போயஸ் கார்டனோ, அ.தி.மு.க. தலைமைக் கழகமோ... உள்ளே ஜெயலலிதா இருந்தால் வெளியே பரிதாபமாக நின்றிருப்பார் ராமகிருஷ்ணப் பிள்ளை. 15 வருடங்களாக இதுதான் வழக்கம். கடந்த வாரத்தில் அவருக்கு திடீர் லாட்டரி. போயஸூக்குள் பிள்ளையை அழைத்தார் அம்மா. 'ஏன் நீங்க இங்கேயே இருக்கீங்க... குடும்பம் இல்லையா? போயி அவங்களைக் கவனிக்க
வேண்டியதுதானே' என்று ஜெ. கேட்க, 'கட்சி கட்சின்னு இருந்ததால் வீட்டோட தகராறு' என்றார் சார். சிறுதாவூர் பங்களாவில் 5,000 சம்பளத்துக்கு வேலை போட்டுக் கொடுத்தார். ஆனால், விடவில்லை ராமகிருஷ்ணன். 'மயிலாப்பூர் சீட் கொடுத்தா, நான் நின்னு ஜெயிப்பேன்மா!' என்று இவர் அளித்த பதிலில், தனது பல் வலியை மறந்து (ஜெ-வுக்கு இரண்டு வாரமாகப் பல் வலி!) சிரித்தார். 20 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகையாக ராமகிருஷ்ணனுக்குத் தரப்பட்டுள்ளது. அம்மா இருக்கும் இடத்தில் கேட்டுக்கு வெளியே இருக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது!
தாமரையின் சீற்றம்
கொழும்பில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் சினிமா பிரமுகர்களில் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் என்பது தெரிய வில்லை. ஆனால், அனைத்துப் பிரமுகர்களுக் கும் கவிஞர் தாமரை தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். 'முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக் களத்தில் கூத்தடிப்பதையா வது தடுக்கலாம்தானே?' என்ற அவரது வார்த்தைகள் படிப்பவர் மனதைக் கரைக்கிறது!
40 ஆண்டு நட்பு!
|