செல்லப் பெயர்: உதய்.
முதல்வர் தாத்தா: தலைவர்- தாத்தாவை அப்படித்தான் கூப்பிடுவேன். நான் அடிக்கடி கோபாலபுரம் வர்றதில்லைனு தலைவருக்கு வருத்தம். எப்போதாவது போகும்போது, 'என்ன புரொடியூசர் சார் பயங்கர பிஸியோ?'ன்னு கிண்டல் அடிப்பாரு!
அப்பா - அம்மா: அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். 'புரியுதோ இல்லையோ மனப்பாடம் செய்தாவது மார்க் எடு!'ன்னு சொன்னவங்க. 'புரிஞ்சு படி... புரியலைன்னா தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுப் படி. மற்றபடி மனப்பாடம் செய்யாதே'ன்னு சொன்ன ஜென்டில்மேன் அப்பா!
நெருங்கிய நண்பன்: மகேஷ். மாமா அன்பில் பொய்யாமொழியின் மகன். 'உனக்கு மகேஷ்தான்டா ஃபர்ஸ்ட் ஒய்ஃப்' என்று வீட்டில் இருப்பவர்கள் கிண்டலடிக்கும் அளவுக்கு அடர்த்தியான நட்பு! விஷால், வெங்கட், விஜய், சூர்யா, தரணி, கே.எஸ்.ரவிக்குமார், தீரஜ், சசி ஆகியோரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!
காதல்: காதல் மனைவி கிருத்திகா. செல்லமாக 'கிரு'. கல்லூரிக் காதல் என்பதால் இன்னமும் தோழியாகவே ஓர் உணர்வு. அம்மாவின் கண்டிப்பும் அவ்வப்போது அதட்டும்!
வாழ்நாள் பரிசு: மகன் இன்பநிதி. செல்லமா இன்பா. சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்கூட நின்னு எடுத்த போட்டோவைக் கையில் வெச்சுட்டே திரியிறார் மிஸ்டர் சேட்டை. ஒரு தடவை அவனை விட்டுட்டு நானும் கிருவும் நியூயார்க் போயிருந்தோம். அங்கே அவனோட பிரிவைத் தாங்க முடியாம ரெண்டு பேரும் கைல 'இன்பா'னு பச்சை குத்திக்கிட்டோம்!
இஷ்டம்: அம்மா வைக்கிற வத்தக் குழம்பு, மீன் குழம்பு, திண்டுக்கல் வேணு பிரியாணி, சமீபத்தில் வாங்கியிருக்கும் ஐ-போன்!
கஷ்டம்: நண்பர்கள், உறவினர்கள் சிபாரிசுன்னு நம்மகிட்ட வரும்போது 'முடியாது'ன்னு சொல்ல ரொம்பக் கஷ்டப்படுவேன்!
சினிமா: குருதிப் புனல், அஞ்சாதே, கில்லி, பசங்க, விண்ணைத்தாண்டி வருவாயா, மணிரத்னத்தின் எல்லாப் படங்களும்!
துரை தயாநிதி அழகிரி
செல்லப் பெயர்: குடும்பத்தினருக்கு தயா, மற்றவர்களுக்கு துரை, நெருங்கிய நண்பர்களுக்கு க்ளவ்டி!
முதல்வர் தாத்தா: துரைன்னு கூப்பிடுவாரு. தாத்தாவைப் பார்க்கிறதுன்னாலே பயம்தான்.
|