Published:Updated:

அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!

அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!


அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!
அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!
அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப.திருமாவேலன்
அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!
அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!

காலம் அழித்தது போக...
கறையான் அழித்தது போக...
கடல்கோள் அழித்தது போக...
- மலைகளில் எதிரொலிக்கிறது குரல்!

ஐம்பூதங்களின் ஆட்சி மொழி...
ஐவகை நிலங்களை ஆண்ட மொழி...
ஐம்பெரும் காப்பியங்கள் ஆற்றிய மொழி...
- கடல் அலைகளில் மிதக்கிறது குரல்!

பல்லாயிரம் ஆண்டுப் பழந் தமிழர் வாழ்க்கையை நான்கு நிமிடங்களில் சொல்ல முடியுமா? சாதித்துக் காட்டி இருக்கிறார் ஜெயராம். தமிழ் சினிமாவின் பரபரப்பு விளம்பரங்களுக்குக் காரணமான முக்கியத் தயாரிப்பாளர் பின்னணியில் இருந்து தயாரிக்க, ஜெயராம் என்ற இளைஞர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தன்னுடைய பங்களிப்பாகச் செய்துகாட்டியிருக்கும் அந்தக் காட்சியில் எல்லாம் இருக்கிறது.

'இது வரை நடந்த மாநாடுகள் உலகத் தமிழ் மாநாடுகள். தமிழின் பெருமையை நாம் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தோம். ஆனால், இம்முறை கோவையில் நடக்க இருப்பது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. எந்த மொழி தொன்மை ஆனதோ, சுயம்புவாக உருவானதோ, இலக்கியச் செறிவும் வளமும் உள்ளதோ, அதைத்தான் செம்மொழியாக மத்திய அரசாங்கம் அங்கீகரிக்கிறது. அப்படிப்பட்ட மரியாதை முதல்வர் கலைஞரால் நம் மொழிக்குக் கிடைத்து இருக்கிறது. அதைக் கொண்டாடவே

அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!

கோவையில் விழா நடக்கிறது. இது ஏதோ அரசாங்கம் நடத்தும் விழா அல்ல; தனிப்பட்ட கலைஞர் நடத்தும் விழாவும் அல்ல; ஒட்டுமொத்தத் தமிழினமும் கொண்டாட வேண்டிய விழா. அதனால்தான் எங்களின் பங்களிப்பாக இந்தக் கலைத் தொகுப்பைத் தயாரித்தோம்" என்று முன்னுரையாகச் சொல்கிறார் ஜெயராம்.

அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!

"நான் ஒரு வரலாற்று மாணவன். தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வமும் உள்ளவன். அந்த அடிப்படையில்தான் இதைத் தயாரித் «தன். தமிழுக்கு எது மூலம் என்பதில் தொடங்கி, இப்போது அது என்னவாக இருக்கிறது என்பதில் முடித்து இருக்கிறோம். இது கோவை மாநாட்டுக்கு மட்டும் அல்ல; தமிழ் குறித்த அறிமுகமாகவும் காலம் கடந்தும் நிற்கும்" - என்று சொல்லும்போது பின்னால் இருந்து குரல் ஒலிக்கிறது...

இசைத் தமிழ்
எமை
இயக்கும் தமிழ்!

அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!
அமைதியாய் ஓரு தமிழ் தொண்டு!