Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

Published:Updated:

விகடன் வரவேற்பறை!
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
விகடன் வரவேற்பறை

என் பெயர் சிவப்பு -- ஓரான் பாமுக்

தமிழில்: ஜி.குப்புசாமி

பக்கம்: 664 = விலை ரூ.350

விகடன் வரவேற்பறை

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-1.
நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் புகழ்பெற்ற 'My Name is Red' நாவலின் தமிழாக்கம். நாவலின் இரு புள்ளிகளாக காதலும் குற்றமும் இடம் பெறுகின்றன. ஒரு புதிய கலையின் பக்கம் கலைஞர்கள் வசீகரிக்கப்படும்போது அவர்களுக்கு ஏற்படுகிற வளர்ச்சி, வீழ்ச்சிகள்பற்றிப் பதிவு செய்கிறது இந்த நூல். ஜி.குப்புசாமியின் தமிழ் மொழிபெயர்ப்பு கச்சிதம்!


கேபிள் சினிமா!

new.cablesankar.blogspot.com

விகடன் வரவேற்பறை

கேபிள்சங்கர் என்பவரின் இந்த வலைப்பதிவினை 'சினிமா ஸ்பெஷல்' எனலாம். பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெளியான மறுநாளே அதன் விமர்சனம் பதிவிடப்படுகிறது. ஆங்கிலம், ஹிந்தி சினிமாக்களும் இதில் அடக்கம். மாற்று முயற்சிகளாக மேற்கொள்ளப்படும் குறும்பட அறிமுகங்களும், சென்னை நகரின் விதவித ஹோட்டல்கள் குறித்த பகிர்தல்களும் தேர்ந்த ரசனை. 'சினிமா வியாபாரம்' என்ற கட்டுரைத் தொடர், சினிமா என்கிற பண்டம் உற்பத்தியானதில் இருந்து வெவ்வேறு மட்டங்களில் நடக்கும் வியாபார நுணுக்கங்கள் குறித்து விளக்குகிறது!


இது காதலா?

இயக்கம்: கே.விஸ்வநாதன்

விகடன் வரவேற்பறை

வெளியீடு: நாகம்மாள்பேட்டை, தொண்டாமாநத்தம் -607301, கடலூர் வட்டம்.
உறவுகளின் புனிதங்கள் பேசும் குறும்படம். காதல் குறித்து எவ்வளவோ காலமாக விவாதிக்கப் பட்டும் பேசப்பட்டும் வந்திருக்கிறது. அவ்வகையில், இயக்குநர் கே.விஸ்வநாதன் கூடா நட்புபற்றிச் சொல்ல முனைந்திருக்கிறார். சிக்கலான அந்தச் சவாலை மேற்கொண்டதற்கான பாராட்டுக்களுக்கு உரித்தாகிறார்!


திறமைக்கு மரியாதை! new.zooqoo.com

விகடன் வரவேற்பறை

உங்கள் திறமைக்கு ஏற்ற மேடை அமைத்துக்கொடுக்கும் தளம். புகைப்படம், அனிமேஷன், கட்டுரை, கவிதை என உங்களின் படைப்-புக்களை இதில் இணைத்துப் பாராட்டு வாங்கலாம். இசை, கவிதை, விளையாட்டு, ஸ்டேஜ் ஷோ, ஃபேஷன் டிசைனிங், கட்டடக் கலை எனப் பலதரப் பட்ட துறைகளில் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை, வீடியோ வடிவில் இங்கு அப்லோடு செய்தால், உங்கள் திறமைக்கு மதிப்பெண்கள் வழங்கி, விமர்சனமும் செய்கிறார்கள். அந்தத் துறையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், உங்களை இன்னும் எப்படி மேம்படுத்திக்கொள்வது என்று வகுப்பும் எடுக்கிறார்கள்!


சிங்கம்

இசை: தேவி ஸ்ரீபிரசாத்

வெளியீடு: சோனி மியூஸிக்

விலை: ரூ.99

விகடன் வரவேற்பறை

ஹீரோ தன் குணம் சொல்லி தன்னைத்தானே வாழ்த்திப் பாடிக்கொள்ளும் பாடல் 'நானே இந்திரன் நானே சந்திரன்'. இடையிடையே அம்மா சென்ட்டிமென்ட், திருநெல்வேலி புகழ் பாடும் வரிகளும் 'உள்ளேன் ஐயா'! 'என் இதயம் இதுவரை துடித்ததில்லை' பாடலில் சுசித்ராவின் குரலில் ஒளிந்துஇருக் கும் மைக்ரோ மெஸ்மரிசம் வசீகரம். 'ஒரு வார்த்தை மொழியாலே' ராக் கிடார் பின்னணியில் ஒரு காதல் பாடல். ஓ.கே! துள்ளல் இசை, குதூகல உற்சாகம் வழியும் பாடல் 'காதல் வந்தாலே'. பாடல்முழுக்க 'இடுப்பு கொண்டை ஊசி... சிரிப்பு விண்டோ ஏ.சி' என சின்னச் சின்ன ஜாலி கற்பனைகள். 'சிங்கம் சிங்கம்' பாடலில் 'திண்ணை தீண்டும் கதிரவன்... காட்டை எரிக்கும் நெருப்பு இவன்' என தமிழ் வரி எதுகை மோனை தாண்டி 'எவ்ரிபடி லிஷன்... ஹி இஸ் ஆன் எ மிஷன்' என ஆங்கில வரிகளிலும் புகுந்து புறப்படுகிறார்கள். சில பாடல்கள் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் ஆங்கிலப் பாடலாகவே ஒலிக்கிறது. சூர்யாவுக்கு இது 25-வது படமாம். ஆல் தி பெஸ்ட்!

 
விகடன் வரவேற்பறை
-
விகடன் வரவேற்பறை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism