Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

.

இன்பாக்ஸ்

கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவை அணிந்து வந்தார் தீபிகா படுகோன். 'உங்க ளுக்கு யாராவது புடவை கட்டிவிட்டார்களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்க, 'நான் புரஃபஷனல் மாடல். 30 விநாடிகளில் புடவை கட்டிக்கொள்வேன். இந்தியாவில் தினந்தோறும் புடவை கட்டுபவர்களாலேயே இது முடியாது' என்று சவால்விட்டிருக்கிறார் தீபிகா. அழகு!

'காவல்காரன்' ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக ஜெயம் ராஜா இயக்கத்தில் 'வேலாயுதம்' ஏந்துகிறார் விஜய். படத்துக்கு இசை, தேவிஸ்ரீ பிரசாத். ஹீரோ யின், இலியானா இல்லை என்றால் மீண்டும்... தமன்னா. பொம்மாய்ய்யீ!

இன்பாக்ஸ்

கேன்ஸ் படவிழாவில் 220 பவுண்டு எடைகொண்ட பாம்பைக் கழுத்தில்சுமந்துகொண்டு மல்லிகா ஷெராவத் கொடுத்த போஸ் உலகம் முழுக்க செம ஹிட். சமாளிக்கிறீங்களே அம்மணி!

32 நாள் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 100 சதவிகித அட்டென்டன்ஸ் அத்வானிக்குச் சொந்தம். ராகுல் 24 நாட்களும், சோனியா 20 நாட்களும் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தனர். அஞ்சா நெஞ்சரின் அட்டென்டன்ஸ் என்னவோ?

இன்பாக்ஸ்

ஐ.பி.எல். போட்டிகளின்போது தீபிகா படுகோன், கேத்ரீனா கைஃப், சமீரா ரெட்டி எனப் பல்வேறு நடிகைகளுடன் வலம் வந்த விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா, இப்போது எம். டி.வி. வி.ஜே. அனுஷ்காவைக் காதலித்து வருகிறார் என்பது பாலிவுட்டின் ஹாட் கிசுகிசு. அப்பா புள்ள!

இன்பாக்ஸ்

'இந்த முறை கால்பந்து உலகக் கோப்பையை வெல்லப்போவது ஜெர்மன்' என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிற நேரத்தில் செம சறுக்கல். ஜெர்மன் அணியின் கேப்டன் மைக்கேல் பல்லாக், காயம் காரணமாக அணியில் இருந்து விலகிவிட்டார். அடடா, அடிடா!

தன்னுடைய ரா-ஒன் படத்தில் ஜாக்கிசான் நடிக்கிறார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் ஷாரூக்கான். 'ஜாக்கிசானைப்போலவே மார்ஷியல் ஆர்ட்ஸில் புகழ்பெற்ற ஒரு கலைஞரை இந்தப் படத்தில் நடிக்கவைத்திருக்கிறேன். அந்த மகா கலைஞர் யார் என்பது மட்டும் சஸ்பென்ஸ்' என்கிறார் ஷாரூக். எல்லாமே ஸ்டன்ட்தான்!

கின்னஸ் சாதனைக்காக நீண்ட நேர மாரத்தான் கால்பந்து போட்டி சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றது. 35 மணி நேரம் அதாவது, ஒன்றரை நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் போடப்பட்ட மொத்த கோல்களின் எண்ணிக்கை 626. எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க!

இன்பாக்ஸ்

வழக்கமாக கோடை வெயிலுக்கு கோடம்பாக்க தேவதைகள் ஜில் தேசங்களுக்குப் பறந்துவிடுவார்கள். ஆனால், இந்த முறை அசின், தமன்னா, நயன்தாரா என எல்லோருக்கும் படப்பிடிப்பு இருப்பதால், சென்னையில் சம்மரைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார் கள். அழகைக் கொல்லுதே!

இன்பாக்ஸ்

பாலாவின் 'அவன் இவன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் சூர்யா. இரண்டு நாள் படப்பிடிப்புக்காக இப்போது பாலாவுடன் குற்றாலத்தில் இருக்கிறாராம். சபாஷ் பாலையா!

இன்பாக்ஸ்

புனித் - பார்வதிதான் இப்போது சாண்டல்வுட்டின் ஹாட் ஜோடி. தமிழில் 'பூ' படத்துக்குப் பிறகு தலைகாட்டாத பார்வதி, கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த 'ப்ருத்வி' சக்கைப்போடு போடுகிறதாம். சூப்பரப்பூ!

டிவிட்டர் இணையதளத்தில் இணைந்திருக்கிறார் சச்சின். ஷேவாக்குக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை டிவிட்டர் மூலம் உலகுக்குச் சொன்ன சச்சின், தொடர்ந்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும்படி டிவீட்டி வருகிறார். ஸ்வீட்டிண்டுல்கர்!

'கேபினெட் மீட்டிங் நடக்கும்போது எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள். ஆனால், வெளியே பத்திரிகையாளர்களைத் தனியாக அழைத்து மணிக்கணக்கில் பேசி பிரச்னை பண்ணு கிறீர்கள். தயவுசெய்து இனி எது பேசி னாலும் கேபினெட் மீட்டிங்கில் பேசுங்கள்' என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம் மன்மோகன் சிங். சொன்னாக் கேக்குறாகளா?

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism