திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
 
விகடன் வரவேற்பறை

அதீதத்தின் ருசி
மனுஷ்ய புத்திரன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
11/29. சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
பக்கம்: 246 , விலை ரூ.150

விகடன் வரவேற்பறை

பிரபஞ்சத்தை அளாவிச் செல்கிற பேராறு கவிதை. நல்ல கவிதைகள் மலர்களைப்போலத் தாமாகவே உருவாகின்றன. மனுஷ்ய புத்திரன் தன் படைப்புத் திறனின் உச்சத்தில் இருந்து எழுதிய கவிதைகளாக இதைச் சொல்லலாம். வாசகன் அறியாமல் அவனுள் இருக்கிற அனுபவச் சாத்தியக்கூறுகளை இந்தக் கவிதைகள் தொட்டுத் துழாவுகின்றன. உறவுகளின் புனிதங்கள் கட்டுடைபடுகின்றன. நம் முகம் பார்க்கிற கண்ண£டியைப்போன்ற கவிதைகள் என எளிமையாகச்சொல்லி விடலாம். கேட்கக் கூடாத கேள்விகள், அதீதத்தின் ருசி, விரோதத்தின் முள் போன்ற கவிதைகளைப்பற்றி இன்னும் பேசலாம். தனி அனுபவம், பொது அனுபவம், மீண்டும் வேறொரு தனி அனுபவமாக உருமாறுவதாக இந்தக் கவிதைகளைச் சொல்ல வேண்டும்!


சாதி
இயக்கம்: சக்தி மோஹன்
வெளியீடு: 61. காமாட்சி அம்மன் கோயில் வளாகம்,
பாம்பூரணி மேல்கரை, வெளிப்பட்டணம், ராமநாதபுரம்.
விகடன் வரவேற்பறை

சாதி வேற்றுமைகள் கொண்டுவருகிற சீர்குலைவு கள் கொஞ்சநஞ்சம் அல்ல. கிராமங்கள் இன்னும் அவற்றின் பிடியில் அதிகமாக இருப் பதை அதன் கொடுமையைப் படம் ஆக்கியிருக்கிறார் சக்தி. சமூகத்துக்குத் தேவையான படைப்பு. உள்ளுணர்வில் சலனம் ஏற்படுத்தக்கூடிய கைவண்ணம். பொறுப்புள்ள எவரும் புரிந்துகொள்ள முடிகிற உணர்வு வெளிப்பாடு!


ரப்பர் டிப்பர்!
http://adikkadi.blogspot.com/
விகடன் வரவேற்பறை

சினிமா பத்திரிகையாளர் அந்தணனின் வலைப்பூ. திரைப்படக் கலைஞர்களுடனான தனது அனுபவங்களைச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்கிறார் அந்தணன். நமீதா படப்பிடிப்பில் மிளகாய்த் தூள் கொட்டப்பட்ட களேபரம், பீரோவோடு திருடனைத் தூக்கும் காட்சியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அடிபட்ட கதை, விஜய டி.ராஜேந்தரின் ஜோசிய அபிமானம் என நாமறிந்த கலைஞர்களின் இன்னொரு சுவையான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன பதிவுகள். வள்ளலாரின் மறுபிறவி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவரின் அலப்பறை தனிக் கதை. 'தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா' என்பது போன்ற வரிகள் வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன!


களவாணி
இசை: எஸ்.எஸ்.குமரன்
வெளீயிடு: ஜங்லீ மியூஸிக், விலை ரூ.99
விகடன் வரவேற்பறை

'பூ' படத்தில் அறிமுக முத்திரை பதித்த எஸ்.எஸ்.குமரனின் இசை. பழக்கமான காதல் மெலடியாக ஒலிக்கும், 'ஒருமுறை இருமுறை' பாடலின் 'தம்மா தம்மா' அதிரடித் தாளம் வசீகரிக்கிறது. கிராமத்துக் கம்மாக் கரையோரம் பேருந்துக்குக் காத்திருக்கும் நேரம் காது மடல் வருடும் தெம்மாங்கு ரிங்டோனாக ஒலிக்கிறது 'பேஞ்ச மழை காஞ்ச நேரம்' பாடல். பிரளயனின் ஒவ்வொரு வார்த்தைகளும் சோகம் சுமக்கும் 'ஊரடங்கும் சாமத்திலே' பாடலுக்கு உறுத்தாமல் கனம் சேர்க்கிறது இசை. அபார வாத்சல்யங்கள் இல்லாமல் தாளம் போடவைக்கிறது 'துபாய்க்குப் போகப் போறேனே' பாடலின் குதூகலக் குத்து. அதிர்வுகளை ஏற்படுத்தாமல் கடந்து செல்லும் ஆல்பம்!


விகடன் வரவேற்பறை

புகழ்பெற்ற தி லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் வெப்சைட் இது. இன்றைய தினம் உலக சரித்திரத்தில் என்னவெல்லாம் நடந்தது, எத்தனை கண்டுபிடிப்புகள், எத்தனை இழப்புகள், அரசியல் மாற்றங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக விவரிக்கிறார்கள். ஒரு சம்பவம்பற்றிக் குறிப்பிட்டு அது எங்கிருந்து எடுக்கப்பட்டது, அது தொடர்பான புத்தகங்கள் என சோர்ஸ் பற்றிச் சொல்வது இத் தளத்தின் சிறப்பு. இன்று மட்டுமல்ல, வருடத்தின் 365 நாட்களுடைய வரலாற்று நிகழ்வுகளையும் இங்கே அறிந்து கொள்ளலாம்!

 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை