Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

Published:Updated:
5 கேள்விகள்  
5 கேள்விகள்
5 கேள்விகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5 கேள்விகள்

குமரி அனந்தனிடம்...

''அரசே விதவிதமான மதுபானங்களை விற்கும்போது, கள் இறக்குவதற்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?''

''இந்தியா விடுதலை பெற நடைபெற்ற போராட்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டமும் ஒன்று. காமராஜர், அண்ணா போன்றவர்கள் மது விற்காமலேயே ஆட்சியைச் சிறப்பாக நடத்தினார்கள். அரசு மதுபானம் விற்பதும் தவறு. இதைத்தான் 'கள் இறக்கவும் வேண்டாம்; கள்ளால் இறக்கவும் வேண்டாம்' என்று கூறியிருந்தேன்!''

ஜெயகுமாரிடம்...

''அ.தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படாததே தற்போது தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்கிறாரே துரைமுருகன்?''

''1991-96ல் கூடுதலாக 1,300 மெகா வாட்டும், 2001-2006ல் கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரத்தையும் மொத்த உற்பத்தியில் அம்மா முதல்வராக இருந்த போது சேர்த்தார்கள். அம்மாவின் ஆட்சியில், வட சென்னை அனல் மின் நிலையத்திலும், தூத்துக்குடியிலும் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அதைத் தொடர்ந்து செயல்படுத்தவில்லை. உருப் படியாக எதுவும் செய்யத் தெரியாத இவர்களுக்கு அம்மாவைப்பற்றி குறை சொல்ல எந்த உரிமையும் இல்லை!''

பாலபாரதி எம்.எல்.ஏ-விடம்...

''எம்.எல்.ஏ-க்களுக்கு வீடு கட்ட 50 ஏக்கர் நிலம் ஒதுக்குவதை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பது ஏன்?''

''வீடு இல்லாத எம்.எல்ஏ-க்களுக் குக்கூட நிலம் கொடுக்கலாம். இப்போது எந்த எம்.எல்.ஏ-வுக்குச் சொந்த வீடு இல்லா மல் இருக்கிறது? நிறைய எம்.எல்ஏ-க்கள் பல வீடு உள்ளவர்களாக உள்ளனர். இதுகூட அரசுக்குத் தெரியாதா? இந்தக் கோரிக்கை காங்கிரஸ் கட்சிவைத்தது. காங்கிரஸின் தேவையை நிறைவேற்றுவதைத்தான் தி.மு.க. தன் முதல் கடமையாக வைத்துள்ளது. இது அநியாயம்!''

தஞ்சை கலெக்டர் சண்முகத்திடம்...

''தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நிறுவப்பட்டுள்ள முத்துக்குமாரின் சிலையைத் திறக்க அனுமதி மறுத்தது ஏன்?''

''பொதுவாக, ஒரு சிலை நிறுவப்பட அனுமதி கேட்டுத் தரப்படும் விண்ணப்பத்துடன் இட உரிமையாளரின் தடையில்லாச் சான்று, சிலை உள்ள இடம் கிராமச் சாலையா, நெடுஞ்சாலையா என்ற விவரத்துடன் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதிச் சான்று, வருவாய்த் துறையினரின் ஒப்புதல் சான்று போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும். ஆனால், சிலை திறப்புக் குழுவினர் எந்தச் சான்றிதழையும் தரவில்லை!''

5 கேள்விகள்

நமீதாவிடம்...

''ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காததால்தான் 'இளைஞன்' படத்தில் வில்லியாக நடிப்பதாகக் கூறுகிறார்களே?''

''இது முதல்வர் கலைஞரின் எழுத்தில் உருவாகும் படம் என்பதால் நெகட்டிவ் கேரக்டரை ஏற்றுக்கொண்டேன். ஆனால், ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் கிளாமர் நிறையவே படத்தில் உண்டு!''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism