"தமிழ்நாட்டின் காஸ்ட்லியான மறு வாழ்வு இல்லம் எது?"
"தயாராகிறது மேலவை!"
- தா.மு.முகமது இக்பால், தஞ்சாவூர்.
" 'காடுவெட்டி குரு நல்லவர்' என கிறாரே ராமதாஸ்?"
"உண்மையில் குரு இவ்வளவு திட்டியும், அதைக் கண்டுகொள்ளாத கருணாநிதிதான், 'ரொம்ப நல்லவர்'!"
- ஆர்.சண்முகப்பிரியா, சேலம்.
"ஒருவேளை விஜயகாந்த் முதல்வராகிவிட்டால், கருணாநிதியும் ஜெயலலி தாவும் என்ன செய்வார்கள்?"
" 'மைனாரிட்டி தே.மு.தி.க. ஆட்சியைக் கண்டித்து' கட்சிக்காரர்களைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார் ஜெயலலிதா. சிறப்பான எதிர்க் கட்சியாகச் செயல்படுவதைப் பாராட்டி கருணா நிதிக்குப் பாராட்டு விழாக்கள் நடக்கும்!"
" 'முன்னாள்'கள் விலகினாலும்ஆர்ப் பாட்டங்கள், அறிக்கைகள் குறைய வில்லையே?"
"பில்டிங் ஸ்டிராங்... பேஸ்மென்ட் வீக்!"
- ஜெயக்குமார், வந்தவாசி.
"ஈழப் பிரச்னையில் தொடர்ந்து கருணாநிதி கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறாரே, இதனால் யாருக்கு என்ன நன்மை?"
"என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? முகாமில் இருக்கும் தமிழர் களை மீள் குடியேற்றச் சொல்லி கருணாநிதி கடிதம் எழுதுவார். அதை மத்திய அரசு ராஜபக்ஷே வுக்குத் தெரிவிக்கும். ராஜபக்ஷே, 'போதிய நிதி இல்லை' என்பார். மத்திய அரசு 400 கோடி நிதி உதவி தரும். ஆறு மாதங்கள் கழித்து, மீண்டும் கலைஞர் கடிதம், ராஜபக்ஷே கை விரிப்பு, மத்திய அரசு நிதி உதவி, ஸ்ஸ்ஸ்... அப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே!"
- கோ.சண்முகசுந்தரம், ஈரோடு.
" 'நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி வேண்டும்' என்ற வழக்கறிஞர் கள் போராட்டத்துக்கு, தமிழக அரசு சார்பில் அழகிரி ஏன் தூது போனார்?"
"சந்தடிசாக்கில், நாடாளுமன் றத்தில் 'தமிழில் பேசவும் அனுமதி உண்டு' என்று அறிவித்துவிடுவார் கள் என்ற நப்பாசையாக இருக் கலாம்!"
- ஆ.நலங்கிள்ளி, மதுரை.
" 'பா.ம.க. போல வேறு கட்சியிடம் உயர்ந்த கொள்கை இருப்பதாகஅறிஞர் கள் குழு கண்டறிந்தால், பா.ம.க-வைக் கலைக்கத் தயார்' என்கிறாரே ராமதாஸ்?"
"அதுசரி, டெல்லி மேல்சபை எம்.பி. ஸீட்டுக்காக கூட்டணி முடிவை எடுப்பது, அவ்வப்போது 'வெற்றிக் கூட்டணி'யை மாற்று வது போன்ற 'உயர்ந்த கொள்கை கள்' வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதால் பா.ம.க- வைக் கலைக்க வேண்டிய நிர்பந் தம் எதுவும் ஏற்படாது. மேலும், இதுபோல பல 'உயர்ந்த கொள் கைகளை' வகுத்து மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் முன் மாதிரியாக விளங்க பா.ம.க. முன்வர வேண்டும்!"
-சுகுமார், காட்டுக்கானூர்.
"கடும் துன்பத்திலும் ஒருவரால் சிரிக்க முடியுமா?"
"முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் தோழர் ஜீவா. ஒருநாள் அவரது வீட்டுக் கூரை மழையின் காரணமாக ஒழுகிக்கொண்டு இருந்தது. ஜீவாவின் மனைவி பத்மாவதி, 'என்ன வாழ்க்கை இது, எல்லா இடங்களிலும் இப்படி ஒழுகுகிறதே? உட்காரக்கூட இடம் இல்லையே?" என்றுஅலுத்துக் கொண்டார். கொஞ்சமும் பதற்றப் படாமல் ஜீவா சொன்னாராம், 'அதனால் என்ன, எப்படியோ நிற்பதற்கு இடம் இருக்கிறதே' இத்தகைய குணம்தான் அவரை இன்று மகத்தான தலைவராக்கி இருக்கிறது!"
- ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிச்செட்டிபாளையம்.
|