திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஜூன் மாதம் கொழும்பில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருதுகள் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் கலந்துகொள்வார் என்பதால், ரஜினி, கமல் ஆகியோர் அழைப்பினை மறுத்திருக்கிறார்கள். ஆனால், 'ராவணா' படத்தின் சிறப்புக் காட்சி அங்கு திரையிட இருப்பதால், மணிரத்னம் மட்டும் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார். ராவணன் பூமியாச்சே!

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து சசி தரூர் விலகிக்கொண்டதால், ராகுல் காந்திக்குத் தலைவலி. சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ஜித்தின் பிரசாதா என ராகுலுக்கு நெருக்கமான இளம் எம்.பி-க்கள் அந்தப் பதவிக்காக அவரை நச்சரிக்கிறார்களாம். 'டிவிட்டர் அக்கவுன்ட் இல்லாதவங்களுக்குத்தான் பதவி'ன்னு சொல்லுங்கப்பா!

இன்பாக்ஸ்

கட்டிப்பிடி வைத்தியத்தில் பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டியை மிஞ்சிவிட்டார் ஹர்பஜன் சிங். ஐ.பி.எல். அரை இறுதியில் வெற்றிபெற்றதும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியை அலேக்காகத் தூக்கி வெற்றியைக் கொண்டாடியதில் அதிர்ந்துவிட்டார்களாம் மற்ற மும்பை இந்தியன்கள். 'நீட்டா என் அம்மா மாதிரி!' என்று சமாளித்துவிட்டார் ஹர்பஜு. பெரிய இடம் பாஜி!

இன்பாக்ஸ்

சைஸ் ஜீரோ இடுப்பழகு காண்பித்தும் எடுபடாததால், முகூர்த்தத்துக்குத் தேதி குறித்துவிட்டார் ராணி முகர்ஜி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மகன் ஆதித்யா சோப்ராதான் ராணியின் ராஜா. திருமணத்தை சிம்பிளாக நடத்த வேண்டும் என்பது ராணியின் விருப்பம். ராஜா-ராணி கல்யாணம்!

ஹாரி பாட்டர்' புகழ் ஜே.கே.ரௌலிங் அரசியலில் அடியெடுத்துவைக்கிறார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவருகிறார். கட்சி வெற்றியைக் குவித்தால், ரௌலிங்குக்கு முக்கியப் பதவி என வாக்களித்திருக்கிறாராம் கார்டன் பிரவுன். இனி மக்கள்தான் வாக்களிக்கணும்!

சினிமாவில் நடிக்கவிருக்கிறார் லியாண்டர் பயஸ். 'வில்லனாகக்கூட நடிக்கத் தயார். ஆனால், ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் கேரக்டர் மட்டும் வேண்டவே வேண்டாம்!' என்கிறாராம் கதை சொல்ல வருபவர்களிடம். காதலி கேரக்டருக்கு ஷார்ட் ஸ்கர்ட் மாட்டி டென்னிஸ் ஆடவைப்பாங்களே நம்ம பசங்க!

இன்பாக்ஸ்

விஜய்யுடன் 'காவல்காரன்' படப்பிடிப்பில் தலையில் நாகலிங்கப் பூ வைத்து நடித்தாராம் அசின். 'அந்த வாசனைக்குப் பாம்பு வரும்!' என்று பயம் காட்டியிருக்கிறார்கள். அலட்டிக்கொள்ளாத அசின் மறுநாள் ஷூட்டிங்குக்கு வந்தபோது, அவரது கழுத்தில் படர்ந்திருக்கிறது ஒரு பாம்பு. ஸ்பாட்டில் இருந்தவர்கள் அலற, அந்த பிளாஸ்டிக் பாம்பைக் கையில் எடுத்துச் சுற்றிக்கொண்டே சிரித்தாராம் அசின். பாவம் பாம்பு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கால்ஷீட் பிரச்னை இல்லை. ஆனால், துளி கிளாமர் என்றாலும் தடா!' என்று கதை சொல்ல வரும் தமிழ் இயக்குநர்களிடம் ஏக கெடுபிடி காட்டி வந்தார் நயன்தாரா. ஆனால், கன்னடத்தில் உபேந்திராவுடன் நடிக்கப் போன இடத்தில், துளி மிச்சம்வைக்காத கிளாமர் கேரக்டர். மூச்சு காட்டாமல் முழுத் திருப்தியுடன் நடித்துக் கொடுத்திருக்கிறாராம். போங்கு!

விலைவாசி உயர்வு, நக்சலைட் பிரச்னை என நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு, வேண்டுமென்றே ஐ.பி.எல், சசிதரூர் என விவகாரத்தைத் திசை திருப்புகிறது மத்திய அரசு. பல கோடி ரூபாய் ஊழல் செய்த மதுகோடா விவகாரம்போலத்தான் இதுவும் புஸ்ஸாகும்' என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார் பிரகாஷ் காரத். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

லண்டனில் இருந்தபடியே புதிய அரசியல் கட்சி துவக்கி பாகிஸ்தான் மக்களிடம் அபிமானம் பெறலாம் என்ற முஷ்ரப்பின் எண்ணத்துக்கு மரண அடி விழுந்திருக்கிறது. பெனசிர் புட்டோ படுகொலைக்கு அப்போதைய அதிபர் முஷ்ரப்பின் மெத்தனமே காரணம் என்று ஐ.நா. சபையின் விசாரணைக் குழு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இப்போது முஷ்ரப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் கோரிக்கைவைத்திருக்கிறார் பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் சர்தாரி. இப்போ சர்தாரிதானே சர்வாதிகாரி?

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்