் நாங்கள் மட்டுமே. முதன்முதலாக ஹரியானாவில் ஒரு பாலத்தை உயர்த்த வேண்டும் என்றபோது, என் தந்தை தலைமையிலான ஒரு குழு அதைச் சாதித்துக் காட்டியது. அதன் பிறகுதான் வீடுகளையும் அதே முறையில் உயர்த்திக் கொடுக்கிறோம். அதிகபட்சம் ஐந்து மாடிக் கட்டடம் வரை உயர்த்தி இருக்கிறோம். 12 அடி வரை உயர்த்திய கட்டடமும் இதில் அடக்கம்!" என்கிறார் அடக்கமாக.

வீட்டைத் தூக்கிப் பார்!

"இரும்பு சேனலை எப்படி ஜாக்கி மேல் பொருத்துகிறீர்கள்?"

"சேனல் பொருத்துவது, வேலை முடிந்து சேனலையும், ஜாக்கிகளையும் வெளியே எடுப்பது இந்தத் தொழிலின் ரகசியம். அதைச் சொல்லிவிட்டால் அல்லது தெரிந்துவிட்டால், எங்களுக்கு நிறையப் போட்டிகள் வந்துவிடும்." என்று சிரிக்கிறார் அட்டகாசமாக!

வீட்டைத் தூக்கிப் பார்!
வீட்டைத் தூக்கிப் பார்!