திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
அப்பா மரணம் மகனுக்கு விடுமுறை!
 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

''விபரீதமான கேள்வி - புத்திசாலித்தனமான பதில்! உதாரணம் ப்ளீஸ்?''

''புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் வி.எஸ்.காண்டேகர். அவருடைய மகன் ஒருநாள் பள்ளியில் இருந்து சீக்கிரமாகவே வீட்டுக்குத் திரும்பிவிட்டான். 'என்ன சீக்கிரம்?' என்று கேட்டார் காண்டேகர். 'யாரோ ஒரு தலைவர் இறந்துவிட்டாராம். அதனால் பள்ளிக்கு விடுமுறை' என்றான். அதோடு விடவில்லை, 'தலைவர்கள் இறந்தால் கட்டாயம் விடுமுறை விட வேண்டுமா?' என்று கேட்டான். 'புகழ்பெற்றவர்கள் இறந்தால் விடுமுறை விடுவது மரபு' என்றார் காண்டேகர். உடனே, அந்த விபரீதமான கேள்வியைக் கேட்டான் சிறுவன். 'அப்படி என்றால், நீங்கள் இறந்தாலும் விடுமுறை விடு வார்களா?' ஒருகணம் திகைத்த காண்டேகர், 'யாருக்கு விடுமுறையோ இல்லையோ கண்டிப்பாக உனக்கு விடுமுறை' என்றார்!''

- கோ.ஞானகுரு, விருதுநகர்.

''தேர்வுவைக்க புத்திசாலித்தனம் தேவையா?''

''ஒரு மனநோய் மருத்துவமனையைப் பார்வையிட இரண்டு பத்திரிகையாளர்கள் வந்து இருந்தார்கள். 'மனநோய் சரியாகிவிட் டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?' என்று தலைமை மருத்துவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், 'மருத்துவமனைக் குழாயின் அடியில் ஒரு அண்டாவை வைப்போம். பின்பு குழாயைத் திறந்துவிடுவோம். நோயாளிகளிடம் ஒரு வாளியைக் கொடுத்து, அண்டாவில் உள்ள நீரைக் காலி செய்யச் சொல்வோம்' என்றார். குழம்பிய பத்திரிகையாளர்கள், 'இதிலிருந்து அவருக்கு மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?' என்று கேட்டார்கள். 'மனநோய் சரியாகி இருந்தால் முதலில் அவர்கள் குழாயை மூடிவிடுவார்கள்' என்றார்!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''விஜயகாந்த், கேப்டன் டி.வி தொடங்கிஇருப்பதால் டி.வி உலகில் என்ன மாற்றம் நடக்கும்?''

''இன்னும் சில மாதங்களில், டாப் டென்னில் 'விருத்தகிரி' படத்துக்கும் முதலிடம் கிடைக்கும்!''

- மு.பழனி, சென்னை.

''நான் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்னு மக்கள் நினைக்கிறாங்க'' என்கிறாரே விஜய்?''

''ஒருவேளை சினிமா நல்லா இருக்கும்னு நினைப்பாங்களோ!''

- சி.தீபா, மங்குடி.

''சமீபத்தில் சிந்திக்க வைத்தது?''

''தலித்முரசு இதழில் 'தலித் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டிய கேள்விகள்' என்று 50 கேள்விகள் பட்டியலிடப்பட்டு இருந்தன. அதைப் படித்தபோது உண்மையிலேயே அரசியல் சட்டத்தை அரசு மதிக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. உதாரணத்துக்குச் சில...

1. தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் 1980-களில் 20 சதவிகிதமாக இருந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது அரசுக்குத் தெரியுமா? இதற்குக் காரணம் உரிய கல்வித் தொகைகள் அளிக்கப்படாததே.

2. தமிழக அரசின் உதவி பெறும் 354 பள்ளிகளில் பிளஸ் டூ-வில் 1 சதவிகித தாழ்த்தப்பட்ட மாணவர்கள்கூட சேர்க்கப்படவில்லை என்பது அரசுக்குத் தெரியுமா?

3. தமிழ்நாடு அரசு கட்டித்தரப் போகும் கான்கிரீட் வீடுகள் பட்டா உள்ளவர்களுக்குத்தான். அப்படி என்றால் பட்டா இல்லாமல் வாழும் பட்டியலின மக்களுக்குத் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

இப்படிப் பல கேள்விகள் தொடர்கின்றன!

- க.சுபாஷ், மயிலாடுதுறை.

எல்லோரும் எழுதலாம்!

கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!