திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஜப்பானைப் பாருங்கள் அழகு!

ஜப்பானைப் பாருங்கள் அழகு!

முனைவர் க.திருவாசகம், துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
ஜப்பானைப் பாருங்கள் அழகு!
ஜப்பானைப் பாருங்கள் அழகு!
ஜப்பானைப் பாருங்கள் அழகு!
 
ஜப்பானைப் பாருங்கள் அழகு!
ஜப்பானைப் பாருங்கள் அழகு!

'தோஸ்த்... ரீ-சார்ஜ் பண்ணதும் மிஸ்டுகால் கொடுக்குறேன். பைக் எடுத்துட்டு பீச்சுக்கு வந்துடு!' போன்ற பட்லர் இங்கிலீஷோ, 'யெஸ்', 'தேங்க்ஸ்' போன்ற ஒற்றை ஆங்கில வார்த்தைகளோ எங்கும் கேட்க முடிவது இல்லை. ஜப்பானில் எங்கேயும், எப்போதும் ஜப்பான் மொழிதான். தாய்மொழி மட்டுமே தொடர்புகொள்ள ஒரே வழி. அந்த நாடு எப்படி முன்னேறும் என்கிறீர்களா? ஆனால், இன்றைய நிலையில் ஜப்பான்தான் உலக நாடு களின் கனவு தேசம்!

ஜப்பானில் பேச்சு மட்டுமல்ல; ஹைக்கூ முதல் ஆராய்ச்சி வரை அத்தனைக்கும் தாய்மொழி ஜாப்பனிஸைத்தான் பயன்படுத்துகிறார்கள். நகோயா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நான்கு பேராசிரியர்கள் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சி மொழி... ஜாப்பனிஸ். இது எப்படிச் சாத்தியம்? 'மருத்துவம், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட ஆங்கில ஆராய்ச்சி நூல்கள், அகில உலக அளவில் வெளிவரும் வார, மாத ஆராய்ச்சி இதழ்கள் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுவிடுகிறது. அது எத்தனை ஆயிரம் பக்கங்களாக இருந் தாலும். எல்லாம் சரி... ஆங்கிலம் தெரி யாமல் எப்படித் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டதாரிகளால் ஜெயிக்க முடியும்? யாருக்கு எல்லாம் ஆங்கிலம் அவசியமோ, அவர்கள் மட்டும் கற்றுக் கொள்ளலாம். சிலருக்கு ஆங்கிலம் தேவை என்பதற்காக, எல்லோருக்கும் ஆங்கிலக் கல்வியைக் கட்டாயம் ஆக்கும் பழக்கம் அங்கு இல்லை. நாடு முழுவதும் ஒரே ஒரு நாளிதழைத் தவிர அனைத்தும் ஜப்பான் மொழியில்தான் வெளிவருகிறது. தாய் மொழியிலேயே அனைத்தும் கிடைக்கும் போது கடைக்கோடி குடிமகனும் தனது திறமையை எளிதாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறான்.

ஆனால், மொழி விஷயத்தில் மட்டும்தான்ஜப்பானில் இந்த அளவுக்குக் கட்டுப் பாடு. தொழில்நுட்பத்தில் எந்தக் கட்டுப்பாடு களும் இல்லை. சின்ன சந்து கிடைத்தாலும் அதில் ஒரு நவீன வசதியைப் புகுத்தி விடுகிறார்கள். ஷாப்பிங் கிளம்பும்போதுகூட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை ஜப்பானியர்கள் எடுத்துச் செல்வது இல்லை. செல்போனில் அந்த வசதியினை அடக்கி இருக்கிறார்கள். செல்போனைக் கடைகளில் உள்ள பிரத்யேக இயந்திரத்தின் முன் நீட்டினால், பணம் கொடுப்பதோ, எடுப்பதோ நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.

ஜப்பானில் மதுபானங்கள் வயது வித்தியாசம் இன்றி அருந்தப்படுகிறது. விலையும் மலிவு. யாரும், எங்கும் அருந்தலாம். ஆனாலும், ஜப்பானியர்கள் நம் குடிமகன்கள் மாதிரி பாதை ஓரத்தில் படுத்து உருள்வதோ, தன்னிலை மறந்து தூங்குவதோ கிடையாது. அங்கே யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது கிடையாது. ஏனெனில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம். அப்படி பிடிபடுபவர்களின் ஓட்டுநர் உரிமம் வாழ்நாள் முழுக்க ரத்து செய்யப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டியவருடன் பயணித்தவருக்கும் கடும் தண்டனை. தன் உயிரின் மதிப்பு தெரியாமல் குடிமகனோடு பயணித்ததற்கான தண்டனை அது.

ஜப்பானைப் பாருங்கள் அழகு!

ஒரு வாரப் பயண காலத்தில் ஓர் இடத்தில்கூட போலீஸ்காரரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், நாடு முழுவதும் சந்துபொந்துகளில்கூட கேமராவைத்து இருக்கிறார்கள். தப்பு செய்தால், அடுத்த விநாடியே போலீஸ் வீட்டுக் கதவைத் தட்டும். இவ்வளவு கட்டுப்பாடுகள் மிகுந்த நாட்டில் ஒரே ஒரு பொருள் மட்டும் அடிக்கடி திருடு போகிறது. அது சைக்கிள். அங்கே இளைஞர்களும், மாணவர்களும் அதிகமாக சைக்கிளைப் பயன்படுத்துகிறார்கள். ரயில்வே ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்ததும், பூட்டி நிற்கிற சைக்கிளின் பூட்டை உடைத்து லவட்டிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள். இந்த ஜாலி திருட்டைத் தடுக்க, 'சைக்கிளுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும்' என்று சட்டம் போட்டு இருக்கிறது ஜப்பான் அரசு.

சைக்கிளுக்கு அடுத்து ஜப்பானியர்களின் ஆதர்ஷ வாகனம்... புல்லட் ரயில். மூன்று நட்சத்திரஹோட்டல் போல இருக்கை முதல் கழிவறை வரை புல்லட் ரயில் அவ்வளவு பளபளப்பு. மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

கோயில்களை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. 'நாங்கள் வருடத்துக்கு ஒரு முறை, புது வருடம் பிறக்கும்போதுதான் கோயிலுக்குச் செல்வோம். மற்றபடி கோயிலுக்குச் சென்று பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பது கிடையாது. கடவுள் நம்பிக்கையைவிட எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம்' என்று சிரிக்கிறார்கள்.

ஜப்பானைப் பாருங்கள் அழகு!

ஹிரோஷிமா, முதன்முதலாக அணு ஆயுதத்துக்கு பலியான நகரம். 2 லட்சத்து 50 ஆயிரம் பேரைப் பலிகொண்ட அணுகுண்டு விழுந்த இடத்தை, அந்த சிதிலத்தை மட்டும் அப்படியே விட்டுவைத்து இருக்கிறார்கள். அந்த இடத்தைப் பார்த்ததுமே அனைத்து நாட்டு மக்களின் முகமும் இறுகிவிடுகிறது. சிலர் கண்ணீர் வடிக்கிறார்கள். அருகிலேயே ஓர் அமைதிப் பூங்கா. அதில் இந்தியா கொடுத்த பிரமாண்ட மணி ஒன்று இருக்கிறது. 'உலகில் அணு ஆயுதம் அறவே அழிக்கப்பட வேண்டும்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. பூங்காவுக்கு வருகிறவர்கள் அந்த மணியை அடித்து, அணு ஆயுதத்துக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்கின்றனர்.பூங்காவுக்கு அருகில் இருக்கும் ஒரு மியூஸியத்தில், 'எதற்காக அந்த அணுகுண்டு வீசப்பட்டது, யார் எல்லாம் கூடி முடிவு எடுத்தார்கள், அவர்களுக்கு இடையேயான கடிதப் பரிவர்த்தனைகள் (நிஜ பிரதிகள்), வீசப்பட்ட அணுகுண்டின் திறன், அது ஏற்படுத்திய பாதிப்பு, இறந்தவர்களின் மிஞ்சிய உடைகள், செருப்புகள், அங்கஹீனத்தால் பாதித்தவர்கள், தப்பித்தவர்கள் என அழிவுத் துயரத்தை கண் முன் காட்சிப்படுத்துகிறார்கள்.

வெளியே வந்ததும் பள்ளிக் குழந்தைகள் சிலரு டன் நான் போட்டோ எடுத்துக்கொண்டேன். போட்டோவுக்கு நிற்கும்போது, தானாகவே அந்தக் குழந்தைகள் இரண்டு விரல்களைக் காட்டி நின்றனர். 'இதற்கு என்ன விளக்கம்?' என்று கேட்டேன், 'we want peace!' ('எங்களுக்குத் தேவை அமைதி!') என்றாள் ஒரு சிறுமி.

கனவு தேசத்தின் கனவு அது!

 
ஜப்பானைப் பாருங்கள் அழகு!
ஜப்பானைப் பாருங்கள் அழகு!