Published:Updated:

ஐய்யோ... ஐ.பி.எல்!

ஐய்யோ... ஐ.பி.எல்!

ஐய்யோ... ஐ.பி.எல்!

ஐய்யோ... ஐ.பி.எல்!

Published:Updated:
ஐய்யோ... ஜ.பி.எல்!  
சார்லஸ்
ஐய்யோ... ஐ.பி.எல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐய்யோ... ஐ.பி.எல்!
ஐய்யோ... ஐ.பி.எல்!
.

ஐய்யோ... ஐ.பி.எல்!

இந்த ட்வென்டி-20 உலகக் கோப்பையில் ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் 50-50. எக்கச்சக்க பில்டப்போடு கிளம்புவதும், பின் கைப்புள்ள கணக்காக அடிவாங்கி வருவதும் இந்திய அணிக்குப் பழக்கமான விஷயம். இந்திய ரசிகர்களுக்கும் வழக்கமான விஷயம். இந்த முறையும் 'ஆஹா' என்று கிளம்பி, சூப்பர் 8 போட்டிகளிலேயே அடி வாங்கி 'ஐயோ' என்று திரும்பி வந்திருக்கிறது இந்திய அணி.

காரணகர்த்தா:

'உலகக் கோப்பை தோல்விக்கு ஐ.பி.எல். போட்டிகளின் பார்ட்டிகள்தான் காரணம்' என்று கேப்டனும், 'உடல் தகுதி இல்லாத வீரர்கள் அணியில் இருந்ததுதான் காரணம்' என்று பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனும் காரணம் சொல்கிறார்கள். தொடர்ந்து நடந்த ஐ.பி.எல். போட்டிகளும் பார்ட்டிகளும்தான் தோல்விக்குக் காரணம் என்றால், அதே போட்டிகள், அதே பார்ட்டிகள் என்று திரிந்த கெவின் பீட்டர்சன்தான் உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்லக் காரணமாக இருந்தார் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

சொதப்பல் டீம்:

தோல்விக்குப் பின்தான் 'சரியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை' என்பது டீம் பயிற்சியாளருக்குத் தெரிய வருமா? டீமில் சுரேஷ் ரெய்னா தவிர, பல பேருக்கு ஃபார்மே இல்லை. ஐ.பி.எல். போட்டிகளில் ஒன்றில்கூடச் சரியாக விளையாடாத யுவராஜ், 'காயம் காரணமாக என்னால் சரியாக விளையாட முடியவில்லை' என்று பலமுறை பேட்டிகளில் சொன்னார். அதற்கடுத்தும் உலகக் கோப்பை அணிப் பட்டியலில் இடம் பிடித்தது ஆச்சர்யம்தான். யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் அணியில் இடம்பிடிக்கிறார்கள். பிரக்யான் ஓஜா, மணிஷ் பாண்டே, ராபின் உத்தப்பா போன்ற ஃபார்மில் இருந்த இளம்வீரர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் மட்டுமே அறிந்த ரகசியம்!

ஐய்யோ... ஐ.பி.எல்!

ஐ(ய்யோ).பி.எல்.

ஐய்யோ... ஐ.பி.எல்!

ஐ.பி.எல்லில் 37 பந்துகளில் 100 ரன்களை அடித்த யூசுப் பதான், இரண்டு உலகக் கோப்பைகளை விளையாடி இப்போதுதான் மொத்தமாக 100 ரன்களைக் கடந்திருக்கிறார். தெரிகிறதா... ஐ.பி.எல்லுக்கும் சர்வதேசப் போட்டிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்? ஐ.பி.எல். போட்டிகள் என்பது உள்ளூர்ப் போட்டிகள் போன்றது. உள்ளூர் பிட்ச்களில் செஞ்சுரிகளை விளாசுவதும், பந்துகளை சிக்ஸர்களுக்குத் துரத்துவதும் சாதாரணமானது என்பதை வீரர்கள் உணர வேண்டும். சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்றவாறு வீரர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்!

பவுன்சர் மேல் பவுன்சர்!

வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போகும்போது எல்லாம் இந்தியாவின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்படுவது... பவுன்சர்கள். 2007-ல் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா அடி வாங்கி அழுதுகொண்டே வந்ததும் இதே பவுன்சர்களினால்தான். உடனே, 'இந்தியாவில் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவு மாதிரி பவுன்சிங் பிட்ச்சுகள் ஏற்படுத்தப்படும்' என்று அறிக்கைவிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. மீண்டும் அதே பிரச்னையைக் கை காட்டினால் வேறு என்ன சொல்வது? 'திரும்பத் திரும்பப் பேசுற நீ!'

ஐய்யோ... ஐ.பி.எல்!

டூ மச் கிரிக்கெட்!

இந்திய அணியின் தோல்விகளுக்கு இன்னொரு முக்கியக் காரணம், அதிகப்படியான போட்டிகள். கிட்டத்தட்ட வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்கள். ஓய்வின்மை, விளையாட்டுத் திறனைப் பாதிக்கும் என்பதுகூடவா கிரிக்கெட் வாரியத்துக்குத் தெரியாது? பணத்துக்காக இயந்திரமாக மாறி வேலை செய்யும் ஊழியர்கள்போல இந்திய அணி வீரர்கள் மாறுவதற்கு முன் கண் விழிப்பது அவசியம்.

'ஆசிரியர்கள் எப்போதுமே தேர்வுகளை எழுதுவது இல்லை. மாணவர்கள்தான் தேர்வுகளை எழுத வேண்டும்' என்பதுதான் விளையாட்டுக்கும் விதி. இதை மனதில்வைத்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்காவது ஒரு சிறந்த அணியைத் தயார் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

செய்வீங்களா பாஸூ?

 
ஐய்யோ... ஐ.பி.எல்!
ஐய்யோ... ஐ.பி.எல்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism