'அடோபி ஃப்ளாஷ் குறித்துப் பெருமைகொள்ள ஒன்றும் இல்லை. அதை உரு வாக்கி, அடோபிக்கு விற்றுவிட்ட மேக்ரோ மீடியாதான் உண்மையான சாதனையாளன். மேலும், ஆப்பிள், அடோபி, கூகுள் என முட்டி மோதும் புதிய போட்டியாளர்களிடையே, மைக்ரோசாஃப்ட் இல்லாமல்போனது காலத்தின் கட்டாயம்!' - விகடன் டாட்காம் பயனீட்-டாளர் குரு எழுதியிருக்கும் நச்சென்ற பின்னூட்டம் சிந்தனையைத் தூண்டுகிறது.
இணையத் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை கூகுளும் ஆப்பிளும் சுமோ சைஸ் பயில்வான்களாக மோதிக்கொண்டு இருக்க, மைக்ரோசாஃப்ட் தள்ளி நின்று மேலும் கீழும் பார்த்தபடி இருக்கும் நோஞ்சான் குழந்தையாக இருக்கிறது. மைக்ரோசாஃப்ட்டிடம் பணத்துக்குக் குறைச்சல் இல்லை. அவர்களது Office மென்பொருள் மட்டுமே பல பில்லியன்களை ஒவ்வொரு வருடமும் ஈட்டித் தருகிறது. ஆனால், இணையத்தில் வெற்றி பெற, அது மட்டுமே போதுமானது அல்ல. இந்த 10 வருடங்களில் இணையத் துறையை அலசிப்பார்த்தால், இந்தத் துறையில் வெற்றி பெற மூன்று காரணிகள் இருப்பதாகத் தெரிகிறது.
1.வேகம் (Speed): ஐடியாக்களை மிக விரைவாகச் செயலுக்குக் கொண்டுவந்து, மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றாக வேண்டும்.
2. விரைவாக மாறும் தன்மை (Agility): தொடக்க நிலையில் இருந்து வரும் இணையத்தில் சாதிக்க ணீரீவீறீவீtஹ் தேவை.
3. திறந்த மனப்பான்மை (Open Standards): இணையத்தின் மூலக்கூறுகளை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படும் சேவைகளே இத் தளத்தில் வெற்றிபெற முடியும்.
மைக்ரோசாஃப்ட் இந்த மூன்று காரணிகளிலும் பின்தங்கி நிற்கிறது. 'அந்தக் காலத் துல மைக்ரோசாஃப்ட்டுனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்!' என்று தொடங்குகிற கதை
களை அடுத்த தலைமுறைகளுக்கு நாம் சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் தெரிகின்றன.
|