பிரீமியம் ஸ்டோரி
ரைட்டர், படங்கள்: கே.ராஜசேகரன், வி.செந்தில்குமார்
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
 
நோட்டீஸ் போர்டு!

தியாகுவின் கேள்வி!

''நளினியை விடுதலை செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பிரமுகர்கள் கையெழுத்துப் போட்டு அறிக்கை வெளியிட்டார்கள். அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பும் கடமையும் எல்லோரையும்விட இந்த 500 பேருக்குத்தான் அதிகம் இருக்கிறது. அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்!''
- நளினி விடுதலையை வலியுறுத்தும் கூட்டத்தில் தியாகு.


பறக்கும் பாலம்!

நோட்டீஸ் போர்டு!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த திவாகர், தாம்பரத்துக்கு தனது பாட்டியைப் பார்க்கப் போனார். அவரை நலம் விசாரித்துவிட்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விண்ணப்பம் வாங்கிக்கொண்டு வியாசர்பாடி திரும்பினார். வரும் வழியில் செம டிராஃபிக். பக்கத்தில் தெரிந்தது ஒரு பாலம். சீக்கிரமாகச் செல்லலாமே என திவாகர் காரை பாலத்தில் செலுத்தினார். பாதி தூரத்தைக் கடந்து செல்கையில்.... எதிரே பாலத்தைக் காணவில்லை. பிரேக் அடித்தார். ஆனால் லேட்.... கார் அந்தரத்தில் பாய்ந்து 50 அடி பள்ளத்தில் ரயில் தண்டவாளத்தின் மேல் விழுந்து அப்பளமாக நொறுங்கியது. காருக்குள்ளே கிடந்த திவாகருக்குக் கடுமையான காயம். கால் முறிந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஒருவேளை பைக்கில் போயிருந்தால், உடலே சிதறி இருக்கும்.

அந்தப் பாலத்தைப் பார்த்தால் பதறிப்போவோம். இரண்டு பக்கமும் சாலையில் இருந்து தொடங்கும் பாலம் மேலே வந்தால் இணைப்பு இல்லாமல் மொட்டையாக நிற்கிறது.

நெடுஞ்சாலைத் துறை பாலங்கள் கட்டுகின்றன. கீழே ரயில் பாதை இருப்பதால், அதற்கு மேலே உள்ள பகுதியை மட்டும் மத்திய ரயில்வே துறை கட்டித்தர வேண்டும். ஆனால், அவர்கள் இந்தத் திட்டப் பணிக்கு பணம் ஒதுக்காததால் பாலம் இன்னமும் கட்டவில்லை. நம்முடைய நெடுஞ்சாலைத் துறை தனது கடமையை முடித்துவிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சிதானே இருக்கிறது!


கிளவ்டி!

நோட்டீஸ் போர்டு!

அழகிரி மகன் தயாநிதியை நெருங்கிய நண்பர்கள் தயா என்பார்கள். சிலர் துரை என்பார்கள். ஆனால், இப்போது அவர், 'கிளவ்டின்னு என்னைக் கூப்பிடுங்க' என்று நண்பர்களுக்கு அன்பான உத்தரவு போட்டுஇருக்கிறார். தயாநிதி நடத்தி வரும் சினிமா கம்பெனியின் பெயர் கிளவ்டு நயன்!


ரம்பாவின் 10 மார்க் பதில்!

தனக்குத் திருமணம் என்ற தகவலை நிருபர்களுக்குச் சொல்ல பிரஸ்மீட் வைத்தார் ரம்பா. ''கல்யாணம் ஆனதுமே குழந்தை பெத்துப்பீங்களா மேடம்?'' என்று ஒரு முக்கியமான கேள்வி வந்ததும், வெட்கத்தில் கன்னம் சிவந்த ரம்பா சொன்ன பதில், ''எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க!''


நவீன மாமல்லர்கள்!

நோட்டீஸ் போர்டு!

மாமல்லபுரத்தில் புதிதாக 18 சிலைகள் முளைத்துள்ளன. செம்மொழிச் சிற்பப் பூங்காவாக சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், காப்பிய நாயகியான கண்ணகி தொடங்கி ஒளவை வரை, வீரம் சொல்லும் வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் புலியை முறத்தால் விரட்டும் வீரப் பெண் வரை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்பரும் திருஞான சம்பந்தரும் இருக்கிறார்கள். பாரதியும் இருக்கிறார். இந்தப் பூங்காவில் நுழைபவர்களை வள்ளுவர் வரவேற்கிறார்!

 
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு