Published:Updated:

டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!

டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!

டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!

டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!

Published:Updated:

டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!
டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
டாக்டர் நாராயணரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்
டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!
கவலைப்படாதே சகோதரா!

டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!

டுத்தர வயது ராமநாதனுக்குச் சர்க்கரை நோய். எந்தக் கட்டுப்பாடுகளையும் அவர் கடைப்பிடிக்கவில்லை. கூடவே புகைப் பழக்கமும். விறைப்புத்தன்மையில் குறைபாடு எழ, டாக்டரிடம் போனார். 'மாத்திரை தருகிறேன்!' என்றார் அவர்.

'எவ்வளவு நாளைக்குச் சாப்பிடணும்?'

'எப்பெல்லாம் உறவில் ஈடுபட விருப்பமோ... அப்பெல்லாம்!'

'ஏற்கெனவே சர்க்கரை நோய்க்காக நிறைய மருந்து சாப்பிடுகிறேன். இது வேறயா. நிரந்தரத் தீர்வு இல்லையா டாக்டர்?'

'அப்படின்னா ஆபரேஷன்தான். ஒரு மருத்துவ சாதனத்தை உங்கள் பிறப்புறுப்பின் சதையினுள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவார்கள். அந்த ஆபரேஷன் பெயர் Penile Implant Surgery!"

ஆம், இப்போதெல்லாம் மருந்து மாத்திரைகள் மூலம் ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை பாதிப்புக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால்,

கடைசி உபாயமாக இந்த இம்ப்ளான்ட் சர்ஜரி பரிந்துரைக்கப்படுகிறது. விறைப்புத்தன்மைக் கோளாறுக்கு மட்டுமல்ல; பிறவியிலேயே பிறப்புறுப்பு சிறிதாக இருப்பது, உறுப்பு வளைந்திருப்பது போன்றவற்றுக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும். இவை போக, Gender re-assignment Surgery எனப்படும் ஆணாக மாற ஆசைப்படும் பெண்ணுக்கும் இந்த அறுவை சிகிச்சைதான் சாய்ஸ்.

1936-ல் முதன்முதலில் ஆட்டின் நெஞ்செலும்பை வைத்து இந்த இம்ப்ளான்ட் தயாரிக்கப்பட்டது. தற்போது சிலிகான் (அ) பாலியூரித்தின் போன்றவற்றால் தயாரிக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் மட்டுமே இதனை செய்ய முடியும். இந்த இம்ப்ளான்ட் சிகிச்சையில் இரண்டு முதல் பத்து சதவிகிதம் வரை இன்ஃபெக்ஷன், தொழில்நுட்பக் குறைபாடு பிரச்னைகள் எழவும் வாய்ப்புண்டு.

டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் ஆண்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொள்கிறார்கள். இந்தியாவிலும் இம்முறை தற்போது பிரபலமாகி வருகிறது. இம்ப்ளான்ட் சாதனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அறுவை சிகிச்சை செலவு அதிகமாகும். ஆனால், 1994-ல் இந்தியாவில் ரூபின் ஷா எனும் மருத்துவர் இந்தச் சாதனத்தைத் தயாரித்தார். அது உள்நாட்டுச் சரக்கு என்பதால் விலை குறைவாக இருக்கிறது!

செக்ஸ் தொடர்பான எந்த பிரச்னைக்கும் தற்போது தீர்வு இருக்கிறது என்பதற்காகவே இந்தச் செய்தி!

நீ நிரூபித்த
பெண்மையில் இருந்து
வாய்த்தது
நான் மதிக்கும்
ஆண்மை!

- அறிவுமதி

 
டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!
-
டூயட் கிளினிக்: கவலைப்படாதே சகோதரா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism