Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வரவேற்பறை

'உலக' சினிமா!
http://ngm.nationalgeographic.com/photography

விகடன் வரவேற்பறை

நேஷனல் ஜியாக்ரஃபி சேனலின் புகைப்படத் தொகுப்பு நிறைந்த தளம். உலகின் விதவித இடங்கள், வித்தியாசமான மனிதர்கள், விலங்குகள்,பறவை கள், பூச்சி இனங்கள் என நாம் பார்த்திராத, கேள்விப்பட்டிராத பலவற்றை அறிமுகப்படுத்துகிறது. வார்த்தைகள் உதவியின்றி உலகத்தை நிறையத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள உதவும் தளம்!

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (இரண்டு தொகுதிகள் )
பாவை சந்திரன்
வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்,
4, முத்துக்கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், சென்னை-17.
பக்கம்: 908 விலை ரூ.700

விகடன் வரவேற்பறை

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு நிறைவுடன் வந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தை அன்று முதல் இன்று வரை கவனித்து எழுதியிருக்கிறார் பாவை சந்திரன். இலங்கையில் நடைபெற்ற இன மோதல்கள், பிற குழுக்களின் வெளிப்பாடு, விடுதலைப் புலிகளின் வருகைக்குப் பின்னால் நடந்த விவரங்கள் என அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. 'யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், செர்பியர்களுக்கும்கூட நாடு கிடைத்துவிட்டது. ஈழம் மட்டும் கிடைக்காமல் போனது எப்படி?' என ஆரம்பக் கேள்வியில் இருந்து உள்ளம் தொடும் படைப்பு!

அ இயக்கம்: பா.தயா
வெளியீடு: 43, ஸ்டேட் பேங்க் காலனி, ஜமீலா லேன், ஹவுஸிங் போர்டு,
பெரம்பூர், சென்னை-11.

விகடன் வரவேற்பறை

குடியின் தீமைபற்றிச் சொல்லாதவர்கள் கிடையாது. ஆனால், இயக்குநர் தயா, ஒரு சிறுவனை முன்வைத்து மிகவும் தன்னம்பிக்கை தரும்படி இதை இயக்கியிருக்கிறார். நாடகமாகிவிடாமல், மனதின் ஆழத்தில் சலனத்தை ஏற்படுத்தியிருப்பது 'அ'வின் வெற்றி. இதுமாதிரிப் படைப்புகளில் இருக்கிற மெலோ டிராமாவைக் குறைத்திருப்பது சிறப்பு!

நெல்லு
இசை: எஸ்.எஸ்.குமரன் வெளீயிடு: ஜங்லீ மியூஸிக் விலை ரூ.75

விகடன் வரவேற்பறை

'பூ' படத்தில் மென்மையாக அழுத்தம் பதித்த எஸ்.எஸ்.குமரனின் இசை. ஆனால், ஆச்சர்யமாக இந்த ஆல்பத்தின் பெரும்பகுதியை கரகர மொறுமொறு வாத்தியங்களே ஆக்கிரமிக்கின்றன. தங்க நாற்கரச் சாலைகளில் புயலென விரையும் மொபசல் பேருந்துபோல கடக்கிறது 'அச்சு வெல்லம்' பாடல். உறுத்தாத கிராமத்துக் குத்தாகப் பதிகிறது 'முத்து முத்து' பாடல். 'கன்னக்குழி திருடா'வில் சிம்பு - சைந்தவி குரல்களில் குற்றாலக் குதூகலம். தமிழ் சினிமா சம்பிராதயப்படி மழலை மாறாத குழந்தைகள், காதலர்களை 'வெட்டுவோம், வேட்டியை அவிழ்ப்போம், ஓட ஓட விரட்டுவோம்' என்று பெரிய மனுஷத்தனம் பேசுகிறார்கள் 'காதல் ஜோடி ஒண்ணு...' பாடலில். ஆல்பத்திலேயே வாத்தியங்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் 'கொடியோர தாமரப் பூ' பாடல் சிலீர் கிராமத்துப் பதநீர்!

பாட்டி சொல்லும் கதை!
new.chuttikadhai.blogspot.com

விகடன் வரவேற்பறை

பாட்டி சொல்லும் கதைகளுக்கு எப்போதுமே ஒரு ருசி உண்டு. ஏழு கடல், ஏழு மலை, மந்திரவாதிகள் நிரம்பிய பாட்டிக் கதைகளைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிட்ட இன்றைய தலைமுறைக்காக, பாட்டி சொல்லும் கதைகளைப் பதிவேற்றுகிறது இந்த வலைப்பூ. தெனாலிராமன், பீர்பால் கதைகள் தொடங்கி பழைய நாட்டுப்புறக் கதைகள் வரை இந்த வலைப்பூவில் உள்ளன. ஒவ்வொரு கதைக்குமான நீதியும் இறுதியில் சொல்லப்படுகிறது!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை