Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்!  
நாடோடி மன்னன் கார்ல் மார்க்ஸ்
நானே கேள்வி... நானே பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
.

''காதல் கவிதைகள் சுவைப்பது உண்டா?''

''ஆஹா... பேஷாக! சிதம்பரநாதன் என்னும் கவிஞரின் 'அரண்மனைத் திராட்சைகள்' கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கொத்து...

'நான் என்ன ஷாஜகானா?

ஏழைக் கவிஞன்.

என்னால் உன்னை

எழுத்துக்குள்தான்

புதைக்க முடியும்!' ''

- டி.எஸ்.பாலு, சென்னை-73.

நானே கேள்வி... நானே பதில்!

''சமீபத்தில் ரசித்த காமெடி?''

''குஷ்பு தி.மு.க-வில் இணைந்தபோது கருணாநிதி கூறியது, 'குஷ்பு ஒரு முற்போக்காளர் என்பது எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். குறிப்பாக, 'பெரியார்' படத்தில் மணியம்மையார் வேடத்தில் நடித்தபோது அவரால் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததால்தான் இயற்கையாக நடிக்க முடிந்தது!' பெரியாரின் முதல் மனைவியான நாகம்மையார் வேடம் தாங்கி நடித்தவர் நடிகை ஜோதிர்மயி. வைக்கம் போராட்டம், கள்ளுக்கடை மறியல் போராட்டம் ஆகியவற்றில் நாகம்மையாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஜோதிர்மயியும் முற்போக்கானவரா என்பது அவர் தி.மு.க-வில் சேரும்போதுதான் தெரியும்!''

- எம்.மலர், தேனி.

''லேட்டஸ்ட்டாக அதிரவைத்த சம்பவம்?''

''மங்களூர் பஃப்பில் நுழைந்து பெண்களைத் தாக்கியது, காதலர் தினத்தன்று காதலர்களைத் தாக்கியது, அதன் பதிலடியாக காதலர் தினத்தை ஆதரிப்பவர்களால் பிங்க் நிற உள்ளாடைகள் அனுப்பப்பட்டது ஆகியவற்றால் 'புகழ்'பெற்றதுதான் ஸ்ரீராம்சேனா என்ற அமைப்பும் அதன் தலைவர் முத்தலிக்கும். அடிக்கடி கலவரங்களைத் தூண்டிவிடும் முத்தலிக்கைத் தெஹல்கா இதழின் நிருபர் ஒருவர் சந்தித்து இருக் கிறார். தன்னை 'ஓவியர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தான் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தப்போவதாகவும், அங்கு கலவரம் செய்து தன்னைப் பிரபலப்படுத்தும்படியும் கேட்டுக் கொண்டார். முஸ்லிம்கள் இருக்கும் பகுதியில் கண் காட்சி நடத்துமாறும் கலவரம் செய்ய 60 லட்சம் ரூபாய் கட்டணம் என்றும் விலை நிர்ணயித்து இருக்கிறார் முத்தலிக். அண்டைநாட்டுத் தீவிரவாதி களைக் காட்டிலும், இதுபோன்ற அக்கம்பக்க பயங்கரவாதிகள் ஆபத்தானவர்கள்!''

- கா.சரண், திருப்பூர்.

''ஓப்பனிங் ஸ்பீச் என்றால்?''

''முதலில் பேசுவதுதான் ஓப்பனிங் ஸ்பீச் என்று நினைக்கிறார்கள். ஆனால், வந்திருப்பவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதை மக்களுக்குச் சுருக்க மாகச் சொல்வதுதான் ஓப்பனிங் ஸ்பீச். உதாரணத் துக்கு, ஆசிரியர் தின விழா ஒன்றில் வெ.இறையன்பு பேசியது, 'இந்த உலகத்தில் புனிதமான வேலைகளைச் செய்பவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர், மருத்துவர். இன்னொருவர், ஆசிரியர். மருத்துவர்கள் மனிதனைப் பிணமாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள், மனிதனை நடைப்பிணம் ஆகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்!'''

- இரா.மன்னர்மன்னன்

'''சினிமாவில் மெசேஜ் சொன்னால் எடுபடாது' என்று சிலர் சொல்கிறார்களே?''

''அவர்களின் கவனத்துக்காக ஒரு தகவல். 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிவிப்பாக வருபவையில் பெரும்பாலானவை கார்ல் மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் இணைந்து எழுதிய 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யில் இருந்து எடுக்கப்பட்டவை!''

- சந்திரா பாலா, நாமக்கல்.

நானே கேள்வி... நானே பதில்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism