திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
 
5 கேள்விகள்
5 கேள்விகள்

ஜி.கே.மணியிடம்...

''சட்டசபையில் பா.ம.க எம்.எல்-ஏக்கள் போட்டி போட்டுக்கொண்டு முதல்வரைப் புகழ ஆரம்பித்துவிட்டீர்களே?''

''மக்களின் பிரச்னைகளை அரசிடம் எடுத்துச் சொல்கிறோம். அரசு நல்லது செய்தால், அதை வரவேற்கிறோம். செய்யாதவற்றைச் சுட்டிக்காட்டுகிறோம். தேவை என்றால் கடிந்து சொல்லவும் நாங்கள் தயங்குவது இல்லை. பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகச் செயலாற்றி வருகிறோம்!''

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம்...

''தமிழக அரசிடம் கேட்காமல் சிகிச்சைக்கு வந்த பிரபாகரனின் தாயாரை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது ஏன் என்று, மத்திய அரசிடம் தி.மு.க கேள்வி எழுப்பி உள்ளதே?''

''இவர்களுக்குத் தெரியாமல் திருப்பி அனுப்பினார்கள் என்பது எல்லாம் எப்படி முடியும்? விமான நிலையத்தில் தமிழக அரசின் உளவுத் துறை ஆட்கள் எப்போதும் இருப்பார்கள். யார் வந்தாலும் போனாலும் உடனடியாக தமிழக அரசுக்குத் தெரிந்துவிடும். அதுவும் பிரபாகரனின் தாயார் வந்து, அவரைத் திருப்பி அனுப்பின விவகாரம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்திருக்கிறது. அப்படி இருக்க தமிழக அரசுக்குத் தெரியாமல் நடந்தது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படி என்றால் இவர்களின் உளவுத் துறை என்ன அத்தனை திறமையற்றதா?''

இயக்குநர் மணிவண்ணனிடம்...

''தீவிர நாத்திகராக இருந்த நீங்கள் கோயில், குளம் என்று சுற்றிவரத் துவங்கிவிட்டதாகக் கூறுகிறார்களே?''

''ஷீரடி, சாய்பாபாவுக்கு மட்டுமே சொந்தமான ஊர் கிடையாது. நான் ஒரு மார்க்சிஸ்ட் என்ற முறையில் ஷீரடிக்குப் போயிருந்தேன். உடனே 'மணிவண்ணன் ஷீரடிக்கு ரகசியப் பயணம்' என்று சாமியாராகச் சித்தரித்து எழுதிவிட்டனர். ரகசியமாகச் செல்ல ஷீரடி என்ன வன்னிக் காடா? அதுவும் இந்தியாவில்தானே இருக்கிறது?''

வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜிடம்...

''சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தியது தி.மு.க-வினரா?''

''இல்லை. ஆறேழு வழக்கறிஞர்கள் முதல்வருக்குக் கறுப்பு கொடி காட்டினார்கள். அவர்களை மற்றொரு தரப்பு வழக்கறிஞர்கள் அப்புறப்படுத்தினர். அவ்வளவுதான்!''

நடிகை வரலட்சுமியிடம்...

''சிம்புவுடன் நீங்கள் நடிப்பதாகக் கூறிய படம் என்ன ஆனது?''

'' 'வாலிபன்' என்ற படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. தற்போது அந்தப் படத்துக்கு முன்பாக, அவருடன் 'போடா போடி' என்ற படத்தில் நடிக்கிறேன். படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில் படமாக்க உள்ளனர்!''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்