திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சிங்கம்ல! : சார்லஸ்

சிங்கம்ல! : சார்லஸ்

சார்லஸ்
சிங்கம்ல! : சார்லஸ்
சிங்கம்ல! : சார்லஸ்
சிங்கம்ல!
 
சிங்கம்ல! : சார்லஸ்
சிங்கம்ல! : சார்லஸ்

'சிங்கம்டா' என்று நிரூபித்து இருக்கிறார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். ஐ.பி.எல் சீஸன் 3-ன் சாம்பியன்கள்!

சிங்கம்ல! : சார்லஸ்

ஆரம்பம் முதலே அதிரடி ராஜாவாக தடதடவென வெற்றிகளைக் குவித்து இறுதிப் போட்டி தொட்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் அத்தனை பேரும் கலக்கல் ஃபார்மில் இருந்தார்கள். கடைசி லீக் போட்டியின் கடைசி ஓவரில் பறந்த இரண்டு சிக்ஸர்களால் மட்டுமே அரை இறுதி தொட்ட சென்னை அணிக்கு, 'கன்சிஸ்டென்சி என்றால், கிலோ என்ன விலை?' என்று விசாரிக்கும் நிலை. ஆனாலும், லகானை இறுக்கிப் பிடித்து வெற்றிக் கோப்பை கைப்பற்ற முழுமுதற் காரணம்... டோனி!

அவசியத் தருணங்களில் டோனியின் சரவெடி ஆட்டமும், அசத்தலான வியூகமும்தான் சென்னை அணியை சாம்பியன் ஆக்கியது. ஒரு சின்ன உதாரணம்... இறுதிப் போட்டியில் சென்னை அணியின் ஸ்கோரை சேஸ் செய்துகொண்டு இருந்தது மும்பை. வெற்றிக்கு 18 பந்துகளில் 55 ரன்கள் தேவை. 'மும்பை ஜெயிக்க சாத்தியம் இல்லை!' என்று நினைத்த சமயம் கிரீசுக்கு வந்தார் மும்பை அணியின் பொலார்ட். இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் என அசுரத்தனமாக ஒரே ஓவரில் 22 ரன்கள் அள்ளினார். தராசு மும்பை பக்கம் தடாலடியாகச் சாய்ந்தது. மிச்சம் இருக்கும் பந்துகளை பொலார்ட் எதிர்கொண்டால், மும்பை ஜெயிப்பது நிச்சயம் என்ற நிலை. அடுத்த ஓவரிலும் ஒரு ஃபோர் அடித்துவிட்டு பொலார்ட் ஆக்ரோஷமாக அடுத்த பந்துக்குக் காத்திருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்றிருந்த மேத்யூ ஹைடனை மிட்-ஆஃப்பில் நிறுத்துகிறார் டோனி. தவறான யார்க்கராக விழுந்த பந்தை பொலார்ட் அலேக்காகத் தூக்கிஅடிக்க முயற்சிக்க, உயரம் குறைவாக வந்த பந்தை கடைசித் தருணத்தில் கேட்ச் பிடித்தார் ஹைடன். பொலார்ட் அவுட், சென்னை சாம்பியன்!

'ஒரே ஓவரில் 22 ரன்களைக் குவித்த பிறகு பொலார்டைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை உணர்ந்தேன். ஹைடனும் பொலார்ட்டும் பந்தை முரட்டுத்தனமாக விரட்டும் தன்மைகொண்ட ஆஜானுபாகுவான ஸ்ட்ரைக்கர்கள். நெட் பிராக்டீஸின்போது ஹைடன் யார்க்கராக விழும் பந்தை அடிக்க முற்பட்டு மிட்-ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்துக்கொண்டு இருப்பார். அதேபோல பொலார்ட்டும் ஆடலாம் என்று நினைத்து ஹைடனையே மிட்-ஆஃப்பில் நிற்கவைத்தேன்!' என்று பின்னர் கூறினார் டோனி. அத்தனை பரபரப்பான சுழ்நிலையிலும் நெட் பிராக்டீஸ் சம்பவத்தை நினைவுகூர்ந்து வியூகம் வகுத்த சமயோசிதம்தான் 'கூல் கேப்டன்' டோனியின் ப்ளஸ்!

சிங்கம்ல! : சார்லஸ்

கேப்டன் டோனிக்குப் பக்கபலமாகத் தோள் கொடுத்தது துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா. இமாலய சிக்ஸர்கள் தூக்கி சென்னையின் ரன்ரேட்டை உயர்த்தியதோடு, ஃபீல்டிங்கில் அபாரமாகப் பறந்து கேட்ச்கள் பிடித்து எதிர் டீமின் ரன் ரேட் உயராமல் பார்த்துக்கொண்டார். இந்தியா முழுக்க 'பெஸ்ட் ஃபீல்டர்' விருதுக்கு ரசிகர்கள் இவரைத் தேர்ந்தெடுத்தனர். இனி, இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ், ரெய்னாதான்! 'எப்படிப் போட்டாலும் அடிக்குறான்டா' என்று எதிரணி பவுலர்களுக்கு கிலி ஏற்படுத்திய சிக்ஸர் சிங்கம் முரளி விஜய். தொடரில் அதிகபட்ச சிக்ஸர்கள் விளாசிய சென்னை அணியில் விஜய்யின் பங்கு கணிசமானது. நம்பர் ஒன் ஸ்பின்னர் முத்தையா முரளிதரனுக்கு இணையாக பவுலிங் போட்டு அசத்திய அஷ்வின், அணியின் நம்பிக்கை நட்சத்திரம். இறுதிப் போட்டியில் முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசிய அஷ்வினை அத்தனை கண்களும் ஆச்சர்யமாகப் பார்த்தன. கோப்பை கைக்கு எட்டியதில் போலிஞ்சரின் புயல் வேகப் பந்துவீச்சுக்கு மிரட்டல் பங்கு உண்டு.

சிங்கம்ல! : சார்லஸ்

நிற்க. 'இந்த வெற்றிப் பயணம் அப்படியே அடுத்த வருடமும் தொடரும்!' என்று மிதமிஞ்சிய ஆனந்தத்தில் திளைக்க வேண்டாம். அடுத்த வருடம் மீண்டும் ப்ளேயர்கள் ஏலத்தில் செல்லவிருப்பதால், டோனியே சென்னைக்குச் சிக்குவாரா என்பது சந்தேகம்தான். சென்னை அணியிலேயே நீடிக்க விரும்புவதாக டோனி சொன்னாலும், புதிதாக உதயமாகி உள்ள புனே அணிக்காக சஹாரா நிறுவனம் டோனியைக் கொத்திக்கொள்ளக் காத்திருக்கிறது. எனவே, அடுத்த வருடம் எதுவும் நடக்கலாம்!

சிங்கம்ல! : சார்லஸ்

பின் குறிப்பு: மிகத் துல்லியமாக சென்னை வெற்றி பெற்ற நொடியில், 'ஐ.பி.எல் தலைவர் பதவியில் இருந்து உங்களை சஸ்பெண்ட் செய்கிறோம்!' என்ற தகவலை லலித்மோடிக்கு மெயில் செய்துள்ளது பி.சி.சி.ஐ செயற்குழு. 'லலித்மோடியோடு சேர்த்து வேறு யாரெல்லாம் சேர்ந்து தவறு செய்தார்கள்?' போன்ற விவரங்கள் வெளிவந்துவிடக் கூடாது என்பதுதான் பின்னணிக் காரணம் என்கிறார்கள். தன் மேல் பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்று தகவல் தெரிந்ததுமே, லலித் மோடி சந்தித்த நபர் யார் தெரியுமா? முகேஷ் அம்பானி!

கிரிக்கெட் இன்று யார் கையில் இருக்கிறது என்று இப்போதாவது புரிகிறதா?

 
சிங்கம்ல! : சார்லஸ்
சிங்கம்ல! : சார்லஸ்