Published:Updated:

உலகம் தேடும் ஒரு முகம்!

உலகம் தேடும் ஒரு முகம்!


உலகம் தேடும் ஓரு முகம்!
உலகம் தேடும் ஒரு முகம்!
உலகம் தேடும் ஒரு முகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எஸ்.கலீல்ராஜா
உலகம் தேடும் ஒரு முகம்!
உலகம் தேடும் ஒரு முகம்!

ழுக்கைத் தலை, அடர்த்தியான புருவங்கள், குடை மிளகாய் மூக்கு, மீசை, தாடியை மழுங்க ஷேவ் செய்த முகம், அதில் அசமந்தமான புன்னகை... சாதாரணமாக ரோட்டில் கடந்து போனால் திரும்பிப் பார்க்கத் தோன்றாத மிகச் சாதாரண முகம். ஆனால், இந்த முகத்தைத்தான் உலகின் பல நாட்டு மக்கள் வலை வீசித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏன்... எதற்கு? .

2006-ம் ஆண்டில் நியூயார்க்கைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி வந்தார் ஒரு பெண். 'என் கனவில் ஒரு மனித முகம் அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது. அந்த முகத்தை நான் சந்தித்ததே இல்லை" என்றார். ஒரு ஓவியரை வரவழைத்து, அந்தப் பெண் சொல்லச் சொல்ல கனவு முகத்தைப் படமாக வரையச் சொன்னார் மனநல மருத்துவர்.

 

மனநல மருத்துவரின் டேபிளில் கிடந்த கனவு மனிதனின் ஓவியத்தைப் பார்த்த இன்னொரு பேஷன்ட் மிரண்டுவிட்டார். 'இந்த முகம்தான் என் கனவில் அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது. ஆனால், நான் இவரை வாழ்நாளில் சந்தித்ததே இல்லை' என்று அவர் அலறியதும், மருத்துவருக்குக் கிர்ரடித்துவிட்டது. அந்த ஓவியத்தை ஜெராக்ஸ் போட்டு, எந்தக் குறிப்பும் இல்லாமல் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவைத்தார்.

'என் கனவில் இவர் அடிக்கடி வருகிறார். இந்தப் படம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?' என்று நான்கு பேர் பதில் அனுப்ப, 'எப்படி இது சாத்தியம்?' என்று மருத்துவருக்கு மண்டை காய்ந்துவிட்டது. நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்களுக்கு ஓவியத்தை அனுப்பிவைத்திருக்கிறார் மன நலமருத்துவர். லாஸ் ஏஞ்சலீஸ், பெர்லின், டெக்ரான், பெய்ஜிங், ரோம், பார்சிலோனா, பாரிஸ், டெல்லி, மாஸ்கோ ஆகிய நகரங்களைச் சேர்ந்த 2,000 பேர் தங்கள் கனவில் இந்த முகத்தைப் பார்த்ததாகப் பதில் அனுப்ப, ஆரம்பித்துவிட்டது 'கனவு மனிதன்' தேடுதல் வேட்டை.

உலகம் தேடும் ஒரு முகம்!

மூன்று வருடங்களாக முக்கிய நகரங்களின் பார்க், ஹோட்டல், தியேட்டர்களில் 'இவர் உங்கள் கனவில் வந்திருக்கிறாரா?' என்று போஸ்டர் ஒட்டினார்கள். இப்போது இந்த முகத்துக்கு உரியவரைக் கண்டுபிடிக்க 'திஸ் மேன்' (this man) என்கிற வெப்சைட்டை ஆரம்பித்துவிட்டார்கள். "இவரு கே.ஜி.பி உளவாளி. அமெரிக்காகாரங்க இவரைப் போட்டுத் தள்ளிட்டாங்க', "இவரு நம்ம வூட்டாண்டதான் பொட்டிக் கடை வெச்சிருந்தாரு', 'இந்த சைத்தான் கி பட்சாவை எப்படிப் பிடிச்சீங்க... இந்தாளுதான் டெய்லி கனவுல வந்து நம்ளை டார்ச்சர் பண்றான்" என்று அந்த வெப்சைட்டில் கமென்ட் குவிகிற அளவுக்குப் பரிச்சயமாகிவிட்டது இந்த முகம். 'தப்போ, ரைட்டோ இவர் முகத்தில் என்னவோ இருக்குது!' என்பது பல ஆயிரக்கணக்கானவர்களின் அபிப்ராயம். "வெப்சைட்ல படம் பார்த்த பின்னாடி என் கனவிலும் வர்றான்பா' என்று சமீபமாக பலர் அலறவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 'யார் இவர்?' 'எதற்காகப் பலரின் கனவில் வருகிறார்?' 'எப்படி மற்றவர்களின் கனவில் வர முடிகிறது?' இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தேடி உலகமே காத்துக்கொண்டு இருக்கிறது.

விடை, உங்கள் பக்கத்து வீட்டிலும் இருக்கலாம்!

உலகம் தேடும் ஒரு முகம்!
உலகம் தேடும் ஒரு முகம்!